மு.,. ரமேஸ்வரி ராஜா .தாப்பா
இரத்த நாளங்களில் புகுந்து
சில வேளைகளில் சூடாக்கிறாய்
பல வேளைகளில்
சுருங்கிப் போகவும் செய்கிறாய்
ஈரம் வரண்டகண்கள்
சிமிட்டி சிமிட்டி
அடங்காமல் அங்கலாயப்பு செய்து
கொண்டுதான் இருக்கிறது.
திசைக்கொரு முகம்
ஒரே மேசையில் உன்னை கள்ளத்தொடர்பு
செய்கிறது
சில்லறையைப்பார்த்து
பழகிப்போன
என் வீட்டு உண்டியல்
உன்னைத் திருட
நினைக்கிறது
நீ அதை கொன்று
வெல்வதால்
நிலாச்சோறு
ரயில் சிநேகிதம்
வசப்படுத்திய வாசிப்பு இன்று
உன்னில் வாடிக்கை
பேசிக்கொணஇடாய்
இன்று என்னைக் கூட
உன்னில் தான்
பதிவிறக்கம் செய்து
பார்க்கிறேன்
விந்தையும் ஆகிறேன்.
மனச்சாட்சி புலம்புகிறது
நான் நானாகவே
இனி எப்போது?