சூரியாவின் 25 வருட நினைவுகள்.

விஜயலக்சுமி சேகர் (மட்டக்களப்பு இலங்கை)

viji-suriya2

viji-suriya

 

 

viji-suriya3 சூரியாவின் 25 வருட நினைவுகள். பசுமையாய் பலப் பல படிகள், கற்கள் தாண்டி 2016ம் ஆண்டுடன் அதன் வெள்ளிவிழா. சிறு துளியாய் ஒரு சில பெண்களின் சிந்தனையுடன் ஆரம்பித்ததுதான். வெள்ளம் அதன் கைக்கெட்டிய கரைகளையும் அரவணைத்தே செல்வதுபோல் இணைந்த பல பெண்களின் சிந்தனைகள் சூரியாவின் பலமானது. 25 வருட பயணத்தில் எத்தனையோ சவால்கள், வெற்றிகள், கொண்டாட்டங்கள். இணைந்து கொண்ட பெண்களின் வரலாறுகள். அவர்களின் கூட்டுறவால் உருவாக்கப்பட்ட சங்கங்கள் அதன் வளர்ச்சி. தனிப்பட்ட பெண்களின் கதைகள். இத்தனைக்கும் நடுவில் யுத்தத்தின் பாதிப்பை எதிர்கொள்ளல். பெண்களின் பாதுகாப்பை உரிமையை உறுதிப்படுத்தல். இத்தனையும் எதிர்கால சந்ததிக்கு படிப்பினையாகும் பயன்படும் பாடங்கள். இதற்கான பதிவுகள் எங்காவது இருப்பது தேவையாகும். 25 வருட முடிவில் பெண்கள் பயணத்தின் பதிவுகளை மீட்டெடுத்தல் முக்கியம். ஆகவே சூரியாவின் இருபத்தைந்தாவது வருட தின நிகழ்வுகளில் ஒன்றாக பெண்களின் கடந்தகாலப் பதிவுகளின் வெளியீடுகளும் மனச்சோலை நடுகையும் 03.11.2016 அன்று மயிலம்பாவெளியில் இடம்பெற்றது.

வெளியீடுகள்

1சங்கமி

viji-suriya-6jpg

பெண்களின் கதைகளும், பெண்களின் வரலாறுகளும் பெரும்பாலும் கிராமங்களுக்குள்ளேயே தேங்கிக் கிடக்கின்றன. இன்று நாம் பேசும் உரிமைகளும், பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்களும் , எமது நவ நாகரிக வளர்ச்சிகளும், ஒற்றுமை, சமாதானம், கூட்டுறவு போன்ற பதங்களும் கிராமங்களில் வாழ்ந்த பெண்களின் வாழ்வியலில் இருந்தே தோற்றம் பெற்றவையாகும். ஆகவே மானுட வாழ்வின் ஆதாரம் ஆரம்பம் கிராமங்கள் ஆகும்.

இத்தகைய புரிதலுடன்தான் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம் பெண்களின் சுய வளர்ச்சி, அபிவிருத்தி ஆகியவை பற்றிச் சிந்தித்துத் செயற்படத் தொடங்கியது. மட்டக்களப்பில் ஊர் ஊராகச் சென்று பெண்களுடன் இருந்து அவர்களை ஒன்றாக்கி கலந்துரையாடி அவர்கள் விரும்பிய பெயர்களில்; சங்கம் அமைத்து அவர்கள் வாழும் சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்ததும் செய்து கொண்டிருப்பதும் சூரியாவின் வரலாற்றில் மறக்க முடியாததும் இன்;றுவரை தொடரும் கதையாகவும் உள்ளது. இவ்வாறு உருவாக்கப்பட்ட சங்கங்களின் முக்கியத்துவம் அதன் சவால், வளர்ச்சி என்பன பற்றி “சங்கமி” கையேடு தமிழ் மக்களின் பண்பாட்டு இசைவடிவான வில்லிசை வடிவில் தருகின்றது. இதன் ஆசிரியைகளாக விஜயலட்சுமி சேகர், ஜெயதீபா பத்மஸ்ரீ உள்ளார்கள்.
(கீழே வில்லிசையில் இருந்து சில பகுதிகள்….)

அக்கா – உங்களுக்கெல்லாம் நடந்த யுத்தம் பற்றி தெரியும் தானே…அந்த நெருக்கடியான காலத்திலயும் ஆமி நடமாட்டமும் யுத்த வன்முறைகளும் ஏன் வீட்டு வன்முறைகளும் கூட குவிஞ்சு போய் கிடந்த முறக்கொட்டாஞ்சேனையில பெண்கள் தங்களுக்கேற்பட்ட வன்முறைகள தைரியமா ஆனா நுனுக்கமா அணுகி தீர்க்கிற வழிய பாத்தாங்க.

தோழி; 3 – அது மட்டுமா….ஆம்பிள வேல, பொம்பள வேல என்று பிரிச்சு வச்ச வேலைகள, இப்படி பிரிக்க வேணாம் எல்லாரும் எல்லா வேலையும் செய்யலாம் என்றும் காட்டினாங்க….

தோழி 1– ஆ…

தோழி 2 :- வாய பிளக்காத. அது எப்படி என்றா…விளையாட்டுக்கூடாகவே வாழ்க்கய புரிய வைச்ச முறதான் அது.

 

எனக்குள் நெருப்பு

viji-suriya5

கடலில் செல்லும் கப்பல் போன்று பெண்களின் வாழ்க்கை அலைகளை எதிர்த்தெதிர்த்துப் பயணித்துக்கொண்டே உள்ளது. ஒரு அலை முடிய முடிந்ததலை எனும் நிலையில்லை. தொடரலைகளாய் நீளும் பெண்களின் சந்ததிகள். இவர்களுள் உருவாகும் வேகம் அதன் வலிமை காது கொண்டு கேட்கிறோம். உணர்கிறோம் எனினும் தரித்து நின்று தன்னைத்தான் ரசிக்க பெண்களுக்கான இடைவெளி எங்கே… நேரம் எங்கே… நாம் சிந்திக்கின்றோம்.ஒவ்வொருவர் வாழ்வும் பெறுமதியானது. எனினும் பெண்களின் வாழ்க்கைக் கதைகள், அதில் உள்ள படிப்பினைகள் எங்கும் பதியம் வைக்கப்படுவதில்லை. பெண்களாலும் கொண்டு செல்லப்படுவதில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்வின் வடிவங்கள் கசங்கிய தாழில் வரையப்பட்ட கவிதை போன்று எங்கெங்கோ போடப்படும்….அள்ளி எறியப்படும். …. காலப்போக்கில் எந்தக் கண்களாலும் தொடப்படாமல், உணரப்படாமல்.., இல்லாமலே போய்விடும். எமது தாய் வாழ்ந்த கதை எமக்குத் தெரியாது. தாயின் தாய், அவள் நண்பி, அவள் சமூகம் வாழ்ந்த கதை அதற்குள் உள்ள பாடம், அதன் இயல்பு, எளிமை, போராட்டம், வெற்றி, அவள் வலிமை… தொலைத்து விடப்பட்டதுபோல் இனியும் நடந்து விடக்கூடாது என்பதில் நாம் அக்கறையுடையவர்களாய் உள்ளோம்.

“எனக்குள் நெருப்பு” சில பெண்களின் கதைகளைத் தருகிறது. இவர்கள்; எமது சமூகத்துள் எம்முடன் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் உறவுகளின் மாதிரிகள். இவர்கள் ‘சக்தி குழு” என்னும் பெயரில் இன்றுவரை தமது உரிமைக்காக போராடிவரும் பெண்கள். அவர்களுடன் ஒன்றித்திருப்பவர்கள். இன்னும் இவர்கள் பாதைகளில் பல வெற்றிகளையும் சறுக்கல்களையும் சந்திப்பார்கள். எனினும் எழுவார்கள். என்றும் வாழ்வார்கள். “எனக்குள் நெருப்பு” கையேட்டின்; ஆசிரியைகளாக சரளா இமானுவேல், விஜயலட்சுமி சேகர் ஆகியோர் உள்ளார்கள்.

எனது கதை

பெண்கள்
சமாதானம்
பாதுகாப்பு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் (1325)

(உரையாடல் வடிவில் அமைந்த இக் கையேட்டின் சில பகுதிகளிலிருந்து சில வரிகள்…)

வசந்தி : அம்மா நான் வீட்டை வந்துட்டேன்.

அம்மா : ஐயோ ராசாத்தி, ஏன் அம்மா பிந்தி வந்தனி? உனக்கு விருப்பமான மரவள்ளிக்கிழங்கு செஞ்சி வைச்சிருக்கன்

வசந்தி : இண்டைக்கு வகுப்பில ஆண் பெண்களின் நிலை பற்றி சுவாரசியமான விடயத்தை பார்த்தம்.
அம்மா : அதுல அப்படி என்ன சுவாரசியம் இருந்தது?

வசந்தி : அது என்னன்டா ருNளுஊசு 1325 எனும் ஐக்கிய நாடுகளின் சபையின் கொள்கை ஒன்றைப்பற்றி தெரிந்து கொண்டோம். அது சட்டரீதியான ஒரு ஆவணம் என்று சொன்னார்கள். அதுல இலங்கையில் போர்க்காலத்தில் நடந்த பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகளும் அதோடு சமாதானத்திற்கான போராட்டத்தில் பெண்கள் பங்குபற்றுவதும் பற்றி சொல்கிறது.

வசந்தி : செல்வி மாமியை இலங்கை ராணுவம் மயிலம்பாவெளியில பாலியல் துஸ்பிரயோகம் செய்தது போன்ற வன்முறைகளை தடுப்பதற்கு இந்த ஆவணம் எழுதப்பட்டிருக்கு. இப்படியான சம்பவங்களை நாம வெளிப்படுத்தும்போது இப்படியான சம்பவம் இனி எந்தப் பெண்களுக்கும் நடைபெறாமல் பார்க்கலாம்.

– ஆயுத மோதலில் ஈடுபடும் அனைத்துத் தரப்புக்களையும் ஆயுத மோதலின்போது பெண்கள், சிறுமிகள் ஆகியோரை பால்நிலைசார் வன்முறை குறிப்பாகப் பாலியல் வல்லுறவு, வேறு வகையான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் Nனைய வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானம் 1325 (ருNளுஊசு 1325) கோருகின்றது-

இக் கையேடு ஆக்கம் – மரிலின் வீவர். மொழிபெயர்ப்பு – ஆர்த்தி அச்சுதப்பா

மனச்சோலை
பெண்களுடனான இருபத்தைந்து வருட பயணங்கள்.அதில் பல தடைகள், ஏற்றுக்கொள்ளல், அரவணைப்புக்கள், மாற்றங்கள்…. பாதை இன்னும் நீண்டுகிடக்கிறது. காலங்கள் சுகமாகவும் சுமையாகவும் நினைவுகளைச் சுமந்துள்ளது. நினைவுகள் சுமந்து செல்வதற்கு மட்டுமல்ல. இவை இனி ஆறுதல் அளிக்கும் குணப்படுத்தும் மருந்தாக மாற்றம் பெற வேண்டும்.

03.11.2016 அன்று தமது நினைவுகளின் சாட்சியாக மரக்கன்றுகளை பெண்கள் தம் பாதையின் மருங்கில் தூக்கி வைத்தனர். அவர்கள் வைத்த ஒவ்வொரு மரத்திற்கும் ஒவ்வொரு கதை உள்ளது. நீண்ட காலத்தில் மரங்களுடன் இணைந்திருக்கும் பெண்களின் கடந்த கால காலத்தின் கதைகள் இவர்களினால் உருவாக்கப்பட்ட இந்த மனச்சோலையின் கீழ் ஆறுதலடையும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *