-கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின்
நான் இன்னும் 16 ஆண்டு உண்ணாவிரதம் இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை,
மணிப்பூரில், ஆயுதப்படை சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடம் உண்ணாவிரதமிருந்து உலகம் முழுவதும் பேசப்பட்டவர் இரோம் ஷர்மிலா. ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தை (யுகுளுPயு) நீக்கும் வரை சாப்பிடவும்இ குடிக்கவும், தன்னை அலங்கரித்துக்கொள்ளவும் போவதில்லை என்று தனி மனுஷியாக போராடிய இரோம் ஷர்மிலா கடந்த வருடம் ஆகஸ்டில் தனது போராட்டத்தை முடித்தார். போராட்டத்தை முடித்து ஓராண்டு கழித்துஇ இந்த 16 வருடத்தில், இரோம் பல முறை கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டார்.
மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிலா, கொடைக்கானலில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் தனது திருமணத்தை பதிவு செய்துள்ளார். தன்னுடைய நீண்ட கால நண்பரான, பிரிடிஷ் நாட்டைச் சேர்ந்த தேஷ்மந்த் கொடின்கொவை அவர் திருமணம்செய்துள்ளதாக தகவல்கள்
தனது இளமை வாழ்கையை மணிப்பூர் மக்களுக்காக அற்பனித்த அவருக்குக் கிடைத்தது வெறும் 90 வாக்குகள் மட்டுமே. இதனால் விரக்தி அடைந்த இரோம் மணிப்பூரை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் கொடைக்கானல் மலையில் வந்து தங்கினார். தற்போது அங்கேயே திருமணம் செய்து, தன் கணவர் தேஷ்மந்த் கொடின்கொவுடன் சாதாரண வாழ்கையை வாழவும் முடிவு செய்துள்ளார். தேஷ்மந்த் கொடின்கொ கொடைக்கானலில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இரோம் சர்மிளா தனக்கு கொடைக்கானலில் அமைதி கிடைப்பதாகவும்இ தான் இங்கு சுதந்திரமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தேவை இருந்தால் பொது நலத்துக்காக குரல் கொடுப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.