தோழிக்கு…

உமா (ஜேர்மனி)

என் அன்புத் தோழியே
உன் அரசியல் தஞ்சம்  நிராகரிக்கப்பட்டது
உன்னைப் போல் எனக்கும் கவலை.

வெப்பம் வர மறுக்கும் ஐரோப்பிய தேசமொன்றில்
உன்னை நாடு கடத்துவதற்hன நிச்சயமற்ற நாட்களை
எண்ணிக் கொண்டிருக்கிறாய்

வடக்கிலும் கிழக்கிலும் தீப்பற்றிய போது
தெற்கில் இருந்துஎண்ணையூற்றாமல்
தீயணைத்த உமது கரங்கள்
துண்டிக்கப்பட்டன
அப்பாவிகளைக் கொல்லும் யுத்தத்தை நிறுத்த
மறுக்கப்பட்ட உரிமைகளை பெற்றிட
உங்கள் போராட்ட சிறகுகளை விரித்தீர்
நீங்கள் பறந்;தது ஜனநாய வானில்லாததால்
உங்கள் சிறகுகள் ஒடிக்கப்பட்டன

உன்னைப்போன்ற உனது தோழர்கள்
கொல்லப்பட்டும் பலவந்தமாக கடத்தப்பட்டும்
மௌனிக்கப்பட்டனர்
உங்களில் சிலர் உங்கள் குருவிக்கூடுகளை
விட்டகன்று
அந்நிய தேசங்களில் இன்னும்
அநீதியின் இருளைக் கலைக்க
நம்பிக்கை கீற்றுகளாய்

யுத்தம் முடிந்து
சுபீட்சம் வரப்போவதாய்
நினைக்கும் பேசத் தெரிந்த
புத்திசாலிகள்
சுதந்திர பேனாக்களும் மாற்றுக்கருத்துக்களும்  
இன்னும் மறுக்கப்படுவதை மறுப்பது
மௌனிப்பது
ஜனநாயகத்தை உயிருடன்
அடைத்த சவப்பெட்டியில்
அறையப்படும்  இன்னொரு ஆணியே

உனது வழக்கை விசாரிக்கப் போகும்
அந்த  ஐரோப்பிய அதிகாரி
இலங்கையில் ஜனாதிபதியின் முத்ததுடன்
யுத்தம் நிறுத்தப்பட்டுவிட்ட தென்ற
அறிவித்தலை மனனம் செய்து
உனது வழக்கை நிராகரிக்கலாம்
முந்தைய நாட்களின் தீர்ப்புகள் போல்
வடக்கில் பிரச்சினையெனி;ல்
தெற்கில் வாழுங்கள்
தெற்கைச் சேர்ந்த நீ வடக்கிற்கு செல்
என்றும் கூறப்படலாம்
இந்த கோடை விடுமுறைக்கு  தாயகம் திரும்பும்
தமிழர்களின் எண்ணிககையும் உனது
வழக்கிற்கு பாதகமாக அமையலாம்
என்பதற்காக நான்
உன்னிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்

2 Comments on “தோழிக்கு…”

  1. beautiful கவிஞரே. கண்ணீரே வந்துவிட்டது.

    விஜய்

  2. what v cud do other than sheading tears? we cud post comments or write a line of pain…..

    inba subramanian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *