நீங்கள் உறங்க வேண்டாம்.


சிவரமணி நினைவாக…

sivaramani அவரின் கவிதை வரிகள் சில

சொந்த நாட்டிலேயே அகதிகளாக முகாம்களில் நிற்கும் துயரம்.  இதற்கான நியாயத்தை யாரிடம் போய்  கேட்பது? விடுதலை என்பது என்ன? ஜனநாயகம் என்பது என்ன? இந்த வார்த்தைக்கான அர்த்தங்கள் இன்று உயிரோடு இருக்கின்றனவா?” எல்லோரும் ஒற்றுமைக்காக அறை கூவல் விடுக்கிறார்கள் அனைவரும் ஒன்றுட பட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று கூறுகிறார்கள் ஆனால் தமக்கிடையிலான வேறுபாடுகளை விட்டுவிடாமலே.என தனது கவிதை வரிகளில் கேள்விகளை தொடுத்தவர் சிவரமணி.

எனது பரம்பரையம் நானும்

கூனல் விழுந்த எம்
பொழுதுகளை
நிமிர்த்ததக்க
மகிழ்ச்சி எதுவும்
எவரிடமும் இல்லை

எல்லாவற்றையும்
சகஜமாக்கிக் கொள்ளும்
அசாதாரண முயற்சியில்
தூங்கிக் கொண்டும் இறந்து கொண்டும்
இருப்பவர்களிடையே

நான்
எனது நம்பிக்கைகளை
தோற்றுக் கொண்டிருக்கிறேன்.

எமது விடுதலை

தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப்பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சை பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை

நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்
விலங்கோடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்.! 


 சிவரமணியின் நினைவாக ஊடறுவில் வெளியாகிய பதிவுகள்

*** 2006  – சேலை கட்டிக் காப்பாற்றிய  சில நாகரீகங்களைத் தவிர…

***  2007 – சிவரமணி வாழ்ந்த ,விகசித்த, இறந்த

*** 2008 – நீங்கள் உறங்க வேண்டாம்.

*** 2009 – குருதி தோய்நத முகமற்ற மனித உடலும் 

 *** 2010 – சிவரமணி” என்ற பெரும் கவிஞர் இறந்த நாள் “மே 19″

*** 2011 – 20 வருடங்கள் – தொலைவில் ஒரு வீடு

*** 2012 –  இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.-சிவரமணி

*** 2013– ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்

*** 2014– சிவரமணி நினைவாக…(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

*** 2015 சிவரமணி நினைவாக…எனது பரம்பரையம் நானும்(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

*** 2016 -ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25″ வருடங்கள் (1991 மே 19)

***2017 நீங்கள் உறங்க வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *