எம் கீதா இந்தியா -Thankls Thendral
பெண்களும் அரசியலும்
20.04.14 அன்று விஜய் டி.வி. நீயா ?நானா? விவாதம் .பெண்களுக்கு அரசியல் அறிவு தேவையா ?இல்லையா?என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக கவிஞர்.குட்டி ரேவதியும்,வழக்குரைஞர் அஜிதா அவர்களும் கலந்து கொண்டனர்.
பெண்மையின் இரு பக்கமும் அன்று உணரப்பட்டது.
தேவை இல்லை என்பவர்களின் கருத்துக்களாய்
—————————————————————————–
என் குடும்பம் நல்லாருக்கு எனக்கு ஏன் அரசியல் தெரியனும் ?தேவையில்லை என்பதே பெரும்பாலோரின் கருத்தானது.
எனக்கு அழுத்தும் வேலைச்சுமையில் இது தேவையில்லைஇஅரசியல் ஆர்வமூட்டுவதாக இல்லை ,அழகு முக்கியமாகக் கருதுவதால் தேவையில்லை என பெண்களின் அறியாமையை வெட்டவெளிச்சமாக்கின.ஆசிரியரின் கூற்றாய் அரசியியலைப் பற்றி மாணவிகளுக்கும் சொல்லித்தரமாட்டேன் என்றது அதிர்ச்சியைத் தந்தது.நாட்டின் அரசியியலையும் இபொருளாதாரத்தையும் உணராத மாணவர்கள் எப்படி வருங்காலத் தூண்கள் ஆவார்கள்.
தேவை என்பவர்களின் கூற்று மகிழ்வைத் தந்தது.-
—————————————————————————–
ழூஎனக்குத் தேவையானஇநான் விரும்பும் கல்வி எனக்கு கிடைக்கவில்லை எனில்காரணமென்ன என விளக்கி.கல்விக்கொள்கையை உருவாக்கும் அரசியியல் அறிவு கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் .அரசியியல் பற்றி பெண்கள் தெரிந்திருக்கூடாது என்பதிலும் ஒரு அரசியியல் உள்ளதென ஒரு கல்லூரிப்பெண் அழக்காக பொறுமையுடன் எடுத்துக்கூறியது சிறப்பாக அமைந்தது. தன் மகளுக்கு அண்மையில் உள்ள பள்ளியில் ஆர்.டி.இ.ஆக்ட்டின் படி கல்வி கேட்டுப் போராடியப்பெண் அழகாக அரசியியல் அறிவு ஏன் தேவை என்பதைப் பற்றி விளக்கினார்.
வழக்குரைஞர் அஜிதா
—————————————
தரமற்ற பொருளை வாங்க வேண்டிய கட்டாயத்தை அரசயியல் உருவாக்கியுள்ளது.
தாய்ப்பாலில் கூட 17%விசம் கலந்துள்ளதென ஆய்வு கூறுகின்றது.
டி.வி.க்கள் எந்த பென்ணும் ஒல்லியாக அழகாக இவெள்ளையாக இருக்க வேண்டுமென தூண்டுகின்றது.இதை பார்க்கும் பெண்கள் அழகு நிலையம்இஅழகு சாதனப்பொருட்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டிய
கட்டாயத்திற்கு தள்ளப்படுவதும் ஒரு அரசியியல் தான்.நாம் நாமாக இருப்பதை தவறு எனக் கற்பிக்கப்படுகின்றது.நமக்கு நடக்கும் வன்முறைகளை தட்டிக் கேட்க அரசியியல் அறிவு தேவையாக உள்ளதென கூறினார்கள்.
கவிஞர் குட்டி ரேவதி
——————————–
தற்பொழுது உள்ளாட்சி அரசியியலில் 44இ000 பெண்கள் பதவியில் உள்ளனர். கொஞ்சம் அரசியல் அறிவுள்ள பெண்கள் உள்ளனர்.ஆனால் பிரதிநிதித்துவம் எடுப்பதில்லை என்பதே குறை. பிறருக்குத் தெரியாமல் வீட்டிற்குள் நடக்கும் வன்முறைகளை ஏற்றுக்கொள்ள பழக்கப்பட்டுள்ளனர். தன் உரிமை எதுவென அறியாத நிலையில் பென்கள் உள்ளனர். 150வருடங்களுக்கு முன் சாவித்திரி பாய் என்ற பெண்மணி தெருவில் இறங்கிப் போராடியதன் விளைவே இன்று நாம் கற்கும் கல்விக்கு அடிப்படை என்பதை உணரவில்லை.எதுவும் போராடியே பெண்கள் இந்த நிலையை அடைந்துள்ளனர். பெண்களின் சுயநலம் அடியோடு அழிக்கப்பட வேண்டும். சமூகம் பெண்களை ஒதுக்கி வைத்துள்ளதை அறியாத நிலையிலே இன்று பெண்கள் உள்ளனர். என விவாத களம் பெண்களுக்கு அரசியல் அறிவு தேவை என்பதை அவர்கள் வாயிலாகவே சொல்லவைத்த விதம் அழகு.
———————-
என் கருத்தாய்
மனித இனத்தில் சரிபாதி உள்ள பெண்கள் ஈடுபடாத எதுவும் சிறக்காது
உரிமையோடு வாங்கண்ணே.வாங்கக்கா என அழைத்து வியாபாரம் செய்யும் அண்ணாச்சி கடைகள் தொலைந்து போய்க்கொண்டுள்ளது.பேரம் பேசி இஉறவை வளர்க்கும் நம் சிறு வணிகர்கள் பன்னாட்டு வணிகத்தின் பளபளப்பின் முன்னால் நிற்கமுடியாமல் அழிந்து கொண்டுள்ளனர்.
ஒரே இடத்தில் எளிதாக வாங்கலாம் அவன் என்ன விலை விற்றாலும் பரவாயில்லை என ஓடும் நாம் நம் நாட்டு வணிகர்கள் அழிவது பற்றி சற்றும் யோசித்தோமில்லை.
கல்விக்கு விலை கொடுக்க பணத்தை நோக்கி பறக்கும் நாம் இதவறவிடுவது நம் உறவுகளை என்பதை உணர்ந்தோமில்லை.
இவ்விவாதத்தில் கலந்து கொண்டு அரசியியல் அறிவு வேண்டும் என கூறிய பெண்கள் எளிமையாக இருந்தது அழகு.மகிழ்வாகவும் இருந்தது.அறிவை நாடும் பெண் ஆடம்பரத்தை நாடமாட்டாள் என்பதைக்காட்டியது.
தெளிவாக கருத்துக்களை பொறுமையாக எடுத்துக்கூறிய விதமும் அருமை.
அவர்களின் விரிந்த விசாலமான பார்வை பெண்மையின் சிறப்பை மேலும் கூட்டுவதாக அமைந்தது.வாழ்த்துக்கள் கூறவைத்தது.
தேவையில்லை என வாதிட்டவர்களின் ஆடம்பரமும்,தெளிவில்லாத பதட்டமான பேச்சும்,தான் பிடித்த முயலுக்கு மூணுகால் தான் என பிடிவாதமாக இருந்ததும்,சுயநலமான தன்மையும் பெண் வளர வேண்டிய பாதை நெடுந்தூரம் என்பதை சுட்டிக்காட்டியது
.நாம் வாழும் வாழ்க்கையில் அரசியியல் கலந்துள்ளது .இதை அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் பெண்ணினம் உள்ளது என உலகுக்கு உணர்த்தும் விதமாய்
விஜய் டி.வி.யின் நீயா?நானா?
அமைந்தது நிகழ்ச்சி தயாரித்த அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் நன்றியும்.