சை.கிங்ஸ்லி கோமஸ்
மலையகத் தோட்டத் தொழிலாளர்களை பொருளாதார ரீதியாக அநாதைகளாக்கும் செயற்திட்டம் ஒன்றினை பெரந்தோட்ட கம்பனிகள் செய்து வருவதனை அம்பளப் படத்த வெண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.இதனை கம்பனிகளின் புதிய வர்த்தகத’ தந’திரம் என்றே கூறுதல் தகும். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாத நிலைமையை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள வெட்கத்துடன் கூறி வருவதனைக் காண்கின்றோம்.இந்த நிலையிள் தோட்டத் தொழிலாளரை குறித்த வயதிற்கு முன் வேலையை விட்டு தாங்களாகவே ஓய்வு பெரச் செய்யும் முகமாக பல திட்டங்களைத் திட்டமிட்டே கம்பனிகள் செய்து வருகின்றன இதற்கானப் பிரச்சார செயற்பாடுகளை தோட்ட நலன் புரி உத்தியோகத்தர்களைக் கொண்டே (வெல்பயார் அதிகாரி)முன்னெடுக்கின்றனர் இவ்வாறாக பலவந்த ஓய்விற்காய் தொழிலாளர்களைத் தூண்டும் விடயத்தில் இந்த அதிகாரிகளும் மற்றைய தோட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் ஈடுப்பட்ட வருகின்றனர்.குறித்த வயதிற்கு முன் வேலையை விட்டு ஓய்வு பெரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கம்பனிகள் 25000.00 ரூபா சன்மானமாக வழங்குவதாக ஆசை வார்த்தைக் காட்டியே முன்னெடுத்து வருகின்றனர். இந்த சிறிய தொகைக்கு ஆசைப் பட்டு பலரும் வேலையை விட்ட சுயமாக ஓய்வுப் பெற்று வருகின்றனர். இதன் உள் நோக்கம் யாது?
அடுத்த கூட்டு ஒப்பந்தத்திற்கு முன் பெரும் தோட்டத் துரையின் தொழிலாளர்கள் தொகையை 100 இற்கு 25 வீதமாக குறைத்து அவர்களுக்கு ஜெனரேசன் பிளக்கிங் அல்லது சீ கெட்டகரி போன்ற பெயர்களில் கொழுந்து பரித்தல் தேயிலைப் பராமரித்தல் உரமிடுதல் என்பவற்றை குடும்பம் குடும்பமாக கொடுத்து லாபத்தினை உச்சமாக அடையும் திட்டத்தினை முன்னெடுத்த வருகின்றனர் இந்த முரைமையானமுது முன்னைய காலத்தில் கை காசு வேலை அல்லது கொந்தராப்பு வேலை என்று அழைக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
இந்த முறைமையினால் ஏற்படும் பாதிப்புகள் யாது?
1) தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊழியர் சேம லாப நிதி இல்லாமல் போகும் நிலைமை உறுவாகும்.
2) தோட்டத் தொழிலாளர்களின்
3) தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி செயற்பாடுகளில் முகாமைத்துவம் பங்கெடுக்காமல் இருத்தல்.
4) தோழிற்சங்க தலையீடுகளை தவிர்க்கலாம்.
5) மாணவர்கள் பெற்றோருடன் இணைந்து தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து பணம் சம்பாதிக்கும் ஆசையில் மாணவர்களின் கல்வி தடைப்பட வழிகள் எற்படும்.
6) தோட்டத் தொழிலாளர்களை குடியிருப்பகளில் இருந்து இலகுவில் வெளியேற்றலாம்.
7) தோழிலாளர்கள் இடையே ஐக்கியம் குரைந்து போட்டி மனப்பாங்கு அதிகரிக்கும்
8) தோட்டப் புரங்களில் உட்கட்டமைப்பு’ சுகாதாரம் என்பவற்றிற்காய் கம்பனிகள் செய்யும் செலவுகளை செய்யாமல் இருக்கலாம்.
மக்கள் இந்த நிலைமைக்கு ஆளாக காரண கர்த்தாக்கள் யார்?
1) அரசாங்கத்திடம் இருந்து பெருந்தோட்டங்களை கமபெனிகளுக்கு தாரைவார்க்க ஒத்துழைப்பு வழங்கிய மலையக தொழிற்சங்கத் தலைமைகள.;
2) கூட்டு ஒப்பந்தத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களை அடக்கம் செய்த தொழிற்சங்கத் தலைமைகள்.
இந்த நிலைமையில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மலையகத் தோட்டத்தொழிலாளரகள் என்ன செய்ய வேண்டும்
1) மக்கள் ஐக்கியப் பட வேண்டும்
2) தொழிற்சங்கங்களுக் மக்கள் அளுத்தத்தினைக் கொடுக்க வேண்டும்.
3) துமிழ் சிங்கள ஏனைய உழகை;கும் மக்களுடன் இணைந்து பாரிய தொழிற்சங்கப் பொராட்டங்களை முன்னெடுத்து தங்களின் உரிமைகளை வெற்றிக் கொள்ள வேண்டும.
4) முலையக மக்களை நேசிக்கும் சகல சக’திகளும் ஒன்றினைய வேண்டும்.
இதுமாத்திரம் அன்றி தொட்டத் தொழிலாளரை ஏமாற்று பொருலாதார அநாதைகளா ஆக்கும் பல திட்டங்கள் தொடர்பாக அன்மைக்காலத்தில் பெருந்தோட்டக் கமபனிகள் பல திட்டங்களைத் தீட்டி செயற்பட்ட லருவதனை மலையகத்தின் பிரபல தொழிற்சங்கங்கள் கண்டும் காணாமல் இருப்பது விமர்சனத்திற்குறிய விடயமாகும் இது தொடர்பாக தொழிற்சங்க தலைவர் ஒருவருடன் வினவிய போது தோட்டத் தொழிலாளர்கள் தங்கள் கட்சிக்கு கடந்த தேர்தலின் போத துரோகம் செய்து விட்டதனால் இது போன்ற பலாபலன்கனை அனபவிக்க நேர்வது அவர்களின் தலை விதி என்று கூறுகின்றார் இவர்களை மலையக மக்கள் இனியும் நம்பலாமா?