தோண்டியெடுத்தல்

– திவினோதினி-

 

நீமறந்துபோனஞாபகம்நான் 

நினைவிருக்கிறதா?

புதைந்திருக்குமுன்நினைவுகளைத்தோண்டிப்பார் 

நெருப்பின்வெம்மைக்கும்தகிக்கும்அனலிற்குமிடையில் 

ஒருகுளிர்ச்சியைநீஉணர்வாய்

பிரியங்களின்கோடுகளாலும்நம்பிக்கையின்முடிச்சுக்களாலும்

இறுகப்பிணைக்கப்பட்டிருந்தநெடுங்கயிற்றின்சிதிலங்களை 

நீஉணர்வாய்

உன்விழித்திரைக்குப்புலப்படாதகாட்சிகளும் 

துயரங்களின்தொடர்ச்சியில்இருந்துவழிகின்றகண்ணீரும்

நைல்நதியாகிநீண்டுநனைப்பதை 

நீஉணர்வாய்

 

சொல்லப்படாதவார்த்தைகளும்முடிக்கப்படாதவசனங்களுமாக 

நிறைந்துகிடக்கும்பாடலொன்றின்ஓசையினை 

நீகேட்பாய்

இன்னும் 

துரோகங்களின்பாதைகள் 

வெறுப்புக்களின்விளிம்புகள்ஈரத்தின்கசிவுகள்

நம்பிக்கையின்போராட்டங்கள்என 

இவைஅத்தனையும்நீஉணர்கையில் 

உன்வார்தைகள்புதைந்துபோயிருக்கும்

உன்சமூகத்திற்புதைக்கப்பட்டஎன்னைப்போலவும் 

நீதொலைத்தஞாபகங்களைப்போலவும்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *