தேவா யூன்2017-ஜெர்மனி
இலங்கையின் சிறீபாதமலைக்கு எல்லா பருவகாலத்திலும் (மழைகாலத்தைதவிர) பக்தியானமக்கள் வெள்ளம் திரளுகிறது. கிறித்துவரின் தோமசு குரவானவரின்- -இசுலாமியரின் ஆதாமின்- புத்தரின்-சிவனின் பாதச்சுவடு மலைஉச்சியில் அழுந்தியிருப்பதாக உணர்வை மதங்கள் மக்கள் மனதில் விதைத்திருப்பதால் செங்குத்தான படிகளை எப்பாடு பட்டாவது தாண்டிவிட பக்திமனம் தூண்டுகிறது.நிலமட்டத்திலிருந்து1000மீ.க்கு மேலிருக்கும் மலைமுகட்டில் பிள்ளையாரும்கூட அருள்பாலிக்க காத்திருக்கிறார். ஓரு 20 வருடங்களுக்கு முன்னே முக்கி-முனகி, அழுது முடியாவிட்டாலும், இறைபாதடி சேவிக்க உச்சிவரை சேர்ந்தோர் பக்திகூட்டம் வயதுஎல்லைகளை மீறி,முடியாதோருக்கு முடிந்தவரை கைகொடுத்தது. இப்போது அவைகளை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்போது, மனசிலே பலவாறும் நெருடல்கள் வருவதை தவிர்க்கமுடியாது. மற்றவரை இடித்து மோதி, மிதித்து எப்படியாவது இறைபாதம் தொட்டுவிட துடிக்கும் பக்திவெள்ளம்,ஆதவனின் உதயத்தில் இறைவனை கண்டுவிடவும் கைத்தொலைபேசிக்குள் சுhரியனை பொத்திக்கொள்ளவும் துடிக்கும் கூட்டம்தான் இப்போது ஊதிப்பெருத்திருக்கிறது. 21ம்நூற்றாண்டின் நுகர்வுகலாச்சாரம் சமூகத்தின் எல்லாதுறைகளிலும் ஊடுருவியிருப்பது. அது இறை-பக்திக்குள்ளும் நுழைந்திருப்பதொன்றும் அதிசயமானதல்ல.
முன்பு ,,அரோகராவும்,அரிகொராவும் என வாலிபகுரல்கள் ஒலித்தன. இப்போது வெள்ளைஆடை உடுத்த குழுக்கள்(இள-முதுவயது பெண்கள்) பக்திபாடல்களை பாடியபடி ஏறுபடிகளின்மேலே காலைதூக்கிவைக்கும்போது உண்டாகும் வலியை மறக்க முயற்சி செய்கிறார்கள்பலமணிநேரமாக உடலை வருத்தி, குளிரில் நடுங்கி;உச்சிக்கு வந்து சேர்ந்தால் ஒரு சில நிமிடங்களே கடவுளின் பாதம் கும்பிட வாய்ப்பு உண்டு.ஆக அடிவாரத்திலிருந்து கடவுளை நினைத்துக்கொண்டே பலமணிநேரங்களில் ஏறிவிடவேண்டும். வழிநெடுக இறைவனை பக்தர்கள் தொழுதுவிடுவது சாதுக்களுக்கு நன்கு புலனான சங்கதி! ஆகையால் புனிதபாதத்தை நெருங்கியதும்,அதன்கீழ் அழுது,வீழ்ந்து,தொழுதிட முனையும் பக்தர்களை சாதுக்கள் விரட்டிக்கொண்டே இருக்க மும்மரமாயிருக்கிறார்கள்!
இந்து,பௌத்த, கிறித்துவ,இசுலாம் மதங்களின் சங்கமமாக ,,சிறீபாதா,, இருப்பதாக இலங்கையில் பெருமையாக பேசப்படுகிறது.ஆனால் யாத்திரீ;களில் 90 சதவீதம் பௌத்தர்கள்.பலகாலத்துக்கு முன் இந்துஅர்ச்சகரும் அங்கு புhiஐ செய்தாராம்.கிறித்துவ,இசுலாம் மதத்துக்கு அங்கே முன்னரும் பங்கு இருந்ததா என்று தெரியவில்லை.இன்றைய நோக்கில்;, மக்களிடையே பெருகிக்கொண்டே போகும் பக்தி என்கிற இந்தப்புதியபாணி, போக்குவரத்துவசதிகள் மிகுந்துவிட்டதாலா அல்லது பொருளாதாரவாய்ப்புகள் ஓரளவு அமைந்துவிட்டதாலா அல்லது புனிதஇடங்களுக்கு போவது ஒரு நவீனநாகரீகமான பயணமாய் கருதப்படுவதாலா என்பது பிடிபடாமல் இருக்கிறது.
மசுக்கெலியா நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கும் „நல்லதண்ணீர்;“ கிராமம் மலைக்கு ஏறவரும் பக்திவெள்ளத்தால் புத்துயிர் பெற்று, ஒரு பிசினெசு பிரதேசமாக மாறிவிட்டது. பெரீயவசுக்கள்;, ஆடம்பரகார்கள்,வேன்கள்,டுக்டுக்குகள் „நல்லதண்ணீர்;“ கிராமத்துக்குள்ளே வாரநாட்களிலே கூட நுழையமுடியாதபடி 2கி.மீ.முன்னதாகவே நிறுத்துமாறு போக்குவரத்துகாவல்துறை கட்டுப்பாடு விதிக்கிறது. ஆண்கள்,பெண்களுக்கென தனித்தனியாய் சுடுநீர்குளியல்,உடைமாற்று வசதிகள் செய்யப்பட்டுள்ளன.மாணிக்ககங்கையிலே எல்லாக் கழிவுகளும் தள்ளப்படுகிறது. சுhழலின் அசுத்தம் வெளிப்படையாகவே ஒரு மலைமாதிரி நம்முன்னால் குறுக்கே மலைத்து நிற்கிறது.தாய்நாட்டிலே „சனம் பெருகிவிட்டது“அதனால்தான் இப்படியான நெருக்கடிநிலைமை உண்டானது என்கிற வாதம் நம்பகூடியதாக இல்லை.போரினால் இழக்கப்பட்டோரின்-இயற்கைஅனர்த்தத்தால்-தொற்றுநோய்களால் இறந்தோரின் தொகையும் ஒரு சிறிய தீவுக்கு மிக அதிகமே. பிறப்புவிகிதத்தை கெட்டியாக கடைப்பிடிக்கும் மக்களுள்ள எங்கள் நாட்டில் இறப்புவிகிததும் கூடத்தான். புலம்பெயர்ந்தோரும்,அவர்கள் பரம்பரையும் தாய்நாட்டுக்கு திரும்பி போய்வாழும் நிலைமையும் இருக்கிறதா!வெளிநாடுகளில் வேலைக்கு போயிருப்போர் தொகையையும் கணக்கில் எடுத்தால் „சனத்தொகை கூடிவிட்டது“ கருத்தை பொதுசனத்தொகை கணக்கெடுப்பின் பின்னரே கூறமுடியும்
ஆக ஒன்றுமட்டும் தெளிவாகிறது. பயணங்கள் இன்று நம் மக்களுக்கு மிக பிடித்துப்போன விடயமாகியிருக்கிறது. ஆனாலும் புண்ணியதலங்களுக்கு- கோயில்குளத்துக்கு போவதென்பது ஆசியபண்பாடாய் இன்னும் வாழ்வதே அதன் மூலம்.மேலும் இந்தியா-சீனா-யப்பானின் யாத்திரீக பயணமும் திருமணஆடம்பரம் போல ஒரு கவர்ச்சி;யாக இலங்கையிலும் ஆகிவிட்டது.
பிழைப்புவாய்ப்புக்கள் மலை ஏற வரும் பக்தர்கூட்டத்தால் சாப்பாட்டு-கோப்பி,தேநீர-;இனிப்பு-குளிருடுப்பு-குழந்தைவிளையாட்டுசாமான்-மளிகை-;என பலகடைகள்;, தேவைகளுக்கும் மேலாய் மலை அடிவாரத்திலிருந்து உச்சிவரை அடுக்கடுக்காய் வியாபாரத்தில் மூழ்கியிருக்கின்றன. மேலும் கால்-உடம்புவலிக்கு மருந்துகடைகளும், மசாஐ நிலையங்களும் அங்கு நிலைபெற்றிருக்கின்றன.
பக்தர்கள் கூடிக்கொண்டே போவதால் வண்டிஓட்டுனர்களின் பிழைப்பும் நன்றாகவே நடக்கிறது. ஆயினும் மலைஉச்சிவரை காலைதொடக்கம் மத்தியான வெயிலிலும் கடைகளுக்கான மிக பாரமான சாமான்களை தலையில் சுமந்து ஒழுங்கற்ற படிகளில் தாவி ஏறி ஓடிஓடி கொண்டு சேர்க்கிறார்களே. இவர்களின் உழைப்புக்கான சம்பளம் தரப்படுகிறதா?ஒரு தடவை அடிவாரத்திலிருந்து ஏறக்குறைய 1000மீட்டர்உச்சிவரை பளு கொண்டு போய் சேர்க்க 1,000ருhபா!!!!! தரப்படுகிறது என்பது கேள்வி அங்கு நடைபெறும் வியாபாரங்களுக்கு இந்த சுமைதூக்கிகளின் பேருதவி இல்லாவிட்டால் பக்தர்கள் பாடு??? தோட்டத்தொழிலாளிகள்தான் சுமைதூக்கி தொழிலாளிகளாக பாடுபடுகிறார்கள் என்பது அறியப்பட்டதே. இவர்களின் உழைப்பின் மேல் இறையருள் தேடும் கூட்டம் இறைபக்தர்களாயிருப்பதுதான் மிகமிகவினோதமான புதிர்.மனிதன் மனிதனை மிதித்து, அவனுக்கு மேல் ஏறிநின்று தன்நன்மையை தேடிக்கொள்வதென்பது காலம்காலமாய் இருக்கிறது. சுயநலம்-தன் இருப்புக்களை அரசியலாக்கி,அதையும் மதஅரசியலாக்கியுள்ள தந்திரம் ஆசியாவுக்குள்-இறுக்கமாக இந்திய,இலங்கை சமூகத்துள் ஆழமாய் விதைக்கப்பட்டிருக்கிறது. சாதிக்கட்டுமானத்தில் தோய்ந்துகிடக்கும் மடைமையும், வீம்பும் ,,அது அவன் விதி,,என்பதும்,பிறப்பில் ,,அவன் இழிந்தசாதி,, அதனால் ,,அவன் இந்த தொழில் செய்யத்தான் வேண்டும்,, என்பதையும்,, வசதியாக பேசுகிறது..
இன்னொரு நவீனதொனியொன்றும் இப்போது புதிதாக முளைத்திருக்கிறது! இயந்திரவசதிகளை ஏற்படுத்தி பளுக்களை ஏற்றிவிட்டால், இப்படி சுமைதூக்குபவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடுமாம்!சாதி அழிந்துவிடாமல் இருக்க இப்படியும் குரோத புத்திகள் யுக்தியாய் வேலைசெய்கின்றன.சாதாரணமாகவே மொத்தமான கயிறு மூலமாய் (இசுபிரிங் பொருத்தியும்)ஒவ்வொரு கட்டம் கட்டமாய் சாமான்களை பெட்டிகளாக கட்டி மேலே இழுக்கலாம்.உருளைகள் மூலமும் பொருட்களை கடத்தலாம்.ஆழகிணற்றில் ஒருத்தரை இறக்கும்போது உபயோகிக்கும் டெக்னிக் அல்லது மி;ன்சாரசக்தியின்றி லிப்ட் இயங்கும் முறை போன்ற முறைகளையும் கட்டுவிக்கலாம். இந்த மாதிரி இழுப்புக்கு ஆட்கள்பலம் கட்டாயம் தேவை. இதற்கு பெரீய டெக்னிக் தேவையும் படாது. அடிவாரத்திலிருந்து உச்சிவரை உயரஅளவுகளை கணித்து கம்பிகளை நீள்வாட்டில் அமைத்தும் பளுவை மேலே ஏற்றலாம்.
தாயகத்திலே மிக மிக முன்னேற்றங்கள் நடந்திருக்கின்றன என பெருமை பேசி திரிவது எளிது.ஆனால் முன்னேற்றங்கள் எந்த துறையில்-எந்தஅளவில் நடந்திருக்கின்றன என தேடி ஆராய்ந்தால், அது அரசியல்வாதிகளுக்கு வாய்ப்பானவைகளின் பக்கமே செய்யப்பட்டிருப்பது புரியும்.முதுகில் முhட்டை, தலையில் பளுசுமந்து மிக மிக குறைவான சம்பளம் பெறும் நாட்டிலே, பக்திபரவசங்கள் கூடிக்கொண்டே போகிறது. ஆனால் உடல்உழைப்பின் பெறுமதி மதிக்கப்படுகிறதில்லை. உழைப்பை எளிதாக்க கூடிய வழிகளையாவது அரசியலாளரும்,பக்திமனங்களும் கண்டுபிடிக்குமா.