ஓவியா (Feb 2006 ஊடறுவில் வெளியான கட்டுரை)
தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த ஒரு தமிழப்பெண். அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வறுமைஇஅறியாமை நிறைந்த ஒரு வாழ்க்கைச்சூழலில் அனைத்துத் தடைகளையும் தாண்டி ஆசிய விளையாட்டுப்போட்டி வரை ஒடியிருக்கிறார். இது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல. இமாலய சாதனையாகும். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளிவந்த போது நாம் அனைவருமே மகிழ்ந்து போனோம். பெருமிதப் பட்டோம் அந்த மகிழ்ச்சியைத் துடைத்தெடுப் பதைப் போன்று அடுத்து சில தினங்களிலேயே செய்திகள் வெளியாகத் துவங்கின. சாந்திக்குப் பாலின பரிசோதனை நடத்தப்பட்ட தாகவும் அதில் அவர் தேறாத காரணத்தினால் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும் தகுதியை அவர்பெற்றிருக்கும் பதக்கத்தையும் ஒலிம்பிக் கமிட்டி திரும்பப் பெற்றுவிடும் என்பதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளியாகின. ஒரு பரிசினைப் பெறாமல் போவது என்பது வேறு. பெற்ற பரிசினை இழப்பது என்பது வேறு. ஆனால் இங்கு அது மட்டுமல்ல பரிசு இன்றும் சாந்தி கையில் தான் இருக்கிறது. வந்து கொண்டிருக்கும் செய்திகிளில் எது உண்மை எந்த அளவு உண்மை என்று தெரியாத அளவுக்குச் செய்திகள் சிக்கல்களாகச் காட்சியளிக்கின்றன.
முதலாவதாக போட்டிக்குப் பிறகு சாந்திக்கு நடத்தப்பட்ட பாலின தேர்வில் சாந்திக்கு பெண் தன்மை குறைவாக இருப்பதாகத் தகவல் கசிந்தது. என்று பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். அதன்பின் என்ன நடக்கிறது அப்படியொரு பாலினத் தேர்வு நடத்தப்பட்டது அதன் பின்
தேஹாவில் நடந்தது ஒரு சர்வதேச நிகழ்வாகும். அப்படி ஒரு சோதனை அங்கு நடத்தப்பட்டிருக்குமேயானால் அந்த அறிவிப்பு ஆதாரபூர்வமாக அந்த சர்வதேச அமைப்பினால் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏன் அது ஒரு வதந்தியாக வெளிவருகிறது. என்பது நமக்கு புரியவில்லை. ஒருவேளை அந்த சர்வதேச அமைப்பு வெளியிடுவதற்கு முன்னால் அப்படி ஒரு தகவல் உண்மையாகவோ பொய்யாகவோ பரப்பப்படுகிறது. பரப்படுகிறது என்று சொன்னால் அதை ஏன் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளியிடவேண்டும்.? எத்தனையோ விசயங்களில் தேசபக்தியைப் பற்றி பேசுகிறவர்களுக்கு இந்த அறிவும் உணர்வும் கூடவா இல்லாமல் போகும்?
என்ன நடக்கிறது அப்படியொரு பாலினத் தோவை நடத்தியது சர்வதேச அமைப்பா? இந்திய ஒலிம்பிக் அமைப்பா? என்ற கேள்விக்கு இங்கு பதில் இல்லi. இப்படி ஒரு சர்வதேச போட்டி நடந்தபொழுது அதில் பெற்ற வெற்றியை திரும்ப பெறுகிற அதிகாரம் அல்லது அது குறித்த அறிக்கை வெளியிடுகிற அதிகாரம் எப்படி ஒரு தேசிய அமைப்பின் கைக்கு வருகிறது?இந்த அடிப்படையிலான முரண்பாட்டிற்கு என்ன பதில்?
அடுத்ததாக ஒரு போட்டியில் ஒருவர் கலந்து கொள்ளும் முன்பு தகுதித் தேர்வுகள் நடத்தபடுவது இயற்கை அவ்வாறு இல்லாமல் ஒரு போட்டி நடந்து முடிந்த பிறகு அந்தப் போட்யில் கலந்து கொண்டவர்களுக்கு எப்படி எந்த அடிப்படையில் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட முடியும்?இது இயற்கை நியதிக்குவிரோதமாகப்படுகிறது. விளையாட்டுத்துறையில் இப்படி ஒரு மரபு இருக்கிறதா? ஆந்த மரபிற்குச் சொல்லப்புடும் தார்மீகக் காரணம் என்ன?
நம்முடைய சிற்றறிவுக்கு எட்டியவரையில் ஒரு போட்டியில் பங்கு பெற்ற ஒருவருடைய வெற்றியை செல்லாமல் ஆக்கவேண்டும் என்று சொன்னால் அது ஒரே ஒரு அடிப்படையில்தான் நிகழ முடியும். அது என்ன வென்றால் அந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காக அந்த நபர் அளித்த விண்ணப்பத்தில் தன்னைப் பற்றிய அடிப்படைத் தகவல்களில் அவர் பொய் சொல்லி இருக்க வேண்டும்.சாந்தி தன்னைப் பற்றி அவ்வாறு தவறான தகவல் அளித்துப் போட்டியில் சேர்ந்துள்ளாரா?
பாலினத் தேர்வுக்கான போட்டிகள் ஏற்கனவே 1991க்கு முன்பாகவே தடைசெய்யப்பட்டிருப்பதாக சாந்தியினுடைய பயிற்சியாளர் நாகராஜ் கூறியதாகக் தகவல்கள் வந்திருக்கிறதே அது எந்த அளவு உண்மை? அது உண்மையென்றால் அதே துறையில் இருக்கும் அவரும் பிற தமிழர்களும் ஏன் சட்டப்படியான முயற்சி எடுக்கவில்லை.?
சாந்தியின் மனவேதனையில் பங்கு பெறுவதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஒருவேளை சாந்தி ஆறுதல் அடையலாம். தமிழக அரசின் பரிசுத்தொகையும்இவண்ணத் தொலைக் காட்சிப் பெட்டியும் சாந்தி என்ற நபரை ஆறுதல் படுத்தலாம். சாந்தியின் குடும்பத் தேவைகளை நிறைவு செய்யலாம். ஆனால் ஓர் அநீதி நிகழ்த்தப்பட்டிருக்குமேயானால் அது நம் மண்ணில் நம் தமிழ்ப பெண்ணிற்கு நிகழ்த்தப்பட்டிருக்குமேயானால் அதை நிகழ்த்தியது இந்தியாவில் இருக்கும் நிறுவனமா? அல்லது சர்வதேச நிறுவனமா? எதுவாக இருந்தால் என்ன? நியாயம் கேட்கவேண்டிய கடமை நமக்கில்லையா?
“ஒரு வீட்டில் குழந்தை பிறந்தது என்று சொன்னால் அது பெண்குழந்தையா ஆண் குழந்தையா? என்பதை பொதுமக்களைப் பொறுத்த வரை பிறப்புறுப்பை வைத்து தீர்மானிப்பார்கள். அது மட்டும் தான் நமக்குத் தெரியும். மற்றப்படி மீசை அரும்புகிற தோழிகளும் உண்டு. சற்றே மார்பகம் வளர்ந்த தோழர்களும் உண்டு மனிதர்களாய் வாழ்வதற்கு இயற்கை இவர்களுக்கெல்லாம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.”
விளையாட்டுத்துறைக்கு பாலினம் சார்ந்து ஒரு வரையறை வைத்துக்கொள்ள சில நியாயங்கள் இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும் தெளிவாக இருக்கவேண்டும். தத்துவத்திற்குப் பல வியாக்கியானங்கள் இருக்கலாம். ஆனால் சட்டங்கள் அப்படி இல்லை. விiயாட்டுத்துறையில் பாலினத் தேர்வுக்கு வரையறை இருக்குமேயானால் அதனை அந்த சர்வதேச அமைப்பு அல்லது தேசிய அமைப்பு பொதுமக்களுக்கு உடனடியாகத் தெளிவுபடுத்தவேண்டும். அதற்கான விளக்கத்தை பத்திரிகையாளர்கள் பாலின மருத்துவர்களிடம் கேட்கவேண்டிய தேவை ஏன் எழுகிறது என்பது நமக்குப் புரியவில்லை. பல விஷயங்களைக் குழப்பங்களாகவே நீட்டித்து வைத்திருப்பதும் ஓர் அரசியல் தான்.
சர்வதேச போட்டிகளில் (ஒலிம்பிக் உட்பட )ஆண் என்ற வரையறைக்குள் கீழோ அல்லது பெண் என்ற வரையறைக்குக் கீழோ பொருந்தாமல் நிராகரிக்கப்படும் மனிதர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபெறுவதற்கான வாயில்கள் என்னென்ன? அவர்களுக்கு இந்த அமைப்புக்கள் வழங்கும் நியாயம் என்ன? இருபாலாரும் சேர்ந்து பங்கு பெறுகின்ற போட்டிகள் குறித்து இதுவரை சர்வதேச அளவில் சிந்தனைகள் எழுப்பப்பட்டிருக்கிறதா? ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகள் நடத்தும் சர்வதேச அமைப்புகளின் பங்கெடுப்பு அல்லது பிரதிநிதித்துவம் எந்த அளவிற்கு இருக்கிறது. மூன்றாவது பாலினமாகிய அரவாணிகளுக்கு இதில் என்ன இடம் இருக்கிறது?
இதில் கிளைப்பிரச்சினை ஒன்று. இந்த உண்மை(????) தெரிந்து தான் இரயில்வே நிர்வாகம் சாந்திக்கு ஏற்கனவே வேலைவாய்ப்பை மறுத்திருக்கிறதாம்.ஒ’லிம்பிக் சமாச்சாரம் இருக்கட்டும் இரயில்வே துறையில் வேலை பார்ப்பதற்கு எதற்கு பாலினத்தேர்வு? அப்படி என்ன பணி செய்கிறார்கள் இரயில்வே துறையினர்? இப்படியெல்லாம் செய்திகள் வெளியிடப்படும் போது அத்துறையின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரிக்கு இது உண்மையாஇபொய்யா என்று தெளிவுபடுத்த வேண்டிய கடமை எதுவும் இல்லையா?
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் தவறான தகவல்கள் பரவாமல் தடுப்பதற்கான தண்டனைப் பிரிவினரையும் சேர்க்க வேண்டும். ஏனெனில் தகவல் கிடைக்காததால் மட்டுமல்ல சரியான தகவல் கிடைக்காததாலும் தவறான தகவல்களினாலும் விளையும் பாதகங்களும் ஏராளமாக இருக்கின்றன.
இப்போது இப்படி இரயில்வே துறையில் நடந்தது உண்மையா இல்லாயா என்று சொல்ல இங்கு யாருமில்லை. அது உண்மையெனில் அதற்கான விளக்கத்தை இரயில்வே நிர்வாகம் தரவேண்டியது அவசியம்.
நாம் மேலே பட்டியலிட்டிருக்கும் கேள்விகள் எல்லாம் ஆரோக்கியமான சிந்தனையுள்ள எவரும் எழுப்புகின்ற கேள்விகள் தான். ஆனால் நமது பத்திரிகைகள் இவ்விஷயத்தில் எப்படி நடந்து கொள்கின்றன. ? இந்தப் பிரச்சினையில் சாந்தியின் சகோதரிகளுக்கு மாதவிடாய் மிகவும் காலம் தாழ்த்தித் தான் வருகிறது என்று புலனாய்வு செய்து ஒரு பத்திரிகையில் செய்திகள் வெளிவருகின்றன. கவனம் செலுத்தவேண்டிய எத்தனையோ விஷயங்களைக் கோட்டை விடுகிறோம் என்பதற்கு கவனம் செலுத்தப்படக் கூடாத விஷயங்களில் கவனம் செலுத்தப்படுவதும் ஒரு காரணமாகும்.
தமிழர்கள் சார்ந்த எந்த ஒரு விஷயத்திலும் தமிழ் பத்திரிகைகளின் அணுகுமுறை மிக மிக பொறுப்பற்ற தன்மையில் தான் இருந்து வருகிறது. சாந்தி விசயத்தில் மட்டுமல்ல இதற்கு முன்னால் மிகப்பெரிய கல்வி கற்ற அதிகாரிகளான விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் விசயத்திலும் இவர்கள் இப்படித்தான் நடந்து கொண்டார்கள். முறையான கல்வி வலையத்துக்குள்ளிருந்து வராத ராமர் பிள்ளை போன்ற எளிய மனிதர்கள் விசயத்திலும் இவர்கள் இப்படித்தான் நடந்து கொண்டார்கள்.
இப்போதும் இவர்களது கவனம் தமிழக அரசின் பரிசுத்தொகையின் மீதும் எந்த ஆய்தத்தால் சாந்தியைக் காயப்படுத்தினார்களோ அதே பெண் தன்மை பற்றிய தொடர் ஆராய்ச்சியிலும் தான் இருக்கிறதேயல்லாமல் தமிழர்கள் யாரால் ஏன் எப்படி பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற என்ற உண்மை மீதான அக்கறை எத்தரப்பிலும்வெளிப்படவில்லை. நமது மண்ணில் யாரை வேண்டுமானலம் ஒரு பாலியல் பிரச்சினையுடன் தொடர்புபடுத்திவிட்டால் நமது பத்திரிகைகளில் அந்நபரின்பிரச்சினையால் உண்மையே வெளியில் வராமல் அந்நபரை ஒழித்து ஓரங்கட்டி விடலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை விஞ்ஞானிகள் விஷயத்தில் என்னதான் நடந்தது என்று இங்கிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனைப் பேருக்குத் தெரியும்?
இராமர் பிள்ளை என்னதான் கண்டுபிடித்தார்? சரி அவர் கண்டுபிடிப்பு பலனுள்ளதா? இல்லையா என்பது வேறு ஆனால் அவர் விசயத்தில் கடைசியில் என்ன தான் நடந்தது? என்ற உண்மை இங்கு யாருக்காவது தெளிவாகத் தெரியுமா? சாந்தி விசயத்திலும் அது தானே நடக்கிறது. நமது மண்ணின் சாதனையாளர்களை பிறர் கவிழ்ப்பது இருக்கட்டும். நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். பிறருக்கு நம்மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சியைவிட நம்மீது நமக்கிருக்கும் பொறுப்புணர்ச்சிக் குறைவே நம் தமிழர்களின் துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது.
தமிழக அரசு இந்த நேரத்தில் சாந்திக்கு அளித்த ஊக்கமும் பரிசும் குறிப்படத் தகுந்தது தான். எனினம் அரசிடம் அதனையும் தாண்டி சில கடமைகளை நாம் எதிர்பார்க்கின்றோம். நமது மாநிலத்திலும் மய்ய அளவிலும் இருக்கும் விளையாட்டுத்துறை அரசு சார்ந்த அரசு சாராத அமைப்புக்களை கூட்டி இப்பிரச்சினையின் உண்மைத் தன்மையை வெளிக்கொணரவும் சாந்திக்கு தொடர்ந்து அவரது திறமைகளை வெளியிட உரிய வாய்புக்கள் கிடைத்திட ஆவன செய்யவும் தமிழக அரசு முன் வந்திட வேண்டும். அவ்வாறு எடுக்கப்படும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மட்டுமே நமக்கான நீதி கிடைத்துவிடச் செய்யும் நடவடிக்கையாக இருக்கும். அத்துடன் சாந்திக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பத்திரிகைச் செய்திகளால் உருவாகியிருக்கும் உளவியல் துன்பங்களுக்கு மருந்தாக அமைந்திருக்கும்
நன்றி:- புதியபார்வையில் வெளிவந்த இக்கட்டுரை ஊடறுவுக்காக ஓவியா
குநடி 2006