பள்ளியில்படித்துக்கொண்டிருந்தசமயம்என்றுநினைக்கிறேன். சுஹாசினிஎடுத்த ‘இந்திரா’ படம்குறித்துஎதிர்பார்ப்புகள்இருந்தன. பம்பாய்படமும்வெளியாகிஇருந்தது. ‘பம்பாய்’ வெற்றிபெற, இந்திராபடம்தோல்வியடைந்தது. அப்போது முன்னணிவாரஇதழ்ஒன்றில்இப்படிஎழுதிஇருந்தார்கள்: “மதவெறிஎன்றசூடானவிஷயத்தைக்கையிலெடுத்துக்கொண்டுகணவர்பாக்ஸ்ஆஃபிஸ்ஹிட்கொடுத்துவிட்டார். அரதப்பழசானசாதியைக்கையிலெடுத்துக்கொண்டுமனைவிதோல்விப்படம்தந்துவிட்டார்’
‘இந்திரா’ என்றமொக்கைப்படத்தில்சாதிகுறித்தகுறிப்பிடும்படியாகஉண்மைகளைப்பேசவில்லைஎன்றாலும், சாதிஎன்பதுஅரதப்பழசான, ஏதோபெரியம்மைபோல்சுதந்திரஇந்தியாஒழித்துவிட்டநோய்என்றுதான்நகரத்துப்பிள்ளைகள்நம்பிஇருந்தோம். அந்தஅளவுதான்இன்றளவும்இருக்கிறதுநகரத்துமக்களுக்குச்சாதிகுறித்தானவிழிப்புணர்வு, அல்லதுஇந்தக்கல்விஅப்படித்தான்பயிற்றுவித்தது (இன்றளவும்பயிற்றுவிக்கிறது) என்பதேசரி.
சமீபகாலமாக, சமூகவலைத்தளங்கள்வாயிலாகமுக்கியஊடகங்களில்வராதசெய்திகளையும்அறிந்துகொள்ளவாய்த்தபிறகேபுரிகிறதுஎவ்வளவுஅறியாமையில்உழல்கிறோம்என்று.
‘திவ்யா’இளவரசன், ‘கௌசல்யா’சங்கர், கோகுல்ராஜ்ஆகியோர்களின்கொலைகள்நிகழ்ந்தசிலநாட்களுக்குச்சமூகவலைத்தளங்களிலும்பரபரப்பாகப்பேசப்படுகிறதேஒழியநீதிஎன்பதுஎப்போதுமேதாமதமாகக்கூடக்கிடைப்பதில்லைஎன்பதுதான்கண்ணெதிரேகாணும்உண்மை.
ஒருசுவாதிமரணமோநிர்பயாமரணமோஏற்படுத்தும்அதிர்ச்சியில்நூற்றில்ஒருபங்கைக்கூடஏன்ஏற்படுத்துவதில்லைஎன்பதுஉரத்தும் ஒவ்வொருவரும் நமக்குள்ளும் இருவிதமாய்க் கேட்டுக் கொள்ள வேண்டியகேட்கவேண்டியகேள்வி.
சமீபத்தில்கேரளத்தில் ‘ஜிஷா’என்கிறதலித்பெண்கொடூரமானவன்புணர்வுக்குஆளாக்கப்பட்டுக்கொலையானசம்பவம்பரபரப்பைஏற்படுத்தியது. ஆனால்ஹிலாரி,ட்ரம்ப், அமெரிக்கத்தேர்தல்கள்குறித்துஆராய்ந்துகருத்துகள்வைத்திருக்கும்இதேurban elite, பாதிக்கப்பட்டபெண்ணுக்குநீதிவேண்டும்தான்ஆனால் ‘தலித்’ என்றுஏன்வகைப்படுத்துகிறீர்கள்என்றுகோபமுறக்கேள்விகள்தொடுத்ததுஎல்லாம்நினைவுக்குவந்துஅவ்வளவுஅறியாமையிலாதிளைக்கிறோம்என்றுவருத்தத்தில்வாயடைக்கவைக்கிறதுஇந்தப்புத்தகம்.
2011 முதல்பல்வேறுஇதழ்களில், தமிழகத்தின்பலஊர்களிலும்நிகழ்ந்தசாதிக்கொடுமைகளையும்தலித்களுக்குஎதிரானவன்முறைகளையும், அவற்றின்அரசியல்சமூகப்பின்னணிகளையும்ஆதாரங்களுடன்அலசிஇருக்கும்கட்டுரைகளின்தொகுப்பேஇந்தப்புத்தகம்.
தலித், சாதிஎன்றுசொன்னாலேஏதோபிரிவினைவாதம்பேசவருவதாக, ஏதோதகாததைச்சொல்லிவிட்டமாதிரிப்பதறுபவர்களிடம்எப்படிச்சொல்ல, கூசாமல்சாதிப்பெயரைசிலர்பின்னால்போட்டுக்கொள்ளும்போதும், எங்கள்நாட்டார்சமையல்என்றுபெருமைகொள்ளும்போதும், ஐயர்வேளாளர்முதலியார்மேட்ரிமொனிஎன்றுவிளம்பரங்கள்வரும்போதும், அய்யோஇதெல்லாம்ஒழியாமல்இந்தசாதிக்கொடுமைகள்ஒழியசாத்தியமேஇல்லையேஎன்றுநமக்குஇதயம்பதறுவதை.
‘வாச்சாத்தி’ என்றால்எங்கிருக்கிறது? அங்குஎன்னநடந்ததுஎன்றுதெரிந்துகொள்ளவும்,
கூட்டுவன்புணர்வுசெய்யப்பட்டசிறுமியின்குடும்பத்தைஊரேவிலக்கிவைத்ததையும்…
சாதிவிட்டுச்சாதிதிருமணம்செய்ததற்காய்காவல்நிலையத்தில்வைத்தேதந்தைமகளின்கழுத்தைஅறுத்ததையும்…
ஊர்பார்க்ககாதிலும்மூக்கிலும்விஷம்ஊற்றிக்காதல்தம்பதிகளைக்கொன்று, பின்அவரவர்சாதிஇடுகாட்டில்புதைத்ததையும், பழியைப்பாதிக்கப்பட்டஆணின்குடும்பத்தின்மீதேதிணித்ததையும்…
மேலும், தர்மபுரி, நத்தம்மரக்காணம்ஆகியஇடங்களில், பொருளாதாரத்தில்முன்னேறிதங்கள்தாழ்த்தப்பட்டஅடையாளத்தைவெற்றிகொண்டுகடப்பதைப்பொறுக்கமுடியாமல்இருபதுஆண்டுவன்மத்தைத்தீர்க்கும்முகமாய்ப் பெட்ரோல் குண்டுகள் எறிந்து வாழ்வாதாரத்தை அழிப்பதே குறியாய்த் திட்டமிட்டுத் தாக்குதல் நடந்ததையும்,
அந்தவன்முறைவெறியாட்டத்தைத்தூண்டிவிட்டபாட்டாளிமக்கள்கட்சியைப்பற்றியும்…
எப்படிக்காவல்துறையும்எப்போதுமேதலித்களுக்குஎதிரானகொடூர்மானவன்முறைக்குத்துணைபோகிறதென்பதையும்…
இன்னும்… இன்னும்…புள்ளிவிவரங்களாய்நூற்றுக்கும்மேற்பட்டசம்பவங்களைநம்பவேமுடியாதஅளவுகொடூரங்களைச்சரளமானஎழுத்துநடையில், மிகையாக்கல்சிறிதும்இன்றி,ஆனால்அழுத்தமாய்ச்சொல்லிக்கொண்டேசெல்லும்இந்தப்புத்தகத்தை ‘இப்பல்லாம்யாருசாதிபாக்குறா’ என்றுநம்புபவர்கள்நிச்சயம்படிக்கவேண்டும்.
வெளியில்சிறிதும்தெரியாவிடினும்எல்லார்மனங்களிலும்புரையோடிஇருக்கும்சாதிவெறியைஅழித்தொழிக்கஅதைவெளியேற்றவைக்கவேண்டியதுஅவசியம். அதற்குக்காதலைவிட வலியசக்திஇல்லைஎன்பதுசத்தியமாகப்புலனாகிறது.
எந்தசூழலிலும்காதலைவிட்டுக்கொடுக்காமல்கொடூரமாகமரணத்தைச்சந்தித்தவர்களின்வாழ்வுஎவ்வளவுஅற்புதமானது?
‘யாரைலவ்பண்ணாலும்கல்யாணம்எங்கசாதிக்குள்ளதான்’ என்றுசாதிமேட்ரிமொனிவிளம்பரங்களில்தொலையும்மாக்களைசிறிதளவேனும்சுயஅருவருப்புகொள்ளவைக்கும்இப்புத்தகம்.
நூல்: சாம்பலாகவும்மிஞ்சாதவர்கள்
ஆசிரியர்: கவின்மலர்
விலை: 150
பதிப்பகம்: எதிர்வெளியீடு