– யாழினி யோகேஸ்வரன்-
விறைத்துப் போன
விரல்களுக்கிடையில்
குளிர்தலைகத் தணிக்கும்
திண்மமொன்று
மெது மெதுவென மிருதுவாக்கிக் கொண்டிருக்கிறது
நடுங்கும் என் தேகத்தை
இந்தத் தனித்த
மழைக்கால இரவுகளில்
நீயற்றிருத்தலென்பது
வினாக்கள் இல்லாத
விடைகளைத் தேடுவது
போலாகும்
இருண்ட சாமம் ஒன்றில்
ஒளிர்ந்த விழிகளினூடு
நீர்த் திரவமொன்று
ஓசையின்றி வெளியேறுகின்றது
காது , கன்னங்கள் அளைந்து
திண்மம் புகையெனக் கிளம்ப
மீண்டும் கையிலெடுக்கின்றேன்
நீயற்ற இரவுகளை நகர்த்த
தேகம் மெதுமெதுவாய் மிருதுவாகிக் கொண்டிருக்கிறது
திண்மம் தீதெனத் தெரிந்தும்,
என் உயிர் குடிக்கும் வரை