ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகளுக்கு எமது அஞ்சலிகள் .

eelam womens writies 1 kuramahalkuramagal_1

 

ஈழத்தின் மூத்த பெண் படைப்பாளி குறமகள் ஆவார். இயற்பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பயிற்றப்பட்ட ஆசிரியை. பட்டதாரி.குறமகள், துளசிகா, சத்யபிரியா, ராசத்திராம், பதமினிபிரியதர்ஷினி, கோமகள், காங்கேயி, சாதிக்கனல் என பல புனைபெயர்களில்  இலக்கிய உலகில் எழுதி வந்தவர் . குறமகளின் இழப்பு ஈழத்து பெண் இலக்கியத்துக்கு ஒரு பேரிழப்பாகும். .இவரது எழுத்துக்கள் ஒரு வரலாற்று ஆவணமாகும்.


காங்கேசன்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவரது இயற் பெயர் வள்ளிநாயகி இராமலிங்கம். பெண்கள் பத்தாம் வகுப்புடன் திருமணம் செய்த காலத்தில் இவர் இந்தியா சென்று பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவியாக “நாடகக் கல்வி” பயின்றார். பெண்கள் பாடசாலைக்கு வெளியே நாடகத்தில் நடிக்க அஞ்சும் அக் காலகட்டத்தில் நாடகக் கல்வியை தேர்வு செய்தமை மிக துணிச்சலான செயலாகும். இவர் யுவதியாக இருந்த காலத்தில் யாழ்ப்பாணத்தில் கார் ஓடிய சில பெண்களில் குறமகளும் ஒருவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவர் எழுத்துலகிற்கு வந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடந்த பல வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார். என்பது வயதை நெருங்கும் குறமகளை பல இலக்கய கூட்டங்களில் ஒக்சிசன் சிலிண்டருடன் காணக் கூடியாத இருக்கும். பொதுவாக இந் நிலையை அடையும் எவரும் வீட்டை விட்டே வெளியே வருவதில்லை. மிகவும் மனத்துணிச்சலுடன் எவரது உதவியுமின்றி இவர் உலா வருகின்றார். இன்றும் பல பத்திரிகைகளில் எழுதி வருகின்றார்.

இவரது பெண்ணிய அணுகு முறை இன்றைய பெண்ணிய அணுகு முறையில் இருந்து வித்தியாசப்படுகின்றது. குடும்பம் என்ற அமைப்பு உடைபடக் கூடாது என்ற கவனத்தை இவரது எழுத்துக்களில் காணலாம். எங்கல்ஸ் குறிப்பிடவது போல் “ஒடுக்குமுறையற்ற ஆணாதிக்க சிந்தனையில்லாத குடும்ப முறை” தான் இவரது தேர்வு எனலாம். குடும்ப அமைப்பு பெண் ஒடுக்குமுறைக்கு ஒரு மிக முக்கிய பிரதான காரணி.
தனது கருத்துத் தளத்தை விரிபுபடுத்தும் நோக்குடன் தேடல் அதிகமிக்கவர். மனுஸ்யபுத்திரனுக்கும், ஜெயமோகன்களுக்குமிடையில் ஒளிந்துள்ள பெண் ஒடுக்குமுறைச் சிந்தனையை வெளிப்படையாகவே விமர்ச்சிக்கும் துணிச்சலும் இவருக்குண்டு.

 

kuramakal-300x249

2008 –  பெண்கள் சந்திப்பில் குறமகள்

http://www.oodaru.com/?p=5434

http://www.oodaru.com/?p=5201#more-5201


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *