– வினோதினி –
முக மூடி மனிதர்கள்
சொல்வதில்லை
மூங்கில் காடுகளை
எரிக்கப் போவதை
எரிந்த காடுகள்
கரைவதில்லை
எஞ்சிய சாம்பலில்
கண்ணீர் சிந்தி
காற்று மூங்கிலிடம்
புரிவதில்லை
இசைக்கான எந்த
ஒப்பந்தத்தையும்
தறிக்கப்படும் மூங்கில்கள்
அழுவதில்லை
தண்டுகளைப் பிரிந்த
சோகத்தில்
இரைதேடும் படலத்தை
நிறுத்தி
கோழி தன் குஞ்சுகளை
மறிப்பதில்லை
வானத்துப் பருந்திற்கு அஞ்சி
புதைந்த விதை மடிவதில்லை
மூச்சு முட்டியதாய் நினைத்து
நிமிர்ந்து அது முளைத்தெழுமே
புது வாழ்வை வாங்கி வந்து.