ஆசியாவின் சேரி குடிசை என்று உலகமே அலட்சியப்படுத்தும் தன் தாராவி வாழ்க்கையை தன் மித்தி நதிக்கைரை மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களை மனித நேயமிக்க பெருமைகளைத் தன் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்துது வருபவர் புதியமாதவி .கவிதை, சிறுகதை, பெண்ணிய நுண்ணரசியல், இலக்கிய விமர்சனம், மொழியாக்கம் என்று விரிகிறது இவரது படைப்புக்கள். இவர் சமரசமின்றித் தன் கருத்துக்களை முன் வைப்பதில் முன்னணியில் நிற்பவர். ஆணின் விடுதலை எப்போதும் சமூகவிடுதலையாகவும் அதே நேரத்தில் இச் சமூகத்தினல் சரியாதியாக இருக்கும் பெண்ணின் விடுதலை மட்டும் தனித்து பெண் விடுதலையாகவும் இன்று வரை தொடர்கிறது பெண்ணிய செயற்பாட்டாளரை இநாம் இனிச் சமூகச்செயற்பாட்டாளராக அடையாளம் காணப்பழகவேண்டும் என்று கூறும் புதியமாதவி பெண் ஆண் பாலினப் பாகுபாடுகளைக் கடந்த நிலையில் இந்த மொத்தப் பூமிüக்கும் சொந்தமான ஒரு மானுட விடுதலையை நேசிப்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.