மூன்றாவது அமர்வு – தலைமை -ஒளிவடிவம்
கௌரி பழனியப்பன்
“மலையகப் பெண் தொழிலாளர்களின் பிரச்சினைகள்” -எஸ்தர்
தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் காலில் செருப்பில்லாமல் வேலை செய்வதை சகிக்க முடியவில்லை அதனால் அட்டைக்கடிக்கு ஆளாகின்றார்கள் தேயிலதை; தோட்டங்களில் கழிப்பறைகள் இல்லை ஆண்கள் மதுவுக்கு ஆளாகின்றார்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு போவதில் பிரச்சினைகள் உள்ளன ஆகவே மலையகத் தோட்ட தொலிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நாம் வழிவகை செய்ய வேண்டும் அதுவும் பெண்களுக்கான சுகாதார பிரச்சினைகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என தேயிலைக்காட்டுக்குள் தங்களை தொலைத்த பெண்களின் வாழ்வியலை உணர்பூர்வமாக எடுத்துக் கூறியிருந்தார். எஸ்தரின் பேச்சு பலரை கண்கலங்க வைத்தது என்னவோ உண்மை தான்.
பாலர் கல்வியும் பெண்களும் – செல்வி அரபா மன்சூர்
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு சமூக பொருளாதாரதிட்டமில் எத்துணை அவசியமோ அது போன்று சமுதாயமேம்பாட்டுக்கு பாலர்களது எதிர்காலத்தை திட்டமிட்டு வழிநடத்துவது. அவசியமாகுமவேறுபட்ட சூழலிலருந்து மாறுபட்ட மனப்பாங்குகளுடன் துவக்கப்பள்ளிக்குள் வரும் பாலரது உள்ளங்களை புரிந்துகொண்டு அதற்கேற்ப ஆசிரியையகள் பயிற்றுவிக்க வேண்டும் பாலர் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் அதிகம் அலட்டிக்கொள்வது காணமுடிகின்றது. 1992 முதல் கண்டிசத்யோதய நிறுவனம் குருநாகல் கல்விவட்டம் கேகாலை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணி பாணந்துறை அகதியா இயக்கம் முதலானவையம் பெண்களுக்கான பாலர் பாடசாலை ஆசரிய பயிற்சி நெறிகளை நடாத்தி வருகின்றது தகவல்களுடன் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
வெளிநாட்டுப் பணிப்பெண்களும் மலையகமும் – யோகித்தா யோன்
அவர் தொடர்கையில் இன்றைய உலக மயமாக்கல் சூழலானது திரண்ட தாராளவாதத்தையே கடந்த நூற்றாண்டுகளாக நாடுகடுகடந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது லாபத்தையே நோக்கமாக கொண்டுள்ள திறன் சாரா தொழில்கள், உள்ளுர் விவசாயம் வீழ்ச்சியடைகின்றமையால் வறுமை காரணமாக தொழிலாளர்கள் திறன் சாரா தொழிலில் ஈடுபடுபவர்களாக உள்ளனர்.; லாபத்தை நோக்கியும், பெரும்பான்மை சமூகம் நுகர் கலாச்சாரத்தில் சிக்கிய சமூகமாக கட்டமைக்கப்பட்டள்ளதுடன் குறிப்பாக வேலையில்லா பிரச்சினை காரணமாகவும் இவர்கள் புலம்பெயர் கின்றனர். குறிப்பாக வளர்முக நாடுகளில் உள்ளவர்களே கூடுதலாக புலம்பெயர்கின்றனர். இதனால் வெளிநாடுகளுக்கு அதுவும் மத்தியகிழக்கு நாடுகளுக்கு புலம்பெயர்கின்றார்கள
மலையகப் பேச்சு தமிழில் பெண்ணியம் –சுதாஜினி
அவரின் பேச்சு தமிழ், குரல் என்பன அரங்கத்தை அமைதியாக வைத்திருந்தது. மிகவும் அழகாக பேசினார். மலையகப் பேச்சுத் தமிழில் பெண்ணியம் என்ற பொருள் பட பேசிய சுதாஜினி
மாதமோ சித்திரை நேரமோ 3.30 எல்லோருமே நித்திரை என்று அழகாக எல்லோரையும் சிரிக்க வைத்து தனது உரையை தொடங்கிய சுதாஜினி; மலையக பேச்சுத் தமிழில் பெண்ணியம் என்ற தனது பார்வையை முன்வைத்தார். சமூகத்தின் மிகப்பெரிய கூறு தான் மொழி மலையகத்தின் பேச்சு தமிழைப்பற்றி ஆய்வு செய்தேன் அதற்கு பலர் தட்டிக்கொடுத்தனர் மலையக பேச்சு தமிழ் ஒரு உருவயியல் ஆய்வு என்பதை ஆய்வு செய்தேன் நாங்கள் மலையக மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லுகின்ற போது அங்கு எம்முடன் வடக்கு கிழக்கு மாணவர்கள் தான் பயிலுவார்கள் அப்போது எமக்கு சமூகம் பற்றி சிந்தனை குறைவாக இருந்த போது ஆணாதிக்க சிந்தனை கொண்ட பெண்கள் எம்மை நீங்க பேசுறது எங்களுக்கு ஒண்டுமே புரியல
மூன்றாவது அமர்வின் கலந்துரையாடல் “ –ஒளிவடிவம்