ஒளவை
மழை இரவு
மக்கள் இரவு ,மயங்கும் இரவு
கால வெளியில் எத்தனை இரவுகள் கடந்து போயின
வியர்த்துக் கொட்டும் இந்த இரவு
குளிர் இரவு .
பொய்யால் நிறைந்து நிற்கிறது .
மனத்தீயில்
உடலும் உள்ளமும் எரிந்துருகி
எரிமலை எனச் சீறுகின்றது .
பின்
உருகி வழிந்து
தீக்கற்களாக நிமிர்கின்றன
மறக்க முடியாத பொய்கள்
எரிக்க முடியாத பொய்கள்
சிலை மேல் எழுத்தாய்
பொய்மையின் வார்த்தைகள்
நின்று வலி தரும்.
மீண்டும் மீண்டும்
மனத்தீயில் குழம்பாகி
கொதிதெழும் நினைவுகளுடன்
சில்வியா பிளாத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
“மரணத்தை விட வலி தரும் கணங்கள்
உனக்கு மட்டுமா தோழி ?”
புகழ் பூத்த மரணத்தை விட
வாழ்வு முக்கியம்