பூமி தின்னி

இன்பா சுப்ரமணியம் (இந்தியா)
 
வன் பூமி தின்னி –
வாழ்விடங்களை விட்டு
பூர்வ குடிகளை
புலம் பெயர்ப்பவன்

அவன் நர மாமிசி-
குடிகளை தீயிலிட்டு
சிதைத்து
சிங்கங்களிடம் தின்ன கொடுப்பவன்

அவன் ஸ்த்ரி வேட்டையன் –
வயது வேறுபாடின்றி பெண்களை
வன் புணர்வில்
யோனி சிதைத்தவன்
தேசம் முழுவதையும்
இடுகாடாக்கி தன் சகாக்களோடு
மையத்தில் அமர்ந்து
பிணவாடை நுகர் கிளர்ச்சி அடைபவன்

கூரால் சூல் கொண்டவளை பிளந்து
குழந்தை கண்டு
குழந்தையின்
வயிறு பிளந்து
சுடு குருதி குடித்தலைபவன்
அப்ப்பூமி தின்னியின்
உடலெங்கும் பரவி,
கிளைதுக்கிடகிறது நச்சுக்கொடி.
பூமியெங்கும் நிரவிக்கிடக்கிறான்
சுடு குருதி குடித்த அந்நர மாமிசி .

6 Comments on “பூமி தின்னி”

  1. im just frozen. all the happenings for human in war is not digetable. “pina vaadayil nugar kilarchi adaibavan” . this line is bench mark of the woolfs. boomiyengume kilaithukidakirathu nachukkodi. is 1000% tru.whr v liv? how to liv? i request the poets to write on soulutions.V hav heard enough pains wats happenig yet. But wats the soulution? whn ppl in kovai fought for sending wepons r still in prison and fighting for the same. Im with blood tears my dear poet.

  2. கூரால் சூல் கொண்டவளை பிளந்து
    குழந்தை கண்டு
    குழந்தையின்
    வயிறு பிளந்து
    சுடு குருதி குடித்தலைபவன்
    அப்ப்பூமி தின்னியின்
    உடலெங்கும் பரவி,
    கிளைதுக்கிடகிறது நச்சுக்கொடி.
    பூமியெங்கும் நிரவிக்கிடக்கிறான்
    சுடு குருதி குடித்த அந்நர மாமிசி . ROMBA KASTMA IRUKKU AMMU… KANDIPPA ETHA MATTHA NENGA THAN ETHAVATHU PANNANUM…….. ENNA PANNA MARUM AMMU?

  3. பூமியில் ஆயுதங்களுக்காகத்தான் அதிகம் செலவிடுகிறோம். மனிதனின் ஆதிக் குண்மாகவும்
    அடிப்படைக் குணமாகவும் போர் இருந்து கொண்டிருக்கிறது. ஆணும் பெண்ணுமாக குகைகளில் வாழ்ந்த நிம்மதியைக்கூட நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அறிவியலில் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம்? ஆனால், வாழ்வில், சக மனித உறவுகளில், உரையாடல்களில், பொருளாதாரப் போட்டிகளில், தான் என்னும் அகங்காரத்தை எல்லா மானுட அலகுகளிலும் நிலை நிறுத்துகிற போர்க் குணத்தில் என முழு உலகமே எவ்வளவு பின்தங்கிக் கிடக்கிறது. பெரும் கேவலம் தோழிகளே.

    SAMAYAVEL

  4. பூமியில் ஆயுதங்களுக்காகத்தான் அதிகம் செலவிடுகிறோம். மனிதனின் ஆதிக் குண்மாகவும்
    அடிப்படைக் குணமாகவும் போர் இருந்து கொண்டிருக்கிறது. ஆணும் பெண்ணுமாக குகைகளில் வாழ்ந்த நிம்மதியைக்கூட நாம் இழந்து கொண்டிருக்கிறோம். அறிவியலில் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம்? ஆனால், வாழ்வில், சக மனித உறவுகளில், உரையாடல்களில், பொருளாதாரப் போட்டிகளில், தான் என்னும் அகங்காரத்தை எல்லா மானுட அலகுகளிலும் நிலை நிறுத்துகிற போர்க் குணத்தில் என முழு உலகமே எவ்வளவு பின்தங்கிக் கிடக்கிறது. பெரும் கேவலம் தோழிகளே.

  5. oru thamizhanin chindhayiludhithu neruda veandiya rathamkodhikkaveandiya vishayamidhu, nenju porukkudhillai indha nilaiketta manidharai ninaithuvittaal, manidharin uruvil maakkalaivida kodooramaana seyal purindhu konu irukkiraargal, maakkalaavadhu pasi edukkumbodhu mattumdhaan matravaigalai kollum, aduvum adharkku dharumamaakkappattadhu, aanaal ivargalo manidharaikkondru uyirottamulla sudukurudhi kudikkiraargal, engea thirundha pogiraargal ivargal…..? vaalthukkal ungaludaya indha muyarchi thoivadayaamal menmealum thodarndhida, oru vizhippunarvu, oru chindhayaithoondum puratchi migapperiya nalla muyarchi endrum anbudan ivan ilayavan thamizhan

  6. Dear oodaru team,

    v human always want to escape from pains. v skit the pain and v just take care of ourself and oue belongings. “thani oru manithanukku unavillaiyenil jagithinai azithiduvomnu sonnaar baarathi. indru jagame azinthaalum nam makkale langaikku sendru angu ullavargalukku parisu koduthu ,virunthu undu varugiraargal. athigaara varkkam endrume sugamaaga irukirathu. anaarin petti, thoazikku, kanavanai izantha thesam, pondaravai padikkum pozuthu valikkuthu.prasava vairaagiyam pola meendum ennugiren, oodaru padikka koodaathu.. naan oru sgajamaana manushiyaaga valam varavendum. mudiyavillai. malasiya manthiriyai yemaatri appavi yethiligalai pin vilangittu vaithirukkum nilai paarkirom. Thanthai selva avargalin poraattam patri inba avargal pesa kettullen.innum neelum intha nilai kurithu ennathaan vidivu? ipadi ezthuvathum,athai padithu vethanai paduvathumaaga varalaaru kruthyaal ezuthikondu irupathumaaga ethanai kaalam pogavendum?koduramaana vali thaan endraalum ,ungal kavithai padikum pozuthu ,karuvil sumantha kuzanthayai thottaa thuzaithai pathirikkayil kandathu kaatchiyaaga virigirathu.( thamiza epadi type panreenga?) thamizeezam malara, makkal santhoshamaaga vaazvathai padipatharkkaga kaathirukkum, sujatha.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *