பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் இன்று

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்­ட­மைப்பின் அறிவிப்பு

10422061_609616232515966_7880506997469764706_n

இன்று நவம்பர் 25 ஆம் திகதி பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை  ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச தின­மாக உல­கெங்கும் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கி­றது. 1999 ஆம் ஆண்டு ஐ.நா.வினால் உத்­தி­யோ­கபூர்வமாக இத்­தினம் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

1960 ஆம் ஆண்டு டொமி­னிக்கன் குடி­ய­ரசில் அர­சியல் செயற்­பா­டு­களில் ஈடு­பட்ட மிரபால் சகோ­த­ரிகள் எனும் சகோ­த­ரிகள் மூவர் (பெட்­றீ­சியா மிராபல் ரெயீஸ், மரியா மினே­ரவா மிராபல் ரெயீஸ், அன்­டோ­னியா மரியா தெரேசா மிராபல் ரெயீஸ்) சர்­வா­தி­காரி ரபாயெல் ட்ருஜில்­லோவின் உத்­த­ர­வினால் 1960 நவம்பர் 25 ஆம் திகதி கொல்­லப்­பட்­ட­தை­யொட்டி பெண்கள் மீதான வன்­மு­றைக­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச தின­மாக நவம்பர் 25 ஆம் திகதி தெரி­வு­ செய்­யப்­பட்டது.

பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச தினத்தை முன்­னிட்டு, வன்­முறை ஒழிப்பு உல­கெங்கும் பல்­வேறு நிகழ்­வுகள் நடத்­தப்­ப­டு­வது வழக்­க­மாகும்.

2014 ஆம் ஆண்டின் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை ஒழிப்­ப­தற்­கான சர்­வ­தேச தினத்­திற்­காக ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனினால் முன்­மொ­ழி­யப்­பட்ட தொனிப்­பொருள் உங்கள் சூழலை செம்­மஞ்சள் நிற­மாக்­குங்கள் (Orange YOUR Neighbourhood) என்­ப­தாகும்.

16 days banner 2014

http://srilanka16days.wordpress.com/

இன்று முதல் சர்­வ­தேச மனித உரி­மைகள் தின­மான டிசெம்பர் 10 ஆம் திகதி வரை­யான 16 தினங்­க­ளுக்கு இத்­தொ­னிப்­பொ­ருளில் பல்­வேறு நிகழ்­வுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

இலங்­கையில் இவ்­வாண்டின் “பால்­நிலை அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றை­க­ளுக்கு எதி­ரான 16 நாட்கள் செயற்­பாட்டை” முன்­னிட்டு இலங்­கையில் பால்­நிலை அடிப்­ப­டை­யி­லான வன்­மு­றை­க­ளுக்கு எதி­ரா­ன மன்­றத்தின் (GBV Forum) அங்­கத்­த­வர்கள் பல்­வே­று­பட்ட செயற்­பா­டு­களை நாடு­முழுவதும் ஏற்­பாடு செய்­துள்­ளனர்.

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்­ட­மைப்­பா­னது (WMC) 16 நாட்­களைக் கொண்ட இந்த சர்­வ­தேச பிர­சா­ரத்­திற்கு srilanka16days.wordpress.comஎன்ற வலைப்­ப­திவின் ஊடாகப் பங்­க­ளிப்புச் செய்யும் பொருட்டு மக்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.

16 நாட்கள் பிர­சா­ரத்­துடன் தொடர்­பு­டைய உங்­க­ளது எண்­ணங்­கள், அனு­ப­வங்கள் அல்­லது நாட்டில் இடம்­பெ­று­கின்ற செயற்­பா­டு­களின் இற்­றைப்­ப­டுத்­தல்கள் (updates) போன்­ற­வற்றை அனுப்பி வைத்தால் அவை மேற்­படி தளத்தில் பதி­வேற்­றப்­படும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சித்­திரம், எழுத்­தாக்கம், புகைப்­படம், கட்­டு­ரைகள், குறுந்­தி­ரைப்­ப­டங்கள், நேர்­கா­ணல்கள், கேலிச்­சித்­தி­ரங்கள், ஆவ­ணப்­ப­டங்கள் மற்றும் வலை­யொ­லிகள் (podcasts) போன்ற படைப்புக்களாக தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அனுப்பலாம். இத்தகைய படைப்புகளை
wmcsrilanka@gmail.comஎனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கும் Sri Lanka 16 days campaign எனும் விட­யத் ­த­லைப்­பிட்டு அனுப்­பலாம் என பெண்கள் மற்றும் ஊடகக் கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது.

thanks to http://srilanka16days.wordpress.com/2014/11/26/sri-lanka-16-days-campaign-in-metro-news/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *