ஷாமீலா ஷெரீப்
ஏக்கப்பெருமூச்சுக்கள்
நிசப்பத்ததை கலைக்கிறது
சிதறிக்கிடக்கும் விளையாட்டுப்பொருட்கள்
வீட்டை அலங்கரித்து
வாசனை பரப்புகிறது
ஆங்காங்கே வீசப்பட்டிருக்கும்
அவனாடைகள்
நினைவுகளை அள்ளிச்சுருட்டி மடிக்கிறது
முத்தத்திலும் ரத்தத்திலும்
கலந்துவிட்ட உறவும்
நனைந்துவிடும் உள்ளமும்
கண்ணீரால் கழுவப்பட்டு
தனிமையில் வழுக்கி விழுகிறது
உதவியின்றி
வளர்ந்துவிட்டவனாதலால்
ரயிலும் தண்டவாளமும் தாயாகி தலாட்டிட தந்தை முதுகில் உறங்கி
அந்தி சாய வந்து சேர்வான்
வரைக்குமான
பொழுதொவ்வொன்றும்
மரணவலியை நினைவூட்ட
தூக்கம் மறக்கும் விழிகளை
சூரியன் கடத்திச் செல்கிறது
உயிரை மீளத்தரும் புன்னகையுடன்
சற்றுநேரத்தில் வருவான்
உம்மியென்றழைத்தபடி
இயந்திரம்
கண்விழித்த அதிகாலைப்பொழுது
ஆரம்பமானதனைத்தும்
ஓய்வின்றித்தொடரும்
தாயாய் …
மனைவியாய்…
ஆசிரியராய்..
வேலைக்காரியாய்…