26.4.2015 நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து வழங்கியவர் –சுகன்யா மகாதேவா-
இரண்டாவதுஅமர்வு -தலைமை -..லறீனா அப்துல் ஹக்
அரசியலில் பெண்கள் – புதியமாதவி, மும்பை, இந்தியா.
அரசியல் என்றால் என்ன? அரசு + இயல் = அரசியல் அதாவது அரசு சம்பந்தப்பட்டது அரசியல். எங்கள் இந்தியாவில் தமிழக அரசு, நடுவண் அரசு என்று ஒருவகை. யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்க்ளை வைத்து பிஜேபி அரசு, காங்கிரசு அரசு, திமுக அரசு, அதிமுக அரசுஎன்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்.ஒரு நாட்டின் நிர்வாகத்தைக் கூட அரசு துறை, தனியார் துறை என்ற இரண்டு வகைக்குள் அடக்கிவிடலாம். ஆட்சியில் யார் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஆட்சிகள் கலைக்கப்படும் கறுப்புதினங்களிலும் கூட அரசு இருக்கும். ஒரு எடுத்துக்காட்டிற்காக பாகிஸ்தானை எடுத்துக்கொள்வோம். சட்டமன்ற தேர்தல் நடக்கும் , ஆட்சி வரும், அதே ஆட்சி போகும், ஆனால் அரசு அப்படியே இருக்கும்! எனவே தான் சொல்கிறேன். அரசு என்பது எப்போதும் ஏதாவது ஒரு அடைமொழியுடன் இருந்துக்கொண்டே இருக்கிறது.
மலையக நாட்டாரியலில் பெண்கள் – சந்திரலேகா
ஒரு நாட்டார் பாடலை எம் மத்தியில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் மலையக நாட்டாரியல் உழைக்கும் பெண்களோடு பின்னிப்பிணைந்த வரலாறாக உள்ளது இவ் நாட்டாரியில் உழைக்கும் பெண்களோடு எவ்வாறு பின்னிப்பிணந்துள்ளது என்பதை இங்கு பார்க்கலாம் புராணக் கதைகள், கூத்து, நாட்டார் பாடல்கள் பாடல் போன்றவைகளை சொல்லலாம் தங்கள் வாழ்வியலோடு இயல்பான மொழியோடு கிராமிய பாடல். வரலாற்று சான்றாக உள்ள இந்த நாட்டார் பாடல் உள்ளது .இவ் நாட்டார் பாடல்களை தேடி தோட்டம் தோட்ட மாக செல்லும் போது தாலாட்டு ஒப்பாரி நையாண்டி போன்றவர்களை பெண்களே கொண்டு சென்றார்கள் ஆனால் பெருந்தோட்டத்தின் வரலாற்றில் ஆரம்ப காலத்திலிலருந்து பெண்கள் மத்தியிலலேயே இது மிகவும் ஊன்றிப் போய் இருக்கிறது இடையடை சந்திரலோக நாட்டாரியில் பாடல்களை பாடி அசத்தினார் அவரின் அவர் பாடிய பாடல்களை இந்த ஒலிப்பதிவில் நீங்கள் கேட்கலாம்
மலேசியாவில் பெண்களின் இன்றைய சவால்கள் –யோகி
மலேசியாவைப் பொறுத்தவரை இந்தியப் பெண்கள் பல சிக்கல்களுக்கு நடுவில் இருக்கிறார்கள் என்று மட்டும்தான் சொல்லத்தோன்றுகிறது. அவர்களில் வாழ்வியல் முன்னேற்றம் குறித்து பேசுவது என்றால் அதுவே ஒரு சிக்கலான விஷயம் என்றுதான் சொல்வேன். இங்கே சீனப்பெண்கள் பண பலத்துடன் இருக்கிறார்கள். அவர்களுக்கான முதல் தேவையாக கல்வி இல்லை என்றாலும் (தற்போது சீனர்கள் கல்வியிலும் முன்னுக்கு வருவது குறிப்பிடத்தக்கது) பொருளாதாரத்தில் அவர்களை மிஞ்ச யாரும் இல்லை என்ற ரீதியில் நிற்கிறார்கள். மலாய்க்கார பெண்களுக்குப் பணபலம் இல்லை என்றாலும் அரசாங்கத்தில் ஆதரவும் பூமி புத்ரா அந்தஸ்தும் இருக்கிறது. இதில் இந்திய பெண்களின் நிலை பரிதாபத்திற்கு உரியதாக இருக்கிறது. அவர்களுக்குப் பண பலமும் இல்லை பூமி புத்ரா அந்தஸ்தும் இல்லை. ஓரளவுக்கு வசதியான பெண்கள் தங்களைப் பொருளாதார ரீதியில் நிலை நிறுத்திக்கொள்கிறார்கள்.
கலந்துரையாடல் (படத்தை பெரிதாக பார்க்க படத்தில் அழுத்துங்கள் )-ஒலிவடிவம்