ந.மாலதி
வன்னி மண்ணிலே அரியாத்தை என்ற பெண்ணைப்பற்றி ஒரு புகழ் பெற்ற கதையுண்டு. இது சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றதாக சொல்லப்படுகிறது. ஆண்களால் அடக்கமுடியாத ஒரு மதம் கொண்ட யானையை அரியாத்தை அடக்கினாள். ஆனால் இது நடந்து சிலநாட்களுக்குள் அவள் நஞ்சூட்டப்பட்டு இறந்து கிடந்தாள். அரியாத்தையின் சாதனையும் அவள் கொடுத்தவிலையும் இன்றும் உயிரூட்டுவதற்காக கையாளப்படுகிறது. ஆனால் இங்கே சேர்க்கபட்டிருக்கும் விடுதலைபெண் போராளிகளின் எழுத்துக்கள் அரியாத்தையின் கதையைவிட உயிரூட்டக் கூடியவை. இவற்றை எழுதிய போராளிகளில் மிகவும் அறியப்பட்டவர்களான பாரதி,கஸ்தூரி,வானதி மற்றும் மலைமகள் யாரும் உயிருடன் இல்லை அவர்களின் எழுத்துக்கள் உயிர்ப்புடன் …