எஸ்தர் – (மலையகம்) திருகோணமலையிலிருந்து
இலங்கையில் இன்று சூடுபிடித்திருக்கும விடயங்களாக சர்வதேச ஊடகததையும் சர்வதேசத்தைளும் இலங்கைளின் பால் திருப்பியுள்ளது.வடக்கு முதல்வரின் எழுக தமிழ் பிரச்சார பேரணியும் அதன் போது அவர் சொன்ன விடயங்களை அரசல் புரசலாக தென்னிலங்கைளில் இனரீதியாக சிங்கள மக்களை திசைதிருப்பிகிறதான ஆர்ப்பாட்டங்களும் முதல்வருக்கு எதிரானக் கண்டனப் பேரணிகளும் நாளுக்கு நாள் பரபரப்பை உண்டுப்பண்pக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்த இரண்மு வருடங்கள் அண்மித்த நிலையில் மலைளகத்தின் சம்பளப் போராட்டம் ஒரு கவனயீர்ப்பை பெற்றுள்ளது. முழு மலையகம் எங்கும் மக்கள் தங்களது நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொள்ள தொழிற்சங்கங்களுக்கு உதிராகவுமட் கூட்டு ஒப்பந்நக்காரர்களுக்கு எதிராகவும் வீதிகளிலட இறங்கி விட்டனர்.நேற்றைய தினத்திலும் போராட்டத்தின் உச்சக்கட்டமாக தீக்குளிக்கவும் இளைஞர் ஒருவர் முயற்சித்தமை இன்னும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
பெருந்தோட்ட மக்களுக்கு இது புதிதல்ல அனேக தடவைகள் தங்களின் போராட்டத்தை முன் வைத்து மக்கள் மெதுவர்க வேலை செய்தல், அடையாள வேலை நிறுத்தம் பணி புறக்கணிப்பு கவனயீப்ப்பு போராட்டம் என சம்பள உயர்வுக்காக போராடினாலும் தொழில்சங்கங்களின் வெத்து பேச்சினை நம்பியும் அரசியல்வாதிகளின் கதைகளை நம்பியும் அவ்வப்போது கைவிட்டனர்.
இன்று அவர்கள் இழவுக்காத்தக்கிளிகளாக கடந்த அரசாங்கங்களினாலும்,இன்றைய அரசாங்க்த்தினாலும் ஏமாற்றத்துக்கு உள்ளாகி வருகிறமை அனைவரும் அறிந்த உண்மையே!!.பெருந்தூட்ட மக்களின் பிரச்சனை அவர்களின் அடிப்படைப் பிரச்சனையே. அத்துடன் அவர்கள் காணி உரிழம அற்றவர்களும் இந்த இலங்கையின் இந்து சமுத்திரத்தின் கழன்று விழாத கண்ணீர் துளியாகிப் போனார்கள.; எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து கொள்ளும் மலையகக் கட்சிகள் மக்களின் நியாயமான சம்பளத்தை தோட்டக்கம்பனிகளிடம் இருந்து பெற்று தர தவறிவிட்டனர்.
கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஆறுமுகம் தொண்டமான் தலைமைளிலான கட்சி(இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) கூட்டு ஒப்பந்தக்காரர்களுடன் இணைந்து 1000 ருபாவைப் பெற்று தருவோம் என் 2014 ம் ஆண்டு மகிந்த அரசாங்கத்தின் வெற்றிக்காக மல்லியப்பு சந்தி அட்டனில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.மகிந்தவின் தோல்விக்கு பின்னர் காணாமல் போய்விட்டனர் இங்கு மீண்டும் கைவிடப்பட்டவர்கள் தோட்ட தொழிலாளிகளே!!
நல்லாட்சி அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தில் வழங்கப்ட்ட தனியார் நிறுவன உத்தியோகத்தர்களுக்காள 2500 படி உயர்வைளும் 2016 ம் ஆண்டு ஆடி , ஆவணி மாசத்துக்குரியதுமே தோட்டக் கம்பனிகள் வழங்கியது.இது அரசாங்கத்தின் சட்ட பேரவை முலமே வழங்கப்பட்டது ஒழிய இதற்கும் கூட்டு ஒப்பந்தக் காரர்களுக்கும் சம்பந்தமே இல்லை.
கூட்டு ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தத்ததை புதுப்பிக்கவேண்டும் மட்டுமல்ல வழங்கப்பட வேண்டிய நியாயமான 1000 ருபா சம்பள உயர்வையும் 18 மாத நிலுவைப் பணத்தையும் கட்டயம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.கம்பனிகளின் கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் போது, அடுத்த கூட்டு ஒப்பந்தம் எவ்வளவுக் காலம் செய்யப்படவேண்டும் என்ற தெளிவு ஒப்பந்தத்தில் காணப்படாமையே இத்தகைய இழுத்தடிப்புக்குக் காரணமாகும். அண்மையில் பாராளுமன்றத்தில் அமைச்சர் திகா அவர்களின் தலைமையிலான கட்சி ஒப்பந்தம் புதுப்பிக்கவேண்டிய காலத்தை நிர்ணயிக்க பிரேரணை ஒன்றை கொண்டு வந்துள்ளது. எது எப்படிபோ மக்களுக்க இந்த விடயத்தில் தீர்வுக்கிட்டவேண்டும்.
இலங்கையில் ஒரு மாதம் 40000 ருபா தேவைப்படுகின்றது ஒருக் குடும்பத்தை கொண்டு நடத்த, இதில் மலையக மக்களின் நாட்கூலியில் வேலை செய்கிறார்கள்.அவர்களின் துயரோ எண்ணற்றது. சரியான வீடும்,காணி உரிமையற்றவர்களாகவும் அடிப்படை வசதிகள் குன்றி, சரி விகித உணவு அற்றவர்களாய் கர்ப்பிணிகளும் சிறுவர்களும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.ஒரு நேர உணவுக்கு கரும்பை உண்டு தம் குடும்ப பசிப்போக்கிய மக்களும் இருக்கறார்கள்.அரசாங்கம் நேரடியாக இவர்களின் நியாயமான சம்பளப் போராட்டத்தில் தலையிட்டு தொடரும் அவர்களின் துன்பங்களுக்கு பதில் அளிக்கவேண்டும்.
இலங்கையின் அதிகமான வறுமைக் கோட்டின் கீழ் பதுளையும் நுவரெலியா மாவட்டமும் விளங்குகின்றது.இந்த வறுமையினால் இளையவர்கள் தோட்டங்களில் தொழில்புரிவதை விட்டு கொழும்பு கண்டி என தென்னிலங்கைக்கு செல்கின்றனர் சாதாரண உணவகங்களில்( எடுபிடியாளர்களாகவும் யுவதிகள் கொழும்பு வர்த்தக வலயங்களில் ஆடைதொழிற்சாழலகளில் தொழில் தேடியும் செல்கின்றனர்.ஏனையோர் வடகிழக்கின் பணக்காரர்களின் வீடுகளுக்கும் கொழும்பின் சிங்களவர்களின் வீடுகளுக்கும் வேலையாட்களாக செலகின்றனர்.உழைக்கும் பணத்தை அவர்கள் தங்களின் வீடுகளுக்கு அனுப்பிவிட்டு வருடத்துக்கு ஒருமுறை வரும் தீபாவளி பண்டிகைக்கும் பொங்களுக்கும் செல்வதுண்டு!!இதிலே அதிகமான சழூக சிக்கல்களும் உண்டு!!தென்னிலங்கையில் சிறுவர்கள் தொழில்புரிவது ஒப்பிட்டளவில அண்மைய காலத்தில் குறைவடைந்தாலும் சிறுவர்கள் தொடர்ந்தும் ஆங்காங்கே தொழில் செய்கின்றமைக் குறிப்பிடத்தக்கது!!
காரணம் எல்லாம் மலையக மக்களுக்கு வேறு தெரிவு என்பது இன்மையேயாகும்.நாள் மாதம் வருடம் என தெடர்ந்து தனது உழைப்பையும் நேரத்தையுமே தேயிலைத் தோட்டத்தில் செலவிடுகின்றனர்.தனிதேசியம் கேட்கவில்லை தனி நாடும் கேட்கவில்லை நியாயமான தங்களின் உழைப்பையே கேட்டு போராடுகிறார்கள்.இன்றைய உலகம் தொழில் நுட்பத்தை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு தனிதனி மனிதர்களாக மக்கள் பிரிந்துப் போகும் நிலையில் 1000 ரூபாவுக்கு கூலிப்பெறுவதற்க்கு இறுக்கமான கூட்டு ஒப்பந்நக்காரர்களிடமும்,நல்லாட்சி என்ற பெயர் பலகை மாட்டியிருக்கும் அரசாங்கத்தஜடமும் வீதியில் இறங்கி மண்டியிட்டுள்ளனர். காலம்காலமாக சுமந்து வரும் கொழுந்து கூடைகளில் கொழுந்துகளுடன் இவர்களின் போராட்டத்தின் வெற்றியும் நிறைய வேண்டும்.இதற்கு புலம் பெயர் சமூகமும மலையக மக்களின் அடிப்படை துன்பங்கள் தீர்வடைய தங்களின் உதவும் கரங்களை நீட்டுவார்களா??