இரண்டாவது அமர்வுக்கு தலைமை -லுணுகல சிறி ஒலி வடிவம்
( அமர்வுகளுக்கு தலைமைதாங்க முதலில் யாரையும் நியமிக்கவில்லை கூட்டத்திற்கு வந்துள்ள பெண்களையே தலைமை தாங்க திடீரென்று அமைக்கப்பட்டமை தலைமை தாங்குபவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருந்தது. )
“எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண்”>எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண் – ஓவியா –
எதிர் காலத்தை பற்றி சிந்திக்க வேண்டுமாயின் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் புரிந்து கொள்கிற மனிதர்களால் தான்; எதிர்காலத்தை பற்றி யோசிப்பது பெரிய விடயமாக இருக்காது என தொடங்கிய அவரது உரை மனிதர்கள் வாழ்க்கையை கூட்டமாகத்தான் வாழ்ந்தனர் ஆதிகால சமூகத்தில் குடும்பத்தை பெண்கள் தான் தலைமை தாங்கினாள். ஆனாலும்; உலகம் முழுவதும் எதிர் காலத்தை இருக்கிறது. இங்கு ஆணாதிக்கத்தின் மிகத் தேர்ந்தெடுத்த வடிவமாக சாதியும் இருக்கிறது, ‘ஆணாதிக்கம்’, ‘சாதி’ இவை இரண்டுமே மக்கள் மனதில் புனிதமானவை என்றும் தங்களுக்குப் பாதுகாப்பானவை என்றும் நம்ப வைக்கப் பட்டிருக்கின்றன.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் – சரோஜா சிவச்சந்திரன்
போர்க்காலமும் பொருளாதாரமும்,சிர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு,எதிர்கால அணுகுமுறைகள் என பல வகையாக குறிப்பிட் அவர் பெண்களுக்கெதிரான வன்முறையானது உலகாளவிய ரீதியில் சகல சமூக காலச்சாரங்களையும் தொட்டு நிற்கின்றது. பெண்கள் எந்த இனம் எந்த வர்க்கத்தினர் என்ற வேறுபாடு இன்றி பாதிக்கின்றது பெண்கள் வாழக்கூடிய சுமுகமான சூழல் ஒன்றை உருவாக்குவதற்கு மேலம் பல முயற்சிகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. போர் இடம் பெறும் நாடுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பலாத்கார செயற்பாடுகள் பதிதான ஒன்றல்ல பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது மிக இலகுவாக நடந்துவிடக்கூடிய விடயமல்ல
போர்ச்சூழலில் பெண் – ச. விஜயலட்சுமி
நான் இங்கு விஜயலட்சுமியாக பேச வரவில்லை நான் எல்லோருடைய குரலாகவும் பேச வந்துள்ளேன் என ஆரம்பித்த அவர் போர் என்பது வேண்டாம் அந்த வன்முறை வேண்டாம் அந்த விடயத்தில் இருந்து அழுத்தி சொல்ல இந்த தலைப்பை எடுத்து தான் பேச வந்துள்ளதாகவும் -இந்த போர்ச்சூழலில் பெண் என்ற தலைப்பு உலகளாவிய அரசியலிருந்து பெண்ணியம் முன்னெடுக்க வேண்டிய பெண்ணிய அரசியல் சார்ந்து பேசுவதாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் ஊடறு .கொம் தொடர்ச்சியாக பெண்களுக்கு குரல் கொடுத்து வருவதாகவும் இந்த நிலையில் இவ்வரங்கில் பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு எல்லைகளை கடந்தும் பெண்கள் ஒருங்கிநை;துள்ளோம் பல தரப்பிலிருந்தும் ஒருங்கிணைந்துள்ள இவ் தருணத்தில்; நான் உங்கள் முன்னும் ஊடறு முன்னும் ஒரு கோரிக்கைய முன்வைக்க விரும்புகிறேன்
இருபதாம் நூற்றாண்டில் பால்நிலைச்சமத்துவம் – கெகிறாவ ஸஹனா
பால்நிலைச்சமத்துவம்- 1789இல் பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கத்தோடு பெண்களால் ஆரம்பிக்கப்பட்ட பெண்ணுரிமைக்கான போராட்டத்தில் பெண்கள் பெரிதும் பங்கேற்றனர். ஆனாலும் இன்று வரை தங்களுடைய உரிமைகளை பெண்கள் பேராடியே பெற்று வருகின்றனர் இதே வேளை ஸ்கண்டிநேவிய நாடுகளில் பெண்களுக்கு பல உரிமைகளையும் வழங்கி பெண்களை பெருமைபடுத்தியுள்ளமையை குறிப்பிட்ட அவர் சுவீடனை பெண்களின் நாடு என்றே அழைக்கிறார்கள் என்றும் ஆப்கானிஸ்தான் சாட் முதலிய நாடுகளில் பெண்களின் நிலை இழிந்தளவிலேயே உள்ளது
தலித் இலக்கியத்தில் பெண் எழுத்தாளர்களின் வகிபாகம் பற்றி – சுலைகா பேகம்
பெண்ணிலைவாத சிந்தனைகள் சமூகத்திலே 1970களில் தோற்றம் பெறுகையில் பெண்களின் அனுபவங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் புதிய களம் தந்த குரல்களாக உயர் சாதிப் பெண்கள் இருந்தனர் ஆபிரிக்க அமெரிக்க கறுப்பு இpனத்தவர்களின் போராட்டத்தோடு தலித்தியர்களது போராட்டம் ஒப்பீடு செய்யப்படுவது, மூட நம்பிக்கைகள் கல்வியறிவற்ற வறுமை சூழ்ந்த தலித்துகைளை சமூகத்தில் சமயத்தின் பெயரால் அவர்களை தேவதாசிகளாக மாற்றவும் செய்தது.
இரண்டாவது அமர்வின் பின் கலந்துரையாடல்