நிறைந்த அமாவாசை
கொடிய பல கனவுகளை
நனவாக்கிச் சென்றிருக்கிறது
கரிய இருளில்
காதுகள் கூட கேட்கவில்லை
கனவுகள் மீதேறிப் பயணிக்க
கண்களுக்கு என்ன தேவை?
மனம் தான் மாளிகையென
மகிழ்வைத் தேடிப் புறப்பட்டது
வண்ணத்தி ஒன்று
அதன் இறக்கைகள்
அதனோடு கூடவே பயணித்தன
வண்ண வண்ண நிறங்களை
அணிந்து கொண்டாடின
காற்றிலும் மழையிலும்
கருத்தோடு சிறகசைத்தன
எவரையும் அழைக்காமல்
துயர் கொண்டாடாமல்
நெடுதூரம் பயணிக்கின்றது
செட்டை அதற்குப் பாரமாயில்லை
ஆயினும்
தேவை நிறைந்ததாயுமில்லை
ஆக,
வீரம் மிகு வண்ணத்தி
அமாவாசைக் கனவொன்றில்
கூட்டுப்புழுவொன்றைக் கண்டிருந்தது