முற்றுப்புள்ளியா…?

இயக்கம்: செறீன்; சேவியர் | நடிப்பு: அன்னபூரணி, ஹரிஸ் மூஸா |    படத்தொகுப்பு: பீ.லெனின் ஆண்டு-2016 | நீளம்-100 நிமிடங்கள் |  நாடு-இந்தியா, இலங்கை | சான்றிதழ்-PG  | வடிவம்-எண்மருவி (டிஜிடல்)

சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்கள காணொளிகளிற்கு பின்னதாக, இலங்கையில் நடைபெற்று முடிந்த போரில் தப்பிப்பிழைத்த தமிழர்களுக்கு போர் முடிந்ததன் பின்னதாக அங்கு என்ன நடக்கின்றது என்பதை அங்கிருந்தே சொல்கின்ற முதலாவது திரைப்படைப்பு இதுவாகும்.

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் இழப்புக்களின் வலி மற்றும் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள், பயம் ஆகியவற்றிற்கிடையில், இறுதிப்போரின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்ட கணவரை தனது மூன்று பிள்ளைகளுடன் தேடும் முன்னாள் பெண் போராளி; தழிர்களின் கௌரவம் மற்றும் மண்ணுக்காக பாடுபடும் வரலாற்றியலாளர்; சூழல் பாதுகாவலரான இளம் இந்திய ஊடகவியலாளர் ஆகியோரின் அன்றாட வாழ்வுக்கான சிரமங்களும், போராட்டமும் இத்திரைப்படத்தில் யதார்த்தமாக சித்தரித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கதையினை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இயக்குனர் ஒருவரால் இயக்கப்பட்டுள்ளது     நன்றி  http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132651/language/ta-IN/article.aspx

யூன் 9, 2016 வியாழன் மாலை 06.00 மணி –  பிரின்ஸ் சார்ளஸ் சினிமா, லண்டன் .

SCARS OF TOMORROW [Muttrupulliyaa…?]

Scars LArge

DIRECTED BY: Sherine Xavier  |  STARRING: Annapoorani, Harris Moosa
Year: 2016  |  Length: 100 mins  |  Country: India, Sri Lanka  |  Certification: PG  |  Format: Digital, EDITED BY: B. Lenin

சனல்-4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்கள காணொளிகளிற்கு பின்னதாக, இலங்கையில் நடைபெற்று முடிந்த போரில் தப்பிப்பிழைத்த தமிழர்களுக்கு போர் முடிந்ததன் பின்னதாக அங்கு என்ன நடக்கின்றது
திரைக்கதையில் வருகின்ற சம்பவங்கள் நடைபெற்ற இடங்கள் தத்ரூபமாக மீள உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளதோடு, போரின் போது நேரடியாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் இணைத்து படத்தொகுப்பு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பித்தக்க விடயமாகும். மேலும், இத்திரைப்படத்திற்கேயென பிரத்தியேகமாக பாடலாக்கப்பட்டுள்ள உயிரோட்டமுள்ள தமிழ் பாடல்களும் இடையிடையே உள்ளன.
இத்திரைப்படக்குழுவில் இருந்த சிலர் கைது செய்யப்பட்டதனால் தமது அடையாளங்களை மறைத்து படத்தின் சில காட்சிகளை இலங்கையில் மிகவும் இரகசியமாக படமாக்கியுள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட இத்திரைப்படம் இலங்கையின் வடக்கே ‘யாழ்ப்பாணம் திரப்பட விழா’வில் திரையிடப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து தற்போது முதன்முறையாக ஐரோப்பாவில் திரைக்கு வருகின்றது. இது ஒரு நாள் மட்டும் காட்சிப்படுத்தப்படவுள்ளமை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.

‘தமிழர்களின் கௌரவத்தினை நிலைநாட்ட பாடுபடுபவர்களின் அன்றாட போராட்டம் மற்றும் சமாதானம் ஒரு மாயயையாக உள்ள நிலையில் போரின் வடுக்களை தமக்குள் சுமந்தபடி நீதிக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தமிழர்களின் துயரம் ஆகியவற்றினை பிரதிபலிப்பதே இத்திரைப்படமாகும்’ என்கின்றார் இயக்குனர் செறீன் சேவியர்.

வடமாகாண முதலமைச்சர் மதிப்பிற்குரிய முன்னாள் நீதியரசர் திரு. சீ.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ‘நான் இந்த திரைப்படத்தை பார்வையிட்டதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். இது மிகவும் யதார்த்தபூர்வமாக இயக்கப்பட்டுள்ளது. படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்’ என்றார்.

அனுமதிச்சீட்டு விற்பனை மூலம் கிடைக்கப்பெறும் நிதியானது இலங்கை மற்றும் இங்கிலாந்தில் போர் மற்றும் சித்திரவதைகளிலிருந்து தப்பிப்பிழைத்து வாழும் இலங்கைத்தமிழர்களின் நலன் தொடர்பாக பணியாற்றும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *