கபிலன் சிவபாதம்
நான் சொல்ல வாற எல்லாத்தோடையும் நீங்கள் ஒத்துபோகணும் என்று இல்லை. நான் சொல்வது மட்டுமே சரி என்றும் இல்லை. நிறைய விடயங்கள் கலாச்சார காவலர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.அதற்காகவே பல நாள் என்னை பெஸ்புக் பக்கங்களில் கழுவியுத்தலம். நான் சொல்கின்ற பெரும்பாலானவை வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு தான் பொருந்தும். இதை கொண்டு போய் இந்திய கலாச்சாரத்துடனோ இல்லை இலங்கை கலாச்சாரத்துடனோ பொருத்திப்பார்க்கவேண்டாம் என்று தாழ்மையா கேட்டுக்கொள்கின்றேன். 90ஆம் ஆண்டுகளில் பிறந்த புலம்பெயர் சினிமா கிட்டத்தட்ட எனக்கு தெரிந்து ஒரு 15 வருடமாகவே இப்பவும் சில இடங்களில வளராமல் கைக்குழந்தையாவே இருக்கின்றது. கற்பனையில இருக்கிற கதையை காட்ச்சியாக எடுக்கிறது எல்லாருக்குமே கைகூடிவரக்கூடிய விடயம் இல்லை. இந்த பிழைகளை நிறையவே ஆரம்பத்தில பார்க்க கூடியதா இருந்தது.
எல்லா விதத்திலையும் எங்களை விட ஒரு படி முன்னுக்கு போய்க்கொண்டிருந்த தமிழ் சினிமாவே பார்த்து பழகிப்போன மக்களுக்கு இப்படியான தவறுகளோட படங்கள் வரேக்கை அது ஒரு ஏமாற்றத்தை தந்தது.
நிறைய இடங்களில சொல்லும்படியான வரவேற்ப்பு கிடைக்காமல்போச்சு. அந்தகாலத்திலைஒருவிளம்பர யுக்தி என்ன மாதிரியான படைப்பு வந்தாலும் அதுக்கு ஈழம் அல்லது ஈழத்து கலைஞர்கள் என்ற ஒரு அடைமொழி போட்டு வெளிவரத்தொடங்கினது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு இது ஈழத்து கலைஞர்களின் படைப்பு. தமிழ்நாடு சினிமா தரத்துக்கு எதிர்பார்த்து வராதீங்க என்று மறைமுகமா ஒரு எச்சரிக்கை கொடுத்தமாதிரி தான்.
அதுக்கு பிறகு தமிழ் ஆக்களிடையும் எங்கட பெடியளை நாங்கள் தூக்கிவிட வேணும் எண்டு ஒரு மனநிலை வந்திட்டுது.
அதுக்கு ஒரு முதல் படியா TTNல ஒளிக்கீற்று நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வந்தது. முதல் தடவையா சினிமாப்பாடல் அல்லாத பாடல் எங்கட காருகளுக்குள்ள ஒலிச்சதெண்ட அது கபிலேஸ்வர் இசையமைச்ச பாடல்கள் தான்.
வறண்ட பாலைவனமான ஈழத்து சினிமாவில பெருமழையா வந்து விழுந்தது 1999 என்ற முழுநீள திரைப்படம்.
எனக்கு தெரிஞ்சு அந்த படத்தின்றவெற்றிக்குகதைசொல்லிமுறையும்கதையின்ரபொருளும் மிக முக்கியமா தெரிஞ்சது. சமூகதிலை நடக்கிறதை கருப்பொருளா எடுத்தது அந்த காலத்திலை இருந்த ஒவ்வொரு இளைஞனும் தன்னையே கண்ணாடியில பார்க்கிறதுக்கு ஒரு வாய்ப்பா அமஞ்சிது.
புலம்பெயர்ந்த எல்லா நாட்டிலையுமே இருக்கிற ஒரு பிரட்சசனை இந்த குழுமோதல். நாங்க விரும்பிறமோ இல்லையோ எதாவது ஒரு குழுவுக்குள்ள நாங்கள் இருக்கத்தான் செய்வம். அந்த படத்தின்ரை முடிவு முன்னர் இப்படி குழுமோதல்களில் ஈடுபட்டு இப்ப விலகி இருக்கிற ஆட்களுக்கு நல்லாவே பொருந்தும். ஒரு குறிப்பிட்ட வயதோட அல்லது சம்பவத்தோடு ஒதிங்கிடவேணும். ஒதுங்கினால் ஒரு புது வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கு எண்டதை நான் அந்த படத்தில இருந்து கற்றுக்கொண்டேன் எண்டு சொல்லலாம். அப்படி ஒதுங்காத விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்களையும்நான்பாத்திருக்கிறன். அவையின்ரமுடிவுகூடகிட்டத்தட்டஜனாஎடுத்தபடம்மாதிரிதான்இருக்கும்.
குழுமோதல்கள் எல்லா காலத்திலையுமே இருந்திருக்கு. அதின்ரை எல்லை எது என்று நிர்ணயிக்கிறதில்லை தான் ஒருத்தரோட எதிர்காலம் எப்படி அமையும் என்று சொல்லுற ஒரு படமா நான் பாத்தேன். ஒரு வகையில அடுத்த சந்ததிக்கு வழிவிட்டு ஒதுங்கு எண்டு சொல்லுற மாதிரி தான்.
இந்த படத்துக்கு பிறகு ஈழத்து சினிமா மறுபடியும் ஒரு வறண்ட பாலைவன பூமியா போச்சு.
இடையில தீராநதி சொல்லும்படியான ஒரு படமா வந்திச்சு.
மறுபடியும் தமிழ்நாட்டு சினிமாவுக்கே போறமோ எண்டு என்னதோனிச்சு. குத்துப்பாட்டுகள், அரைகுறை ஆடைகள் என்று வந்த படைப்புகள் நிறைய. குத்துப்பாடுகளையும் அரைகுறை ஆடைகளுயும் பாக்கணும் எண்டா நான் தமிழ்நாட்டு சினிமாவே பாத்திடுவன். ஏன் உங்கடை படத்தை பாக்கணும் எண்டு ஒரு கேள்வி வரும். இப்ப அந்த பக்கத்தில இருந்து நீங்கள் வளர்ந்து வார ஈழத்துக்கலைஞர்களை துருகிவிடுறிங்கள் இல்லை எண்டு ஒரு facebookல செல்லடியல் நடக்கும். சரி பாத்து துலைகிரம் எண்டு பாத்த படங்கள் நிறைய. தியேட்டருக்குள போய்ட்டு ஏன்டா வந்தம் எண்டு நினச்சு இப்ப வெளிய எழும்பி போனா என்னை தேசத்துரோகி ஆகிடுவான்கள் எண்டு முடியிறவரைக்கும் பேசாமல் இருந்த படங்களும் உண்டு.
அதுக்கு விமர்சனம் கூட எழுதமுடியாத நிலைமை இருக்கு. அப்படி எழுதினாலும் நாங்கள் இப்ப தான் குழந்தையால் தவளுறம் என்று மறுபடியும் முதல்லே இருந்து ஆரம்பமாகும்.
இப்படியாக புலம்பெயர்ந்த நாடுகளில் வார படைப்புகளுக்கு மறுபடியும் ஆதரவு குறையத்தொடங்கியிருந்தது. இது படைப்பாளிகளுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கு. பரிசுக்கு வந்திருந்த மிஸ்கின் அதை உணர்ந்தாரோ என்னவோ தெரியேல்லை. அவர் வெளிப்படையாவே ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். இவளா நாளா துவக்கு எடுத்து சுட்ட உங்கட பிள்ளையள் இப்ப கமெரா எடுத்து சுடவெளிக்கிட்டிருக்கினம். நகை வாங்கிறதையும் ஆடம்பர செலவையும் விட்டிடு உங்கட பிள்ளையளுக்கு அதை முதலீடா குடுங்க என்ற தோணியிலை பேசியிருப்பார். முக்கியமா படைப்பாளிகள் நிறைய வாசிக்கணும் என்று சொல்லியிருந்தார். இந்த வசனத்தை எத்தின பேர் கவனிச்சினம் என்டு தெரியா. எனக்கு தெரிஞ்சு தமிழ்நாட்டிலை வாசிப்புப்பழக்கம் இல்லாத இயக்குனர்களை விரல்விட்டு என்னிடலாம்.
இயக்குனர் ராம் நிறைய பேட்டிகளிலை சொல்லியிருப்பார் ஈழத்தமிழர்கள் கோடம்பாக்கம் நோக்கி வராமல் உங்களுக்கு பக்கத்தில இருக்கிற ஹாலிவுட் நோக்கி போங்க என்று. அப்ப நான் நினைப்பன் இதெல்லாம் நடக்கிற கதையா. ஒரு குறும்படம் எடுக்கவே பொருளாராத ரீதியில நாய் படத்தை பாடு படவேண்டி இருக்கு.
இதெல்லாம் சாத்தியம் என்டு நிருபிட்ச ஒரு படம் என்டு பாத்தால் gun & ring.
இந்த படத்தை நான் இண்டைக்கு தான் முதல் முதல் பாக்கிறேன். அதுக்கு முதல் பாக்கிறதுக்கான வசதிகள் கிடைக்கேல்லை. இந்த படம் இங்க திரையிடப்படுது எண்டு தெரிஞ்ச உடனே கூகுளே போய் தேடிப்பாத்தேன். யாராவது செய்து வச்சிருக்கிற விமர்சனத்தை சுட்டு நானும் ஒரு மேதையாகலாம் என்டு பாத்தேன்.
அப்ப அதிலை இந்த படத்தின்ரை தமிழாக்கம் ஒரு துப்பாகியும் ஒரு மோதிரமும் என்டு தமிழ் விக்கிபீடியா லிங்க் ஒண்டு கிடந்தது. உள்ள போய் பாத்தா ரெண்டு பேர் சண்டை பிடிச்சுக்கொண்டிருக்கினம். ஒருத்தர் ஒரு துப்பாக்கியும் ஒரு மோதிரமும் எண்டு வராது. அது இலக்கண பிழை என்றும். இன்னோருத்தர் ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் எண்டு தான் வரும் எண்டும் சண்டை நடக்குது.
தமிழ் பேசாத மக்களுக்கும் இந்த படம் போய் சேரனும் எண்டு தான் ஆங்கிலத்திலை பெயர் வச்சிருப்பார் என்று நான் நினைக்கிறன்.
இந்த படத்தில போரும் அதன் விளைவுகளும் பற்றி நான் பேச விரும்பேலே. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அதுக்குள்ள வாழ்ந்த உங்களை விட நான் புதுசா ஒண்டையும் சொல்லிவிட போறேலை. போருக்குள் நான் வாழ்ந்த காலம் மிக குறைவு. தொழில்நுட்பம் பற்றி என்னைவிட அது பற்றி தெரிஞ்ச நிறைய பேர் இருக்கிறீங்கள். அதனால அதை பற்றியும் நான் பேச விரும்பேலை. எனக்கு அது பற்றி பெரிசா தெரியவும் தெரியாது .
அப்ப இனத்தை பற்றி இந்த படத்தில பேசலாம்? நிறையவே பேசுறதுக்கு இருக்கு.
18 வயது சிறுமி:
ஒட்டுமொத்தமா இந்த படத்தில சொல்லப்பட்ட கருத்து என்று பார்த்த அது Integration அதாவது தமிழிலை இணைந்துவாழ்த்தல் என்று சொல்லுவினம். Integration என்று சொன்னாலே அது வெறுமனே இரண்டு இனங்களுக்குக்கிடையிலானது என்று தான் பொதுவான ஒரு பார்வை இருக்கும். வெள்ளைக்காரன் integration எண்டு பேசினான் எண்டால் அது அவன்ர நாடிலை இருக்கிற வெளிநாட்டுகாரர் எப்படி தங்களோட இணைந்துவாழமுடியும் என்பதற்கான வழிமுறையளா தான் இருக்கும். இந்த படத்தில அது நான் இப்ப சொன்ன இந்த integrationநை விட எங்களால கவனித்தில்லை கொல்லப்படவேண்டிய ஒரு இன்டெகிரஷன் தமிழர்களுக்குளேயே இருக்கிற கூடிய மாறுபாடுகள். இரண்டு தலைமுறைகளுக்கும் இருக்கிற இடைவெளி நிரப்படாமலே இருக்கு. 18வயது மகளுக்கு கல்யாணம் பாக்கிறது. 18 வயதில்லை பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைப்பதன் மூலம் சமூதிலை தன்னை ஒரு நல்ல அம்மாவாகவோ அப்பாவாகவோ காட்டிக்கொளுதல். சொந்தங்களுக்கு முன்னால தன்கடை கெளரவம் காப்பாற்றப்பட்டுவிட்டதனால பெற்றோர்களுக்கு சந்தோசம். இந்த போட்டியில்லை பிள்ளைகள் ஒரு கைநகர்தல் தான் கருவிகள். பெற்றோர்களும் பிள்ளைகளும் இணையக்கூடிய அந்த புள்ளி இன்னும் நிறைய தமிழ் குடும்பங்களிலை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
ரெண்டு பேரையும் அடிச்சு கொல்லுற காட்சி.
கொலைசெய்தவர் மனநோயாளி என்று ஆரம்பத்தில் தோன்றினாலும். அந்த கொலை நடக்காமலிருந்திருந்தால் கொல்லப்பட்டவர் இரண்டு உயிர்களை எடுத்திருப்பார். இப்ப யார் மனநோயாளி? கொன்றவரா இல்லை கொல்லப்பட்டவரா? அந்த மனிசிக்கும் விசர் எண்டு ஒரு கட்டதில்லை சொல்லுறார். கொல்லுறவர் கூட ஒரு வகையிலை மனநோயாளி தான். ஈராக்கிலை இருந்து திரும்பி போன அமெரிக்க ராணுவதில்லை வரலாறு காணாத தற்கொலைகள் நடந்திருக்கு. ஒருத்தனை கொல்லுறதுக்கே ட்ரெயின் பண்ணினீங்கள் என்டால் அங்க தொடங்குது ஒரு மனநோயாளிகனா முதல் படி. ஆகமொத்தம் ஒரு மன நோயாளிகளுக்கிடையில நடக்கிற சண்டை எண்டு பாக்கலாம். இந்த படத்தை எடுத்தவர் என்ன சொல்லவந்தவர் எண்டு தெரியேல்லை. கலையின்ற சிறப்பம்சமே அது பாக்கிற ஒவொரு ஆட்களுக்கும் வேற வேற பார்வையை குடுக்கிற சக்தி கொண்டது. அந்த வகையில என்னோட பார்வை இந்த 3 பேரையும் பற்றி இப்டியானதா இருக்குது. இதுக்கு நான் திரும்பி இனொரு கட்டதில்லை வாறன்.
அடுத்தது ஓரின சேர்க்கையாளர்கள் கதாபாத்திரம். நான் நினைக்கிறன் நிறைய பேருக்கு அந்த ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற அந்த உறவே என்ன எண்டு தெரிஞ்சிருக்காது. ஒரு ஆணுக்கு இன்னொரு ஆண் மீது ஈர்ப்பு வருமா எண்டதே நாங்களெல்லாம் வெளிநாடு வராட்டில் எங்களுக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கா என்று தெரியேல்லை. ஒரு தமிழ் நாவல் ஒண்டிலை படிச்ச ஞாபகம் இருக்கு. ஒரு ஆணுக்குரிய நடை குண பாவனைகள் ஒருத்தனுக்கு இலாததாலை ஒருத்தரை கேலி பண்ணியே தற்கொலை வரைக்கும் கொண்டு போய்விடிடுவினம் அவரோட படிச்ச சகமானவர்கள். அதே மாதிரி இன்னொரு குறும்படம். அது குறும்படமா இல்லை சும்மா ஒரு விடியோகிளிப்பா எண்டு தெரியேல்லை. ஒரு மகன் ஒரு ஆணை லவ் பண்ணுறான் எண்டு தெரிஞ்ச உடனே தமிழ் பெற்றோர்கள் என்ன மாதிரி அந்த பிரச்சனையே அணுகுவினம் என்றும். அதே கிளிப்பிலை இந்த பிரச்சனையே என்ன மாதிரி அணுகிறது நல்லதெண்டும் காட்டியிருப்பினம். தமிழ் பெற்றோர்கள் என்ன மாதிரி அணுகி இருப்பினம் எண்டு நான் சொல்ல தேவை இல்லை. தகப்பன் உடனே தாய்க்கு நாலு அறை போட்டு உன்ர வளர்ப்பு சரி இல்லை. வீட்டிலை என்ன பண்ற எண்டு சராசரி குடும்பத்திலை நடக்கிற மாதிரியே இருக்கும்.
போன வருஷம் ஜேர்மன் பேப்பர் ஒண்டு ஒரு தமிழ் பெடியனை பேட்டியெடுத்து போட்டிருந்தது. அந்த பெடியன் இன்டர்நெட் மூலமா ஒரு ஜெர்மனிலை இருக்கிற பிரேசில் காரனோட பழகி அவைக்குள்ள காதல் வந்திட்டுது. வீட்டிலை கமெராவில் அவை ரெண்டு பெரும் சேர்ந்து எடுத்த போட்டோக்களை வச்சு கண்டுபிடிச்சிடினம். அந்த பெடியன் சொல்லுறான் எனக்கு அடியை விட அவையள் சொன்ன வார்த்தையள் வலிச்சிது. ஹிந்துக்களுக்கு குடும்ப கெளரவம் ஒரு புனிதமானதா இருக்கு. அவையளை பொறுத்த வரைக்கும் எனக்கு வந்திருக்கிறது ஒரு வியாதி. நான் எண்டைக்காவது குணமடைஞ்சிடுவன் எண்டு நம்பிக்கொண்டிருக்கினம் எண்டு. எனக்கு இந்த படத்திலை அந்த ரெண்டு பெடியளும் பற்ற்றின உண்மை தெரிஞ்ச உடனே நான் முதல் சொன்ன இந்த விஷயங்கள் தான் நினைவுக்குவந்தது.இதுபற்றியும்பிறகுகடைசியிலவிரிவாகதைக்கலாம்.
அடுத்தது அந்த சிறுவர் பாலியல் சம்மந்தமான கதாபாத்திரம். அதிலை ஒரு வெள்ளைக்காரனை காடுறதுக்கு பதிலா தமிழ் ஆளையே காட்டியிருக்கலாம். 90களின் நடுப்பகுதியிலை இங்க வந்து அகதிமுகாமிலை இருந்த தங்கட சொந்தகாரலையே பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ஒரு சிறுமியை எனக்கு தெரியும். இப்ப அவைக்கு பிள்ளைகள் கூட இருக்கு. 2009க்கு பிறகு இங்க வந்த ஒருதராலா துஷ்பிரயோகம் செய்யப்பட்ட ரெண்டு சிறுமிகளின்ர விஷயமா நான் அவாவோட பேசேக்கை தான் அவா எனக்கு தன்னுடைய கதையை சொன்னவா. நாங்கெல்லாம் என்ன நினைப்பமோ அதை தான் அவன்ர புருஷனும் அவாக்கு சொல்லி இருக்கிறார்.
இப்ப அந்த 18 வயது சிறுமின்ர விஷயத்துக்கு வாறன். அந்த பிள்ளையட்டை எதை மறைக்க விரும்பிறமோ அது வெளில கொட்டிக்கிடக்கு. நான் படிக்கேக்கை இந்த வசதியள் குறைவு. படிக்கிற பொடியளோட Kiosk எண்டுற அந்த பெட்டிக்கடையாளுக்கு போய் ஓரகண்ணால பாலியல் சம்மந்தமான சன்சிகைகளை பாக்கிறதோட சரி. அதுக்கு பிறகு ஒரு கொஞ்ச காலம் கழிச்சு இணையதளம் எங்களுக்கான எல்லா கதவுகளையும் திறந்து விட்டிச்சு. இணையம் வந்த உடனேயே எங்கட முதல் தலைமுறைக்கு தெரியாத நிறைய விசயம் எங்களுக்கு தெரிய ஆரம்பிச்சிடு. அதோட இங்கை பாடசாலையிலை பிள்ளைகளுக்குள்ள இது ஒரு சர்வசாதாரணமாக பேசுபொருள். உடலுறவுக்கு கல்யாணம் வரைக்கும் காத்திருக்கணும் எண்டது வெள்ளைக்காரனுக்கு பொதுவா பாத்தால் பொருந்தாது. வெள்ளைக்காரனை விட பரந்தமனசு படச்சவையள் எங்கட முன்னோர்கள். அது ஏன் இடையில காணாமல் போச்சு எண்டு தான் தெரியேல்லை.
மேற்குலகத்திலை 70களிலை Junkies கலாச்சரம் என்று ஒண்டு வந்திச்சு. அந்த காலநிலை இளைஞர்களா இருந்தவையின்ர முந்தைய தலைமுறை எதை எல்லாம் பண்ணாதே என்று சொல்லிச்சிதோ அதையெல்லாம் பண்ணுற ஒரு தலைமுறையை அது இருந்திச்சு.என்னுடைய காலதில்லை தமிழ் சமூகத்தின்ரை கண்ணில்லை படாமல் நடந்து கொண்டிருந்திச்சு. இப்ப அது வெளிப்படையவே இந்த தலைமுறையுக்களை நடந்து கொண்டிருக்கு. நாங்கெல்லாம் இணையத்திலை சாட் பண்ணி நேரிலை சனநடமாட்டமே இல்லாத இடங்கிளை 2-3 தேரம் சந்திச்ச பிறகு கல்யாணம் பண்ணுறியா எண்டு கேட்ட ஆக்கள். ஆனா இப்ப இருக்கிற சந்ததிகிட்ட அந்த எண்ணம் குறைஞ்சு கொண்டே போகுது. காரணத்தை வெளிப்படையா சொன்னா நாங்களும் நீங்களும் கல்யாணம் பன்னிட்டு வாழ்ந்த வாழ்க்கையே அவர்கள் அதுக்கு முன்னமே வாழ்ந்துடினம். நாங்கெல்லாம் கல்யாணம் பன்னிட்டு என்டா பன்னினம் எண்டு யோசிக்கிறதை அவர்கள் முதலே ஏன் பண்ணனும் எண்டு யோசிக்கினம். இதெல்லாம் தவறு என்று யார் சண்டை பிடிக்கிற எண்டு பாத்திங்கள் எண்டால் இந்த பிரச்சனையில சம்மந்தமே படாத முனைய தலைமுறை தான். இதிலை உண்மையே சொல்ல போனால் ஒரு வகை பொறாமையும் இருக்கு. எங்களுக்கு சூழ்நிலை அமையாததால் நாங்கள் யோகியர்களாகவும், சூழ்நிலை அமஞ்சதாலை புதிய தலைமுறை அயோக்கியர்களாகவும் எங்கட கண்னுக்கு படுது.
இப்படியாக தங்கடை குடும்ப கவுரவங்களைகாப்பாத்துறதுக்காகவும்பிள்ளைகளுக்குநல்லதுபண்ணுறன்எண்டபெயரிலையும்சின்னவயசிலையேகல்யாணம்பண்ணிவச்சஎன்னுடையவயதையொத்தபெண்களைஎனக்குநிறையவேதெரியும். இளம்பிராயத்திலைகிடைக்கவேண்டியஇல்லைஅனுபவிக்கவேண்டியகுதுகலமான வாழ்க்கையே துலட்ச ஒரு ஏக்கம் அவையின்ர முகத்தில எப்பவுமே இருந்துகொண்டு தான் இருக்கும். முக்கியமா புதிய தலைமுறையே பாக்கும் பொது இன்னும் அதிகமா இருக்கும். மனமும் உடலும் ஒரு திருப்திகரமான வாழ்க்கைக்குள்ள போகேக்கை தான் அது திருமணம் எண்ட அந்த உறவு பூரணமடையும் என்டு நான் நினைக்கிறன். அதுக்கு இளவயது திருமணங்கள் தகுந்ததில்லை எண்டு நினைக்கிறன்.
அப்டி உடலும் மனமும் பூரணமடையாத ஒரு வாழ்கை தான் மனைவி விட்டுட்டு போய்டால் என்ற அந்த பிரச்சனை எண்டு நான் பாக்கிறேன். நிறைய பேருக்கு அந்த பெண் பண்ணினது தப்பா கூட தெரியலாம். எனக்கு அது தப்ப தெரியேல்லை. மாறாக அந்த ஆணிடம் இருந்து அதற்கு வருகின்ற எதிர்வினை தான் மாற்றப்படவேண்டும் என்று நினைக்கிறன். அந்த பெண் செய்ததையே அந்த ஆண் செய்திருந்த இங்கை எத்தின பேர் அந்த பெண்ணை பார்த்த அதே கண்ணோட்டத்தோடு அந்த ஆணை பார்த்திருப்பீர்கள் என்று கேட்டால் பதில் வேறு மாதிரியாக இருக்கும்.
நான் மேல சொன்ன விஷயத்தில எதாவது ஒண்டிலை திருப்தியில்லாததால வார பிரச்சனை தான் அந்த மனைவி வேற ஒருத்தரோட போய் இருக்கிற கதாபாத்திரம். இதில சரி பிழை எண்டு எதுவுமே இல்லை. மனசாலை யோசிக்கிற பகுதி தவறு என்றும் மனசை தள்ளி வச்சிட்டு முளையால யோசிக்கிற பகுதி சரி என்றும் சொல்லும். படத்தில தொடர்ந்து வருகின்ற சம்பவங்களை பாக்கும் போது அவரிடம் எதோ ஒரு குறைபாடு இருக்கிறது என்று மறைமுகமா சொல்லப்படுது. இதுவே ஒரு 50 வருஷத்துக்கு முதல் எண்டால் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் எண்டு வீட்டுக்குள்ளயே இருந்திருப்பினம். ஆனா இப்ப அதை மாத்திரத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகம். இதெல்லாமே இங்க மறைமுகமா நடக்கிற சம்பவங்கள் தான். அது சரியாய் தவற எண்ட வாதத்துக்கு நான் போகேலை. ஒரு பெண்ணோ ஆணோ தனக்கு இந்த வாழ்கை பிடிக்கேலை இல்லை திருப்தி இல்லை எண்டு விலகும் போது ஏன் அதை ஒரு பகுதியாலை ஏற்றுகொலெல்லாமல் இருக்கு? நண்பர்களாக பிரிந்து போன ஜோடிகளை நான் இது வரைக்கும் கண்டதில்லை. மாறாக அதை ஒரு ஊர் பிரச்சனையாவோ சொந்தக்காரங்களின்ரை பிரச்சனையவோ ஆக்கி சுற்றி உள்ள ஆட்களுக்கும் தலையிடியை கொடுக்குற ஒரு பிரச்சனையா ஏன் மாத்தணும்?
மணமுறிவு என்பதை ஒரு இயற்கையான சம்பவமாக ஏன் தமிழ்சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
ஒழுக்கம் என்பது பெண்களுக்கே உரிய ஒன்றாகவும் அதனை கட்டிக்காக்கின்ற பொறுப்பு அவர்களுடையது என்றும் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது? முதலில் ஒழுக்கத்தை நாம் எப்படி வரையறுத்துக்கொள்வது?
இரண்டு திருமணம் முடித்தவரை கடவுளாக கும்பிடும் எம் சமூகத்தால் ஏன் ஒரு பெண் இரண்டு திருமணம் முடிக்காமல் விவாகரத்து செய்து பின்னர் மறுமணம் செய்வதைக்கூட ஏற்றுக்கொள்ளமுடியவில்லை? பெண்கள் குளிக்கும் போது ஆடைகளை எடுத்து ஒழித்த வைத்து சில்மிசம் செய்தவரை கடவுளாக வரையறுத்து வைத்திருக்கும் தமிழ் சமூகம் ஒழுக்கத்தை எதனை வைத்து வரையறுக்க போகின்றது? அர்த்தநாதீஸ்வரரை வணங்குகின்ற நாங்கள் எப்பொழுது ஓரினச்சேர்க்கையும் இயற்கையானது என்று ஏற்றுக்கொள்ள போகின்றோம்?
நான் கேள்விகளை மட்டுமே உங்களிடம் வைக்கின்றேன். பதில்களை உங்களின் ஆழ்மனதில் நீங்கள் தான் தேடிப்பார்க்க வேண்டும்.
இறுதியாக ஒன்றை மட்டும் சொல்லமுடியும். இப்பொழுது சிறிய அளவில் புலம்பெயர் சமூகம் இந்த கலாச்சார மாற்றத்திற்கு முகம் கொடுத்தாலும் எதிர்காலத்தில் ஒரு பாரிய கலாச்சார மாற்றதிற்கு நாம் தயாராக வேண்டும் என்பதை இந்த படத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டு சினிமாவை நிமிர்ந்து பார்த்த ஈழத்தமிழர்கள் இப்ப நேருக்கு நேர் பாக்கிற நிலைக்கு இப்படியான படங்கள் கொண்டுவந்து விட்டிருக்கு. இன்னும் ஒரு 10 வருசத்திலை எங்களை அவை நிமிர்ந்து பாக்கிற ஒரு நிலைமை வந்தால் சந்தோசம்.
0 Comments on “ஒரு துப்பாகியும் ஒரு மோதிரமும்”