பெண்களின் பிரச்னையை எடுத்து சொல்லும் ஓவியங்கள் Thanks your stroy and -http://swarnalathaartist.com/Nirbhaya-Painting2.html
ஸ்வர்ணலதாவின் ஓவியங்கள், பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் வலியையும் காட்டும் விதத்தில் வரையப்பட்டுள்ளது.
“சாதாரணமாக ஒரு வீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பெண்கள் பாதிப்படைவது அதிகம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் மன இறுக்கத்துடன் குழந்தை பேருக்காக, சிகிச்சை எடுத்துக்கொண்ட சமயம் அது. குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு பெண்கள் தான் காரணம், அவர்களிடம் தான் அந்த குறை என்று திணிக்கும் விஷயங்களை நான் கேள்விப்பட்டதுண்டு. சிகிச்சை எடுத்துக்கொள்ள வரும் பெண்களிடம் இருக்கும் அந்த எதிர்பார்ப்பு கலந்த வலியை நான் பார்த்திருக்கிறேன்.”
தன்னுடைய மன இறுக்கம் மட்டுமல்லாமல், பத்திரிக்கைகளில் வரும் பெண் சிசுக் கொலை, பாலியன் கொடுமைகள் போன்ற செய்திகள் ஒரு பெரிய மன மாற்றத்தை ஸ்வர்ணலதாவிடம் ஏற்படுத்தியது.
பெண் சிசுக் கொலை, பாலின பாகுபாடு என்ற பல தலைப்புகளில் கிட்டத்தட்ட 25 ஓவியங்களை இவர் வரைந்த போது தான், 2012ம் ஆண்டில் நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவம் நடந்தது.
“அப்போது நான் தில்லியில் இருந்தேன். எங்களுடைய வீடும் போராட்டம் நடந்த இந்தியா கேட் அருகாமையில் தான் இருந்தது. ஒரு நிர்பயா மட்டுமல்லாமல், கண்ணுக்கு தெரியாமல் பல பாதிப்படைந்த பெண்கள் போராட்டத்தில் இருப்பதை நான் உணர்ந்தேன். பாதிப்படைந்த அந்த நிர்பயாவின் இன்னல்களை ஓவியங்களாக வரையத்தொடங்கினேன்.”இந்தியாவின் சிறந்த 100 பெண்கள் என்ற கெளரவத்திற்கு ஸ்வர்ணலதாவின் பெயர் பரிசீலிக்கப்பட்டு, தேர்வும் செய்யப்பட்டது.
பிரச்னைகளை விளக்கும் ஓவியங்களாக இருந்தாலும், ஸ்வர்ணலதாவின் பல ஓவியங்கள் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. “அதிலிருந்து கிடைக்கும் பணத்தை சொந்த செலவுக்காக எடுக்கக்கூடாது என்ற முடிவில் தீர்க்கமாக நானும் என்னுடைய கணவரும் இருக்கின்றோம். முதல் கண்காட்சியிலிருந்து, இப்போது வரை எனக்கு ஓவியங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் ஏழைக் குழந்தைகளை படிக்கவைப்பது, உதவி செய்வது, வேண்டுபவர்களுக்கு மருத்துவ வசதி போன்றவைகளுக்காகத் தான் நான் செலவிடுகிறேன்.”