பஸ் பயணக் குறிப்பு

 – பிறெளப்வி-

மூன்றாவது தரிப்பிடத்தில் ஏறிக் கொண்டாளவள்

அதிகாலை வேளை ……

ஆசிரியை போலும் – சேலை அணிந்திருந்தாள.;

நீண்ட தூரக் கடமைக்கான

இரட்டைக் கதவு பஸ்சைத் தவற விட்டதால்

ஓற்றைக் கதவுப் பேரூந்து!

 

பயணிகள் சற்று அதிகந்தான்

இருக்கைகள் இல்லாமையால் – அவள்

சாரதி ஆசனத்திற்குப் பின்னால்

மேற் கம்பியைப் பிடித்துக் கொண்டு; நிற்கிறாள்.

எதேச்சையாகத் திரும்பினேன்

எதிரே இருந்தவன்

45 வயது மதிக்கத்தக்கவன்.

அவளின் பின்புறத்தைப் பார்த்தபடியே இருக்கிறான்

பாற்கிறான்…. பாற்கிறான் ….. பார்த்துக் கொண்டேதான்

இருக்கிறான்……!

எதைக் கவனிக்கிறான்?

அவள் மேலாடைக் கூடாக

உள்ளாடை தெரிகிறது!

அவன் கண்களால் சீள் வடிக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *