த.ராஜ்சுகா –இலங்கை
உன் விரல்கோர்த்து
கைப்பிடித்திருக்கும் அந்தக்கைகள்
உனக்குத்தான் புதிது
எனக்கோ பழசு….
கைப்பிடித்திருக்கும் அந்தக்கைகள்
உனக்குத்தான் புதிது
எனக்கோ பழசு….
புதிது புதிதான கோணங்களில் -உன்
புகைப்படங்கள் எல்லாமே
உனக்குத்தான் புதிது
எனக்கது பழசு…
புகைப்படங்கள் எல்லாமே
உனக்குத்தான் புதிது
எனக்கது பழசு…
ஒரே நிறத்தில்
உங்களிருவரின் ஆடைகள்
சிரிப்புத்தான் வருகின்றது
உனக்கது புதிதுதான்
எனக்கோ பழக்கமான பழசு…
உங்களிருவரின் ஆடைகள்
சிரிப்புத்தான் வருகின்றது
உனக்கது புதிதுதான்
எனக்கோ பழக்கமான பழசு…
ஒரே கோப்பையில் பானமும் இருவரும்
ஒரே கைகளில் உண்ணும் அனுபவமும்
உனக்கு புதிதுதான்
எனக்கது பரீட்சயமானது…
கண்ணீர் துடைக்கும் கரங்களும் அவனின்
கதைபேசும் கண்களும் புதிதுதான்
எனக்கோ அன்றே பழக்கப்பட்டது…
எனக்கோ அன்றே பழக்கப்பட்டது…
கணவனாய்
காணாத உலகமாய்
அவனுனக்கு இன்று புதிதாய் இருக்கலாம்
காதலனாய்
கரைகாணாத காவியமாய்
கண்ணீர்தேசத்தின் நாயகனாய்
அன்றே எனக்கு பழமையானவன் தான்…
காணாத உலகமாய்
அவனுனக்கு இன்று புதிதாய் இருக்கலாம்
காதலனாய்
கரைகாணாத காவியமாய்
கண்ணீர்தேசத்தின் நாயகனாய்
அன்றே எனக்கு பழமையானவன் தான்…
தயவுசெய்து மன்னித்துவிடு
உன் கணவன்பற்றி பேசியதற்கு
என் நன்றியினை ஏற்றுக்கொள்
என் காதலன் பற்றி
எழுத தந்தமைக்கு….
உன் கணவன்பற்றி பேசியதற்கு
என் நன்றியினை ஏற்றுக்கொள்
என் காதலன் பற்றி
எழுத தந்தமைக்கு….