அடையாளம்

உமா (ஜேர்மனி)

தந்தையின் மடியமர்ந்து
மூன்று மொழியிலும்
அகரத்தை உச்சரித்த போது
எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை

புதுவருடத் தினத்தில்
கிறிபத்தும் லுனமிறிசும் சாப்பிட்டபோதும்
அம்மாவுடனும் சித்தியுடனும்
ஆம்பல் பூவும் பூ வட்டியும் ஏந்தி
விகாரைக்குச் சென்ற போதும்
எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை
யாழ்தேவியில் அமர்ந்து
அம்மம்மாவைப் பிரிந்து செல்லும் சோகத்தில்
அழுது குழறி  
வெள்ளை இடியப்பமும் பொல் மல்லுங்கும்
சாப்பிடும் ஆர்வத்துடன்
பயணம் நெடுகிலும்
சிங்களப் படப்பாடல்களை
அண்ணாவுடன் உரக்க பாடிய போதும்
எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை

யாழ்ப்பாணத்தில்
மச்சாhள்மாருடன் கிளித்தட்டும் எட்டுக் கோடும்
விளையாடியபோதும்
அப்பப்பா உரத்தக் குரலில் பாடும் தேவாரங்களை பொருள்
விளங்காது ரசித்த போதும்
பள்ளிக்கூடம் சென்று முதன்முதலில் தமிழ் கற்ற போதும்
எனக்கு அடையாளங்கள் இருந்ததில்லை.

கொழும்பில் சித்தி வீட்டில்
தமிழில் கதைப்பபது மறுக்கப்பட்ட போதும்
சித்தியின்  வயோதிக மலையக மாமி
விருந்தினர் கண்ணில்படாது அறையில்
அடைக்கப்பட்ட போதும்
நெருப்ப்பெட்டியையொத்த சிறு வானொலியில்
சுவருக்கும் கேட்காது
காது வைத்து  அண்ணாவோடு
தமிழ்ப் பாட்டு கேட்க நேர்ந்தபோதும்
அன்னையின் உறவினர் உனக்கு
ஒரு சிங்களத் தந்தை இருந்திருந்தால்
நல்லதெனச் சொன்ன போதும்
நான் அடையாளங்களை வெறுத்தேன்

அரச ஆதிக்கத்தின் கைகள்
எங்கும் மனிதத்தை பிடுங்கி இனவாதத்தை
நட்ட  நாட்களில்
இரவோடிரவாக இளைஞர்கள்
மறைந்தபோதும்
அவ்வுறவுகளின் கண்ணீரைக் கண்டபேதும்
நான்  அடையாளங்களை வெறுத்தேன்.

தெருவெங்கும் அகிம்சை தீ மூட்டபட்டபோதும்
கர்ப்பினித் தாயரும் குழந்தைகளும் குதறப்பட்டபோதும்
இராணுவத்தை திட்டிய
எனது பள்ளித் தோழிகள் 
என்னைக் கண்டதும் மன்னிப்புபக் கேட்டபோதும்
நான் அடையாளங்களை வெறுத்;தேன்.

சிங்களக் கிராமங்களில்
தமிழ் வாள் அப்பாவிகளை
கொன்ற போதும்
மாற்று கருத்துக்கள்
டயர் வைத்து எரிக்கப்பட்டபோதும்
ஒற்றைத்துணியுடன் காதிலிருந்த தோடு
கிழி;க்கப்பட்டு
எனது முஸ்லிம் தோழி
தனது தேசத்திலிருந்து
விரட்டப்பட்டபோதும்
நான் அடையாளங்களை வெறுத்தேன்.

அடையாளப் புறக்கணிப்பின்
வலியில் தளர்ந்த
என் வயோதிபத் தந்தையின்
கண்கள் கசிந்தபோதும்
என் ஆருயிர் உறவுகள்
என்னிடமிருந்து அன்னியப்பட்டபோதும்
நான் அடையாளங்களை வெறுத்தேன்

நான் வெறுத்தொதுக்கிய அடையாள  சர்ப்பங்கள்
கூட்டாகச் சேர்ந்து
புற்று வழியே
என்னை நோக்கிப்
படமெடுத்து நிற்கின்றன.

 25.04.2010 

5 Comments on “அடையாளம்”

  1. உமா உண்மையில் மிகவும் நல்ல கவிதை உங்கள் வலி நீங்கள் அனுபவித்த வற்றை மிகவும் அற்புதமாக வடித்துள்ளீர்கள் இன்று யோனி பற்றியும் ஆண்குறி பற்றியும் செக்ஜ் பற்றியும்யுமே எழுதித் தள்ளுகின்ற கவிதையினிகள் என தங்களை கூறிக் கொள்வோர் இக்கவிதையை வாசித்து விட்டு இனியாவது திருந்துவார்களா அல்லது யாருடைய ஆண்குறி பெரிது என்று எழுதுவார்களா உங்கள் கவிதை மிகவும் என்னை பாதித்துள்ளது ஏனென்றால் எனது அப்பா சிங்களம் எனது அம்மா தமிழ் நான் வாழ்நத அந்த நாட்களில் நாங்கள் அனுபவித்த இனவாதம் என்னை லண்டன் வரை கொண்டு வந்து விட்டது. அதனால் தான் நான் புலியில் சேர்ந்தேன் அங்கும் புலிகளின் சிலல அராஜகங்களால் நான் தனிமையாகிவிட்டேன். எனது அப்பா நல்லவர் ஆனால் இனவாதம் யாரைத் தான் விட்டது என்னை நான் தமிழன் என்றே கூற விரும்புகிறேன். எனது அம்மா பட்ட கஸ்டங்கள் சொல்லில் வடிக்க முடியாது ஆனால் நீங்கள் அதை அழகாக கூறியுள்ளளீர்கள் எனது பெயர் தூபிகா சமரசிங்க உங்கள் ஆக்கங்களை நான் உடறுவில் தான் வாசித்தேன் உடறுவை எனது நண்பர் ஒருவர் அறிமுகம் படுத்தியதற்கு அவருக்கும் எனது நன்றிகள் .

  2. ரெம்ப நாளுக்கு பிரகு உடல் சிலிர்க்க வைத்த கவிதை. நன்றி

  3. ஒரு உருப்படியான கவிதை வாசித்த நிறைவு வருகிறது.

    சில கவிஞைகளின் ‘சரோஜாதேவி’ கவிதைகளையும், மாறிக் கொப்பியடித்த கவிதைகளையும் வாசித்து களைத்த மனதுக்கு வெல்லக்கட்டியாக்கும் நிங்களின்ர கவிதை.

    கவிதையோட திகதி 25.10.201 உதைக்கிறதே. சரிப்பண்ணுங்க.

    விஜய்.

  4. hi uma,
    this is jawahira from Sri lanka, I too agree with Thoobigaa’s comments, and also very nice poem and says the truth of innocent people who were effected by ethnicity, i feel very proud with your words, keep it up and TC.

    Jawa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *