“ம்
மகளீர் தினமான இன்று எனது “ம்” குறும் படத்தை உங்கள் பார்வைக்கு முன்வைப்பதில் பெரும் மகிழ்வு. பெண்களுக்கு எதிராக நிகழும் அனைத்து வகையான துஸ்பிரயோகங்களுக்கும் எதிராக, பெண்கள் குறைந்த பட்சம் அதனைப்பற்றி ஆரோக்கியமான உரையாடலை முன்னெடுப்பதே துஸ்பிரயோகம் அற்ற சமூகத்தை உருவாக்க துணைநிற்கும் என நம்புகிறேன். இதனை என் அனுபவத்தின் ஊடாக உணர்ந்தவள் என்ற வகையில், எமது குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்யவேண்டியது காலத்தின் தேவை எனக் கூறிக் கொண்டு துஸ்பிரயோகங்களால் உயிர் துறந்த சகோதரா சகோதரிகளுக்கு இச்சிறு படைப்பை அர்பணிக்கிறேன்.
#ம் – இப்படைப்பின் இயக்கத்தில் அனைத்து வகையிலும் மனம் கோணாது இறுதி வரை நின்று உதவி புரிந்த அனைத்து உற்ற உறவுகளுக்கு பலகோடி நன்றிகள். உரித்தாகுக.
நன்றி