மலம் அள்ளும் இந்தியாவின் குழந்தைகள்

மாலதிமைத்ரி    –இன்றைய தமிழ் தி இந்துவில்…malathy 1

th th1 th3

 

 

 

 

 

 

எங்கள் தெரு ஒரு முட்டுச்சந்து. தெருவின் முடிவில் சினிமாக் கொட்டகையின் பெரிய மதில்அடைத்திருக்கும். வர்ணாரஸ் மத்தின் விளிம்பு நிலை மனிதர்களான  மீனவர்கள், சலவையாளர்கள், நாவிதர்களுக்கு ஒதுக்கப்பட்ட தெரு. கருவாட்டுக்கு காயும் மீன்கள், வலைகள், சோடாக்காரத்துடன் உலரும் அழுக்குத்துணிகள், வெள்ளாவி அடுப்பு, கழுதைகள், வாத்திமாரின் சாதியப் பிரம்புக்கு பயந்துக் பள்ளிக்கு முழுக்குப் போட்ட சிறுவர்கள், வீட்டுவேலையும் தம்பி தங்கச்சியையும்  கவனிக்ககல் விமறுக்கப்பட்ட சிறுமிகள், தியேட்டர்காரன் கொட்டிய குப்பைமலை அதில் மேயும் பன்றிகளென வித்தியாசமான கலகலப்பானதெரு. ஊர்க்காரர்கள் தேவைகளை ஒட்டித் தெருவுக்குள் நுழைவார்கள்.அதற்குள் ஆயிரம் முறை நாறுது  நாறுதென சாதிக் கௌரவத்துக்குச் செண்டு அடித்துக்கொள்வார்கள்.

எழுபதுகளில் கிராமத்தில் நவீனக் கழிப்பறைகள் கிடையாது. கொஞ்சம் வசதியானவர்கள் வீடுகளில்,  தோட்டத்தின் கடைசி மூலையில் பெரியபள்ளம் தோண்டி குறுக்கே பனையை பிளந்துப் போட்டு கீற்றால் கழிப்பறையாக தடுத்திருப்பார்கள். ஆற்றங்கரை சவுக்குத் தோப்பு வயல் வெளிகள் தான் சகலருக்கும்  பீக்காடு. பள்ளிகள், அரசு அலுவலகங்கள், சினிமா கொட்டகையில் நவீன கழிப்பறைகள் இருந்தன.

கக்கூஸைச் சுத்தப்படுத்த ஒரு சமூகம் வாழ்வதே ருக்மணி ஆயாவால் தான் தெரிய வந்தது. என் ஆயாவிடம் ஒருவாய் வெற்றிலைக் கேட்டோ குழம்புக்கு கருவாடு வாங்கவோ அடிக்கடி ருக்மணி ஆயா மதில் கேட்டைத் திறந்துக் கொண்டு வருவார். அந்தக் கேட்டைத் திறந்து இரவில் திருட்டுப் படம் பார்க்க எங்க  தெருச் சிறுவர்களை அனுமதிப்பதும் உண்டு.  இரண்டாவது மணி அடித்து டிக்கட் கிழிப்பவர் போன பிறகு. அந்தப்  படங்களுக்கு 12 ரீல்கள்தான். ஏணிப்படிகள், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ஆயிரம் ஜென்மங்களை ஒரு ஆறேழு முறைப்பார்த்திருப்பேன். 

ஊரின் தீண்டத்தகாத காலனியிலிருந்து வரும் ருக்மணிஆயாஇந்த இழி தொழிலைக் காலை பத்துமணிக்குஆரம்பிப்பார்.அரங்கைகூட்டிப்பெருக்கி, பெண்கள்ஆண்கள்கக்கூஸில் நிரம்பி வழியும் மலத்தையெல்லாம் வாரியெடுத்து கழுவிப்ளீச்சிங் பவுடர் தெளித்து, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி அன்றைய காட்சிக்குத் தயார்படுத்துவார். 

பெண்கள் கக்கூஸில் மேற்கு பக்கம் இரண்டு நவீனக் கழிப்பறையும் ஒருதண்ணீர் தொட்டியும் இருக்கும்.  தொட்டியை ஒட்டி மூன்றடி வாசலுடன் மதிலெழுப்பி மூன்று புறமும் சிறு நீர்கழிக்க வாய்க்காலுடன் கூடிய நீண் டபவடி வ படியிருக்கும். சனங்கள் குழந்தைகளை வழியெல்லாம் மலமிருக்க வைத்து நாறடித்துவிடுவார்கள். இருட்டில் கக்கூஸ்அறைக்குள் போகப்பயந்த பெண்கள் பெரும்பாலும் சிறுநீர்கழிக்கும் படியிலேயே மலம் கழித்திருப்பார்கள். “பேளறத்துக்குன்னே சினிமாவுக்கு வராளுங்க.” இன்னும் அசிங்கமாகத்  திட்டிக்கொண்டே  கழுவி எடுப்பார். நல்லநாள் கெட்ட நாள்விடுமுறை இல்லாமல் வருடத்துக்கு 365  நாட்களும் மலம் வாரிக்கொடுவதுதான் பாரத மாதா தன் மகளுக்கு இட்ட பணி. முக்கியத்தலைவர் இறப்பு, பந்த் நடந்தால் அன்றைய இழிவிலிருந்து ஒருநாள் விடுதலை.

இவர், இவரின் பிள்ளைகள், உறவினர்,  அவர்களின் பிள்ளைகள் யாரும் பள்ளிக்கு சென்றதில்லை. மீனவக் குழந்தைகளையே கவிச்சடிக்கிறதென வகுப்புகளிலிருந்து விரட்டியடித்த சாதியவாத்தியார்கள் மலம் அள்ளும் தோட்டியின் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தின் வாசலைக்கூட அப்போது மிதிக்கவிடுவதில்லை. அந்தகிராமத்தில் சலவையாளர், மீனவர், நாவிதர் அப்போது ஒரு 50 குடும்பம் இருந்தோம். குடும்பத்துக்கு தலா ஐந்தாறு பிள்ளைகள். எண்பதுகளில் தட்டுத்தடுமாறி பள்ளி  இறுதிவரை முடித்தவர்கள்  இரண்டு ஆண்கள்,ஐந்து பெண்கள். அதில் ஒருத்திநான்.

இருபது வருடம் கழித்து மீண்டும் சொந்ததெருவுக்குத் திரும்பிவீடு கட்டி வசிக்கத் தொடங்கினேன். 90 சதவீத குடும்பத்தினர் குலத்தொழிலிருந்து வெளியேறியிருந்தனர்.ஆதிக்கச் சாதியர் அங்கிருந்தவர்களைத் துரத்திவிட்டு பாதிவீதியை ஆக்ரமித்திருந்தார்கள். குடிசைகள்ஒழிந்து தெருவின் அடையாளம் மாறியிருந்தது. இடம்பெயர்ந்துபோனவர்கள் வறுமையிலிருந்தாலும் தங்கள் பிள்ளைகளைப்படிக்க வைக்கிறார்கள். இந்த முட்டுச்சந்தில் பிறந்த ஒருவன் அமெரிக்காவில் பொறியாளராக வேலைசெய்கிறான். ஒருத்தி பாரீஸில் படிக்கிறாள், அய்ந்தாறு பேர் அரசு வேலையில் இருக்கிறார்கள். இதுஅண்ணல்அம்பேத்கர் நூற்றாண்டுக்குப்பின் உருவானமாற்றம். தலித் மக்களிடம் பற்றிய சமூக அரசியல் எழுச்சிபின் தங்கிய விளிம்பு நிலை சமூகத்திடமும் சமூகநீதி நெருப்பைத் தூவிசென்றதன் விளைவு.

எதிர்வீட்டில் செப்டிக்டாங்க் அடைத்துக் கொண்டது. சின்டக்‌ஸ்டாங்க் பொருத்திய மீன்பாடி வண்டியில் மூன்று பேர்வந்தனர்,அதிலொருவர் இளைஞன். செப்டிக்டேங்கைத் திறந்துவிசை பைப்பைச் சொருகி மலக்கழிவுகளை உறிஞ்சி சின்டக்ஸ் தொட்டிக்குள் நிரப்பினார்கள். வாசலிலிருந்த குழாயில் கைகால் கழுவும் போது கேட்டேன் ஏன் தம்பி நீங்களும் இந்த வேலைக்கு வந்தீங்க கொஞ்சமாவது படிச்சிருந்தா வேறவேலைக்கு போயிருக்கலாமில்ல. பிஏ வரலாறு முடிச்சிருக்கேன்கா. கவர்மெண்ட் எங்கவேலகொடுக்கறான், தந்தாலும் இதே பீ வாரும் வேல. நிரந்தரமில்லைகாண்ட்ரெக்ட்தான். தள்ளுவண்டிசோத்துக்கடையில்கூடவேலைக்கொடுக்கமாட்டாறாங்க. தெரிஞ்ச தொழிலுதான் சோறுபோடுதுக்கா. பேரென்னப்பா யார் வீடுதம்பி. இந்த தியேட்டர்ல வேலசெஞ்சாங்களே ருக்மணி அவுங்க பேரன், பேரு ராமன்க்கா.

இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்பவர்களைச் சமூகநீதியும் சமத்துவமும்  பேணமலம் அள்ள அழைக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக ஒருநூற்றாண்டுக்கு அரசுபணி அனைத்தையும் விட்டுவெளியேறுங்கள். ஒரு சமூகத்தையே தலைமுறைத் தலை முறையாக தீண்டத்தகாதவர்களாக்கி மலக்குழிக்குள் தள்ளிக் கொன்று நீங்கள்அனுபவித்தது போதும். சுதந்திர இந்தியாவின் அரசின் கணக்கின்படி 2011-ல்7.94.000 குழந்தைகள் மலம் அள்ளும் இழித்தொழிலுக்குள், சமூக ஆய்வாளர்கள் 10.50,000 என்கின்றனர். ஆண்டசாதிகள் அரசுகொடுக்கும் பிச்சைகாசில் உடல்வளர்ப்பது உங்கள் குலகௌரவத்துக்கு இழுக்கல்லவா?

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *