கனடா மொன்றியலில் வாழ்கின்ற ஈழ தமிழ் பெண் சுபிதா. பெண்ணிய செயற்பாடு, பெண்ணுரிமை கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவர் . ஒரு பெண் என்பதால் சில காரியங்களை செய்யவே கூடாது, இப்படித்தான் நடக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றார். ஆயினும் இவரால் இவற்றை ஏற்று கொள்ள முடியவில்லை.ஆண் பிள்ளைகள் ஓடி விளையாடி உடலை ஊத்தையாக்க முடியும் என்றால் ஏன் தான் மட்டும் பொம்மை போல அமர்ந்து , சிரிக்க வேண்டும் என்று கேட்கின்றார்?தன்னை கால் பந்தாட்டத்தில் சேர்த்து கொள்ளும்படி கேட்டும் இவரது நண்பர்கள் இவருக்கு பார்பி பொம்மைகளே விளையாட கொடுத்ததாக கூறுகின்றார்.
ஆனால் அதில் எல்லாம் தனக்கு ஈடுபாடு இல்லை என்று கூறும்.சுபிதா சமுதாயம் கன்னித் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது, ஆனால் ஒரு ஆணின் அல்லது அவனுடைய குடும்பத்தின் கௌரவம் என்பது ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பில் இல்லை. ஆண்கள் கொண்டிருக்கின்ற சுதந்திரத்தை பெண் ஒருவர் அனுபவிக்க கூடாது என்று சொல்ல வருகின்றனர்.பாலியல் வண்புணர்வுக்கு உட்படுகின்ற பெண்களை பாதிக்கப்படுபவராக காட்டுகின்றனர். இவற்றை நாம் கேள்வி கேட்க வேண்டும் என்கின்றார் சுபிதா .தமிழ் பெண்ணாக நான் யுத்தம் செய்ய வேண்டி உள்ளது என்றும் இவர் உணர்கின்றார்.