பெண் வீடு சௌந்தரி – 08/03/2017

-சௌந்தரி – அவுஸ்திரேலியா

இது பெண்களின் வீடு
எங்கள் கூடாரத்திற்கு வாருங்கள்
நாம் இரட்சகராகப் பணியாற்றுவோம்

ஆக்கிரமிப்பின்றி அன்பு செலுத்துங்கள்
உங்கள் ஆன்மசுமைகள் அகன்றுவிடும்

நாங்கள் பெரும் புதையல்தான்
ஆனால் உங்கள் சொத்து அல்ல
பூமியின் ஊட்டச்சத்து நாங்கள்

உங்களில் ஒரு பக்கம் பழமைவாதம்
மறு பக்கம் நிபந்தனைக்கூடம்
பெரும்பகுதி ஒன்றுமில்லா வெற்றிடம்

நீங்கள் பாவம் செய்தவர்கள்
மனிதநேயம் மறந்தவர்கள்
அன்பு செய்யத் தெரியாதவர்கள்
நன்றி சொல்லத் தவறியவர்கள்

கட்டியெழுப்ப வேண்டியவர் நாம்
எம்மைக் கந்தலாக்க நினைக்காதீர்

கடந்துசெல்ல வேண்டியவர் நாம்
எம்மைத் தொல்லைபடுத்த எண்ணாதீர்

எங்கள் காதலும் காமமும் கவர்ச்சியானது
எம்மை அனுமதியின்றி அணைக்காதீர்

உங்கள் குருட்டு வாய்கள் மௌனமாகட்டும்
வழிநடத்திச் செல்லாத பேச்சால் என்ன பயன்
பேசாத பொருளெல்லாம் நாம் பேசுவோம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *