முதல் அமர்வு – 26.4.2015 -(26 ம் திகதி நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் -சுகன்யா மகாதேவா-)
தலைமை -நளினி ரட்னராஜ்
“கலை இலக்கியங்களில்முஸ்லிம்பெண்களின்பங்களிப்பு – சவால்களும்தீர்வுமுன்மொழிவுகளும்” –லறீனா அப்துல் ஹக்
சமூகத்தில் முஸ்லிம் பெண்களின் இலக்கிய பங்களிப்பு எந்தளவுக்கு ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்ற போதும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது என கருத்துக்கள் நிலவி வருகிறது பாரம்பரிய மரபு சார்ந்த இலக்கியத்திற்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் நவீன பெண்ணியம் மற்றும் இலக்கியத்திற்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவம் குறைவாக இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. தங்களது அனுபவங்களை அல்லது தங்களது வாழ்வியலில்பாதித்த கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்வைத்துள்ளார்கள். கவிதை என்பது பெண்களோடு பின்னிப்பிணைந்து காணப்படுகிறது எனலாம். அதே போல் தாலாட்டு பாடல்கள்,பாடல்கள் பெண்கள் பாடியுள்ளனர். சில பெண்கள் தங்களது கவிதைகளை நூல்களாக வெளியிட்டுள்ளனர் அந்த வகையில் சுல்பிகா, அனார் ,பகிமா ஜகான்,பெண்ணியா, நிலாவெளி சர்மிலா ,சர்மிலா ஸெய்யித் பாயிஸ அலி போன்ற இன்னும் பலர் பெயரின் குப்பிட்டு தனது உரையை தொடர்ந்தார் அவரின் உரையை தொடர்ந்து ஒலிவடிவத்தில் கேட்கலாம்.
“கணவனையிழந்த பெண்கள எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும்-காதி நீதிமன்றங்களை முன்வைத்து“– ஷாமிலா முஸ்டீன் –
உலகில் 25 வீதமான மக்களால் அதாவது 1700 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பின்பற்றப்படும் இஸ்லாமிய மார்க்கம் உலகின் தவிர்க்க முடியாத ஒரு பெரும் பரப்பு. பெண்ணுக்கென்று அளித்துள்ள மதிப்பும் பெறுமதியும் உரிமைகளும், இந்தப் பரப்பின் அசல் வடிவத்தில் சிறப்பாக இருந்தாலும் காலாகாலமாக பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுவந்த பெண்ணுரிமை ஏதோவோர் விதத்தில் அறிவற்ற தெளிவற்ற உலகின் போக்குகளுக்கு ஏற்ப தம்மை விருத்தி செய்து கொள்ளாத மறைகரம் கொண்டு மறுக்கப்படும் சூழ்நிலையில்தான் இந்தத் தலைப்பு குறித்து இங்கு பேச வேண்டியுள்ளது.இலங்கை முஸ்லிம்களுக்கென்றுள்ள தனியார் சட்டம் தொடர்பான முழுமயான வாதத்தினை வேண்டி நிற்கும் இந்தத் தலைப்பு தரப்பட்டிருக்கும் குறுகிய நேரத்தினுள் பூரணமாக அலசமுடியாது என்பதால் குறிப்புக்களாக மட்டும் சில விடயங்களை இஸ்லாமிய அசல் வடிவத்தோடு ஒப்பிட்டு பிற்போக்குத்தனமான அதிகார வரம்பு பெண்களின்பால் திணிக்கப்பட்டுள்ள விதத்தினை ஓரளவாவது விளங்கிக் கொள்ளும் வண்ணம் சமர்ப்பிக்க முனைகின்றேன்.
01. திருமணம்
02. மணமுறிவு அல்லது விவாகரத்து – அரபியில் சொல்வதானால் தலாக்
இந்த இரண்டு விடயங்களையும் மையப்படுத்தி எனது தலைப்பை அனுகலாம் என்று நினைக்கின்றேன். அதற்கு முதல் சில அடிப்படைக் குறிப்புக்களைப் பார்த்துவிடுவோம்.
திருமணம் பள்ளிவாயலை மையப்படுத்தியே பெரும்பாலும் இடம்பெறுகின்றது. விவாகப் பதிவாளரும் உரிய நேரத்தில் பள்ளிவாயலுக்கு வந்துவிடுவார். திருமணம் பள்ளிவாயலில் பதிவு செய்யப்படுவதோடு பொதுச் சட்டத்தின் பிரகாரமும் பதிவாளரினால் பதிவு செய்யப்படும். பெருநகர்ப் புரங்களில் மாத்திரம் திருமண மண்டபத்திற்கே அனைவரும் அழைக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்படும்.
“இலங்கைவரலாற்றில்முஸ்லிம்பெண்களின்கல்விவளர்ச்சியும்அவர்கள்எதிர்நோக்கும்சவால்களும்”– ஜெஸீமாஹமீட்
1910இன் எழுத்தறிவு விது கணிப்பின் படியும் முஸ்லிம் பெண்களின் எழுத்தறிவு வீதம் 1.7 ஆகவே காணப்பட்டமையில் எதுவித ஆச்சரியமுமமில்லை ஆனால் இவர்களோடு ஒப்பிப்டுமிடத்து தமிழர்கிளன் எழுத்தறிவு வீதம் 4.9 ஆகவம் சிங்களவர்களின் எழுத்தறிவு வீதம் 3.5 ஆகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதக்கது. இவ்வாறு பின் தங்கிய இருந்த நிலைப்பாட்டிலிருந்து முஸ்லிம் மகளிர் சமூகத்தை திசை திருப்பவே எம்.சி. சித்திலெப்பையுடன் சேர்ந்து இந்நாட்டிற்கு பிரித்தானிய கைதியாக நாடுகடத்தப்பட்ட அராபி பாஷா வாப்பிச்சி மரைக்கார் எம்.சி. அப்துல் ரஹ்மான் போன்ற தலைவர்களும் பெரம் பாடுபட்டார்களன் இப்பணிகளில் பிதிபலனாக 1884 அளவில் மதரஸதுல் கைரியா (அளுத்கம) பெண் களுக்கான சமயக்கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. அதே போல் காலி,வெலிகம,கண்டி என நாடெங்கும் சிறு சிறு மதரஸாக்கள் பெண்களுக்கு என உதயமாகின
26 ஏப்ரல் 2015 முதல் அமர்வு கலந்துரையாடல் – ஒலிவடிவத்தில் கேட்கலாம்.