மு. ரமேஸ்வரி ராஜா, தாப்பா (மலேசியா)
முன்பு தட்டிக்கேட்ட போராட்டம்
இன்று தட்டிப்பறிக்க முண்டியடிக்கிறது
இருக்கiயின் தராசு இறங்காமலிருக்க
நீயா நானா குடுமி பிடியில்
அனல் க்கிய கரும்புக்கைகள்
இன்று பற்பசை விளம்பரத்திற்கு
கைகோர்த்து நிற்கிறது
கோஷம் இசைத்த ஜால்ரா வித்துவான்கள்
புன்னகையோடு புறப்பட்டு மறைந்தனர்
முகத்தில் படிந்த கரியைத்
துடைப்பதற்கு
காவலர்கள் பதுங்குகிறார்கள்
வழியில் வலிகளை
பொறுக்கிக் கொண்டு
அடுத்த கால நாடக ஒத்திகைக்கு
பூனை மிரள்கிறது தன்னை
மிருகத்தோடு ஒப்பிட்டுப் பேசிய
மானுடனைப் பார்த்து