” நான் என்னை விரும்புகிறேன்”, “என் கறுப்பு நிறத் தோலை விரும்புகிறேன்” – நயாகிம்
தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த 24 வயதான நயாகிம் காட்வெச் எத்தியோப்பியாவிலும் கென்யாவிலும் அகதிகள் முகாமில் தனது வாழ்க்கையை வாழ்ந்து பல இன்னல்களை சந்தித்து தனது 2 சகோதரிகளை இழந்து பின் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து அமெரிக்காவில் கல்வியை தொடர சென்ற போது தான் அங்குள்ள நிறவாதம் இவளையும் தாக்கியுள்ளது. பாகுபாடு காட்டுவதும் இவளை பார்த்து பலர் கேலி கிண்டல் செய்தும் வித்தியாசமாகவும் பார்த்துள்ளனர் ஆனாலும் அவள் அதை பொருட்படுத்தாது யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை,” நான் என்னை விரும்புகிறேன்”, “என் கறுப்பு நிறத் தோலை விரும்புகிறேன்” என்று தனது தன்னம்பிக்கையுடன் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையைத் தேர்வு செய்து தற்போதுஅந்த கறுப்பு நிறத்தைக் கொண்டவள் அனைத்து மாடல்களுக்கும் சவாலான போட்டியாளராக வலம் வருகிறாள் நயாகிம். இவளின் நேர்மையான கருத்துக்கு இவளின் ரசிகர்கள் கறுப்பரசி (கறுப்பு ராணி) QUEEN OF THE DARK பட்டப்பெயர் வைத்திருக்கிறார்கள்.
thanks :- Think Change India