Thanks – Muralitharan Mauran
இப்போராட்டத்திற்கு வட மாகாண பெண்கள் அமைப்பு, கலைமதி பெண்கள் சங்கம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி என்பன தமது ஆதரவினை வழங்கியிருந்தன. அத்துடன் பெண்விடுதலைச் சிந்தனை அமைப்பின் கண்டி,மாத்தளை,கொழும்பு,வவுனியா பிரதிநிதிகளும் கல்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பல தடைகளுக்கு மத்தியிலும் எம்மோடு துணைநின்ற அனைத்து வெகுஜன அமைப்புக்களுக்கு
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் ஓங்கி ஒலித்தது பெண்கள் குரல்…
தடைகளுக்கு மத்தியிலும் நடைபெற்ற எமது கவனயீர்ப்புப் போராட்டம்…
இன்றைய தினம் காலை 10.00மணிக்கு யாழ் நகரில் புங்குடு தீவு மாணவி வித்தியாவின் வன்புனர்வு படுகொலையைக் கண்டித்தும் பெண்களுக்கு எதிரான அனைத்து பாலியல் தொந்தரவுகள் மற்றும் ஒடுக்கு முறைகளுக்கெதிராகவும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது ” பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு”.
நீதி மன்றத்தின் மீதான தாக்குதலை காரணம் காட்டி போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு யாழ் நகரில் பொலிஸார் குவிக்கப் பட்டனர். விடயமறிந்த நாம் நிதானமாக செயற்பட ஆரம்பித்தோம். குறித்த நேரத்தில் யாழ் நகருக்குச் சென்ற நாம் எமது போராட்டத்தின் நியாயத்துவத்தை பொலிஸ் மற்றும் ஊடகவியலாளர்களுக்குத் தெளிவு படுத்தியதுடன் போராட்டத்தினை கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவைக்கு இடமாற்றம் செய்தோம். எனினும் அங்கும் எமக்குப் பலத்த பாதுகாப்புத்தர பொலிஸார் தவரவில்லை.
நிறுத்து ! நிறுத்து!
பாலியல் வன்முறையை நிறுத்து!
மறுக்காதே ! மறுக்காதே!
பெண்கள் உரிமைகளை மறுக்காதே!
சிதைக்காதே! சிதைக்காதே!
பெண்கள் வாழ்வை சிதைக்காதே!
தப்பவிடாதே! தப்பவிடாதே!
பாலியல் பிசாசுககைத் தப்பவிடாதே!
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!
போதை வஸ்தை தடுத்து நிறுத்து!
நுகரவுக் கலாச்சாரம்!
நாசம்! நாசம்!
எங்கே! எங்கே!
பாதுகாப்பு மிக்க சமூகம் எங்கே!
நடத்தாதே! நடத்தாதே!
பெண்களை இரண்டாம் பட்சமாக நடத்தாதே!
வேண்டாம் ! வேண்டாம்!
பெண் ஒடுக்குமுறை வேண்டாம்! என்ற கோசங்கள் முழங்கியபடி வருகை தந்தோர் அனைவரும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இப்போராட்டத்திற்கு வட மாகாண பெண்கள் அமைப்பு, கலைமதி பெண்கள் சங்கம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி என்பன தமது ஆதரவினை வழங்கியிருந்தன. அத்துடன் பெண்விடுதலைச் சிந்தனை அமைப்பின் கண்டி,மாத்தளை,கொழும்பு,வவுனியா பிரதிநிதிகளும் கல்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பல தடைகளுக்கு மத்தியிலும் எம்மோடு துணைநின்ற அனைத்து வெகுஜன அமைப்புக்களுக்கு