ஒரு சினிமா

நன்றி : குங்குமம் தோழி,
(குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து)

ஆரம்பத்தில்  திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் காரணம் முரண்பட்ட கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதும், பிரசுரிப்பதும், தான் அந்த வரிசையில் பெண்களுக்கான இணைய முகமாகவும்,

Foto: ஒரு சினிமா
      சின்ன வயதிலிருந்து சினிமா வாழ்க்கையோடு பொருத்தமில்லாதது என்று எனது பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டி சினிமா மேலான வெறுப்பையே தந்திருந்தது. தற்செயலாக நான் பார்க்க நேர்ந்த படங்களும் வன்முறையும் பொய்யான காதலுமாயும் பெண்களுக்கு எதிராக வசனங்களாகவும் நிரவிக்கிடக்க தூர ஓடி வந்து விட்டேன்.
 ஆனால் என் குழந்தைகள் வளர்ந்த பிறகு எனக்கு எல்லா திரைப் படங்களையும் அறிமுகப்படுத்தினர். இதில் எதுவும் விதிவிலக்கில்லை. காதல், திரில்லர், கார்ட்டூன், புனைவுகள் இன்னும் சில நேரம் மூளையை கழட்டி வைத்து விட்டு வாருங்களம்மா என்பது போன்ற படங்களும் அடக்கம்.
 சமீபத்தில் சென்னையில் மூத்த பையனுடன் சுற்ற நேர்ந்தது. அப்பொழுது அவன் அழைத்துப் போன சினிமாதான் frozen 3D   குழந்தைகளுக்கான கதை என்ற அலட்சியத்தோடு அமர்ந்த எனக்கு, குழந்தைகளுக்கான கதைதான் எங்களது வாழ்வின் பல திறப்புகளையும் நவரசங்களையும் சரியான விதத்தில் தருவதாக உள்ளது என புரிய வைத்தது.
  ”காதல்தான் இயற்கையையும், கட்டுப்படமறுக்கும் சக்தியையும் நெறிப்படுத்தும் கருவியாக இருக்கும்” என நமக்கு புரிய வைக்க எடுக்கப்பட்ட கதை.
 இரு சகோதரிகள் எல்சா,ஆனா மூத்தவளான எல்சாவிற்கு எதையும் உறைய வைக்கக் கூடிய அபார சக்தி உண்டு. அது அவளது கட்டுப்பாட்டை மீறி ஒரு முறை விளையாட்டாகப் போய் விட தங்கை ஆனா சாவின் வாசலுக்குச் சென்று இயற்கையின் உதவியோடு திரும்புகின்றாள். அன்று முதல் இரண்டு சகோதரிகளும் அறைக்குள் தனித்தனியே வசிக்கத் தொடங்குகின்றனர். எல்சா பதவியேற்கும் நாள் நெருங்கிய போது இருவரும் அறைகளை விட்டு வெளியே வருகின்றனர்.
 வளர்ந்துவிட்ட அவர்கள் ஒருவரையொருவர் மட்டுமல்லாது  உலகத்திலுள்ள  எல்லாவற்றையுமே  புதிதாக சந்திக்கின்றனர். எல்சா தன் கையிலிருந்த உறையும் தன்மைக்கான சக்தி அப்படியே இருப்பதை உணர்ந்து பதறுகிறாள்.
 பதவியேற்று முடிந்ததும் ஆனாவை இளவரசன் ஹன்ஸ் சந்திக்க இருவருக்குள்ளும் காதல் மலர்கின்றது. இருவரும்  மணமுடித்துக் கொள்ள அனுமதியை எல்சாவிடம் கேட்கின்றனர். பார்த்தவுடன் எப்படி காதல் வரும், புரிதல் வரும் என்ற கேள்வியில் அவள் மறுக்க, எல்சா கை பற்றி ஆனா கெஞ்ச தவறுதலாக  எல்சாவின் கையுறை உருவிவிட நாடு நகரம் கடல், எல்லாம் அவளது சக்தியால் உறைந்து போக நாட்டை விட்டு வெளியேறி தனக்கான பனியாலான அரண்மனையைக் கட்டிக் கொண்டு தனிமையில் வாழுகின்றாள்.
 அக்காவைத் தேடி காட்டில் அலையும் ஆனா வழியில் எப்படி அக்காவைச் சேருகின்றாள். அவள் உறையும் தன்மை அவளை விட்டுப் போனதா ? நகரம் திரும்ப வெப்ப நிலைக்கு வந்ததா இதுவே  திரைப்படம்  
இன்று திரைக் கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்ட இடத்திலிருந்து ஒரு அழகான கதையை வாழ்வின் கதையை ஒவ்வொரு பாத்திரமும் முக்கியத்துவம் என்று சொல்லக் கூடியதான கதையை தந்த frozen படம் திரும்ப திரும்ப எண்ணிப்பார்க்க வேறு வேறு காட்சிகளையும் அனுபவத்தையும் தருகின்றது. படத்தில் இன்னுமொரு முக்கிய அம்சம் இசை. நம்மை மயக்கும் பாடல்களோடு படம் முழுக்க நகருகின்றது.
 உறைபனி அரண்மனை, காடு, நகரம் எல்லாமே நமக்கென்றே குளிரை தந்து விடுகின்றது. குளிரிலிருந்து விடுபடும் எண்ணமோடுதான் திரை அரங்கை விட்டு வெளிவந்தேன்.
ஒரு புத்தகம்
 ஆர்.சூடாமணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அடங்கிய ”நாகலிங்க மரம்” தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதிலிருந்த அத்தனை கதைகளும் பெண்களின் பாடுகளை வேறு வேறு கோணத்திலிருந்து வாசிக்கத் தருபவை. . என் வாசிப்பில் ”நான்காவது ஆசிரமம்” சிறுகதை.
 சமீபத்தில் நடந்த இயக்குநரின் மரணத்திற்குப் பின்னாளான பெண்களின் வாழ்வு குறித்து எழுந்த சர்ச்சைகள் அதில் இயக்குநரை புனிதராக்கி, பெண்களை தியாகங்களாக்கி நடந்தேறிய நாடகத்தின் முகத்தில் இந்த ஆர். சூடாமணியின் சிறுகதை காறி உமிழக் கூடியதாய் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
 ”சங்கரி” கதையின் நாயகி. அவள் விவாகரத்து செய்த கணவன், அவளை விவாகரத்து செய்ய முடியாது அவன் பௌதீக உடலை தொலைத்த கணவன் இருவருக்குமான மனப்பகிர்தலாக கதை நகர்கிறது.
 அவள் விவாகரத்து கேட்ட போது அதை தந்தவனும் அவளைப் புரிந்து கொண்டதால் தரவில்லை. ஒரு பழிவாங்கும் மனநிலையில் வழங்குகின்றான் ஆனால் சாபமாகும் என்று அவன் நினைத்தது அவளுக்கு வரமாக மாறிப்போவதை தீயலோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவள் இறந்த பிறகு பிறக்கும் கழிவிரக்கத்தை அடையாளம் காட்டுகிறது கதை. அவள் விவாகரத்துக் கேட்டபோது தர மறுத்த கணவனும் அவள் மேல் உள்ள பேரண்பால் அல்ல. அவள் அன்பை ஒரு பொருளாக்கிவிட்ட மனோநிலையில்தான்.
 எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் சங்கரியை ஆதரிக்கின்ற ஆணாக இருந்தாலும் அவனும் பெண்னை தனக்கான உடைமைப் பொருளாக மாற்றும் மனோநிலைக்குள் இருப்பதை சுட்டிக் காண்பிக்கின்ற சிறுகதை. 
 பழகிப்போன சமூக கட்டமைப்பிலிருந்து ஒரு பெண் புதிதாய் தன்னைத் தானே சந்திப்பதை சிக்கலில்லாமல் உணர வைத்துப் போகின்ற சிறுகதை எத்தனை ஆண்களுக்கு முன் சூடாமணி பேசிப் போயிருக்கின்றாள். ஆனால் கலைத்துறையில் இருந்தும் அறிவுத் தளத்தில் சிந்தித்தும் வாழ்ந்த தலைமுறை கூட உறவுகளை அடுத்தவரை திங்காமல் வைத்துக் கொள்வது இன்றும் பழகாமல் இருப்பதால்தான் இருவருக்கிடையேயான அந்தரங்க உறவுகள் பேசு பொருளாகி விடுகின்ற சந்தர்ப்பத்தில் சூடாமணியின் நான்காம் ஆசிரமும் என்னை நிறை உணர்வில் சிந்திக்க வைத்த கதை.
இணையம்
 98ஆம் ஆண்டில் இணையம் எனக்கு அறிமுகமாகிய போது  அதிலிருந்த தமிழ் எனை ஆச்சரியப்படுத்த, ஆச்சரியம் தந்த தேடல் எனக்குள் இருந்த எழுத்து செயல்பாட்டை இலக்கிய உலகிற்கு தந்து போனது.
 ஆரம்ப இலக்கிய பத்திரிக்கைகளான ஆறாம்திணை, திண்ணை, பதிவுகள் தொடங்கி இன்றைய வலைப்பூக்கள், முகப்புத்தகங்கள் வரை வந்தாயிற்று.  இன்றைய முகப்புத்தகங்கள் மீது அறிமுகமாகுபவர்களுக்கு இருக்கும் ஆர்வக் கோளாறு  இணைய தமிழ் வளர்ச்சியோடு படிப்படியாக வளர்ந்த எனக்கு இல்லாமல் போனதில் ஆச்சரியமொன்றுமில்லை. பெரியார் என வியத்தலும் இலமே சிறியார் என இகழ்தலும் இலமே என்ற அடிப்படையில் புதியவர்கள் பெருமதிப்பான விசயத்தை பதிவு செய்வதும், படைப்பதும், அனுபவஸ்தர்கள் பக்கம் பக்கமாக எழுதிய போதும் நேர்மைகளின் நிறங்கள் வெளுத்திருப்பதும் இன்று காணக்கிடைக்கின்ற ஒன்று.
 இணையத்தினால் அறிமுகமாகி ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டு வந்தேன் என்று 2001ல் சொன்ன போது, அது ஒரு விசயமாகவே அன்று பதிவாகவில்லை. ஆனால் இன்றோ! இந்த புத்தகக் கண்காட்சியின் போது வந்த கவிதைத் தொகுப்புகளில் 30  தொகுப்புகள் பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி, அடையாளபடுத்தப்பட்டு வந்த  தொகுப்புகள், பெரியளவில்  பலரது கவனத்தை ஈர்த்தன.
 ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால்  அதற்குக் காரணம்  முரண்பட்ட கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதும், பிரசுரிப்பதும், தான் அந்த வரிசையில் பெண்களுக்கான இணைய முகமாகவும், அவர்களின் வெளியை உலகுக்கு அறிவிக்கும் தளமாகவும், பெண் சிக்கல்கள் குறித்த எல்லா கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதுமான ஊடறு.காம். நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளம் “அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல்” என்ற கட்டியத்தோடு  வெளிவரும் இவ்விதழ் ஓவியம், கவிதை, இலக்கிய செயல்பாடுகள், படைப்புகள், குறும்படம், திரைப்படங்கள், அதிலும் பெண் குறித்து அக்கறை உள்ள அனைத்து கலை இலக்கிய படைப்புகள் பேசவும், விவாதிக்கவும், கூடிய தளமாக உள்ளது. பெண்கள் படைப்புகள் குறித்து அது எவ்வகையாயினும், ஓவியமோ, கவிதையோ, திரைபடமோ ஏற்கனவே இருக்கின்ற முன்தீர்மானங்களின் வழிதான் அளவீடுகள் கொள்ளப்படுகின்றன. எனவே மீண்டும் மீண்டும் பெண் சுயசிந்தனை ஆணின் அதிகார அவ்வீடுகளுக்குள், அவர்களின் சம்மதம் பெற வேண்டி சரணடைந்து விடுகின்றது.
 அதை தகர்த்து விட ஊடறு போன்று இணையதளங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன. 
ஓர் இடம்
பட்டீஸ்வரா கோவில்கள்
   குவாலியரிலிருந்து  40 கி.மீ தூரத்திலுள்ள படாவலி கிராமத்திற்கு தென்மேற்கில் ஒரு மலையின் மேற்குச் சரிவில் மண்ணுக்குள் புதையுண்டு கிடந்திருந்தன. அவை 6லிருந்து 9ஆம் நூற்றாண்டுக்குரியவையாய் இருந்திருக்கின்றன. படிக்கட்டுகளுடன் கூடிய குளங்கள். பெரிய கோவில் ஒன்று சிறிய சிறிய சிற்பங்களை உடைய தொடராக 25 கோவில்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.  அஸ்திவாரத்திலுள்ள கற்கள் இரும்பு  ”ப” வடிவ கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன ஆங்காங்கே அக்கம்பிகள் கிடப்பதைக் காணமுடிகிறது. போன ஆண்டு செப்டம்பர்  பயணத்திலேயே அற்புதமான உணர்வைத் தந்ததே இந்த இடம்தான்,         இரண்டு முகங்கள் நான்கு பக்கமும் படித்துறைகளுடன் காணப்படுகின்றன. ஒரு சிவலிங்கத்தை ஐம்பூதங்களைக் குறிக்கும் ஐந்துமுகலிங்கம் என்றார். இது இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் இருக்கிறது என்றார்.
        இல்லை உதயகிரியில் இதே போன்ற ஒரு லிங்கத்தைப் பார்த்திருக்கின்றேன் என்றேன். அவர் கையில் ஒரு ஆல்பம். எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் என்று கோயில்களின் முன்பிருந்த தோற்றமும் இப்போதிருக்கும் தோற்றமும் . அவர் வேலையின் மீது கொண்டிருந்த ஆத்ம காதல் தெரிந்தது. இதற்கு தொல்லியல் துறையில் பணிபுரியும் எங்கள் தலைவர்தான் காரணம் என்று தன்னடக்கமோடு சொல்லுகின்றார்.. பொருத்தமான கல் துண்டுகள் கிடைக்காமல் போகும் போது அதற்குப் பொருந்துகின்ற பழையது போலவே தோற்றம் தரக் கூடிய கற்களை அதே வேலைப்பாடுகளுடன் பொருந்துமாறு செய்து சேர்த்து விட்டிருக்கின்றனர். 
       எல்லாமே அடுக்கப்பட்ட கற்கள்தான் சிமெண்டோ, சுண்ணாம்போ ஒட்டுவதற்கு பயன்படுத்தாத கட்டிடங்கள் 4 அடி உயரமே கொண்ட கோவில்கள் 25 வரை உள்ளன. உள்ளே சிறு சிறு சிவலிங்கங்கள்.
       இவை எல்லாம் எதற்காக கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற காரணம் இருக்கிறதா என்று கேட்டேன். போரில் வென்றதும் அதன் நினைவாக கோவில்கள் கட்டப்படுவது வழக்கம் என்றார்.  மையமாக இருந்த ஒரு கோவில் அதுவாக இருக்கலாம் 4 அடி உயரமே கொண்ட கோவில்கள் ஏன் போரில் மாண்ட முக்கியப் பிரமுகர்களின்  சமாதுகளாக இருக்கக் கூடாது. நேபாளில் காத்மண்டுவில் இது போன்ற கட்டிடங்கள் ஒரே இடத்தில்  குவியலாக இருக்கின்றன ஆனால் அவை எல்லாமே சமாதுகள்தான். கோவில்கள் இல்லை என்றேன்.
      நீங்க ரொம்ப புத்திசாலியாக இருக்கின்றீர்கள் உங்கள் சந்தேகம் என்னை குழப்பிவிட்டது என்றார்.
      என்னுடையதும் கேள்விகள் தான் பதில்கள் இல்லை என்றேன்.

நன்றி : குங்குமம் தோழி,
(குங்குமம் தோழிக்கு நான் எழுதிக் கொடுத்த கட்டுரை. பத்திரிக்கை edit பண்ணியதையும் சேர்த்து)

அவர்களின் வெளியை உலகுக்கு அறிவிக்கும் தளமாகவும், பெண் சிக்கல்கள் குறித்த எல்லா கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதுமான ஊடறு.காம். நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளம் “அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல்” என்ற கட்டியத்தோடு வெளிவரும் இவ்விதழ் ஓவியம், கவிதை, இலக்கிய செயல்பாடுகள், படைப்புகள், குறும்படம், திரைப்படங்கள், அதிலும் பெண் குறித்து அக்கறை உள்ள அனைத்து கலை இலக்கிய படைப்புகள் பேசவும், விவாதிக்கவும், கூடிய தளமாக உள்ளது. பெண்கள் படைப்புகள் குறித்து அது எவ்வகையாயினும், ஓவியமோ, கவிதையோ, திரைபடமோ ஏற்கனவே இருக்கின்ற முன்தீர்மானங்களின் வழிதான் அளவீடுகள் கொள்ளப்படுகின்றன. எனவே மீண்டும் மீண்டும் பெண் சுயசிந்தனை ஆணின் அதிகார அவ்வீடுகளுக்குள், அவர்களின் சம்மதம் பெற வேண்டி சரணடைந்து விடுகின்றது.அதை தகர்த்து விட ஊடறு போன்று இணையதளங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

சின்ன வயதிலிருந்து சினிமா வாழ்க்கையோடு பொருத்தமில்லாதது என்று எனது பிறந்த ஊரான பட்டிவீரன்பட்டி சினிமா மேலான வெறுப்பையே தந்திருந்தது. தற்செயலாக நான் பார்க்க நேர்ந்த படங்களும் வன்முறையும் பொய்யான காதலுமாயும் பெண்களுக்கு எதிராக வசனங்களாகவும் நிரவிக்கிடக்க தூர ஓடி வந்து விட்டேன்.
ஆனால் என் குழந்தைகள் வளர்ந்த பிறகு எனக்கு எல்லா திரைப் படங்களையும் அறிமுகப்படுத்தினர். இதில் எதுவும் விதிவிலக்கில்லை. காதல், திரில்லர், கார்ட்டூன், புனைவுகள் இன்னும் சில நேரம் மூளையை கழட்டி வைத்து விட்டு வாருங்களம்மா என்பது போன்ற படங்களும் அடக்கம்.

சமீபத்தில் சென்னையில் மூத்த பையனுடன் சுற்ற நேர்ந்தது. அப்பொழுது அவன் அழைத்துப் போன சினிமாதான் frozen 3Dகுழந்தைகளுக்கான கதை என்ற அலட்சியத்தோடு அமர்ந்த எனக்கு, குழந்தைகளுக்கான கதைதான் எங்களது வாழ்வின் பல திறப்புகளையும் நவரசங்களையும் சரியான விதத்தில் தருவதாக உள்ளது என புரிய வைத்தது.

”காதல்தான் இயற்கையையும், கட்டுப்படமறுக்கும் சக்தியையும் நெறிப்படுத்தும் கருவியாக இருக்கும்” என நமக்கு புரிய வைக்க எடுக்கப்பட்ட கதை.
இரு சகோதரிகள் எல்சா,ஆனா மூத்தவளான எல்சாவிற்கு எதையும் உறைய வைக்கக் கூடிய அபார சக்தி உண்டு. அது அவளது கட்டுப்பாட்டை மீறி ஒரு முறை விளையாட்டாகப் போய் விட தங்கை ஆனா சாவின் வாசலுக்குச் சென்று இயற்கையின் உதவியோடு திரும்புகின்றாள். அன்று முதல் இரண்டு சகோதரிகளும் அறைக்குள் தனித்தனியே வசிக்கத் தொடங்குகின்றனர். எல்சா பதவியேற்கும் நாள் நெருங்கிய போது இருவரும் அறைகளை விட்டு வெளியே வருகின்றனர்.வளர்ந்துவிட்ட அவர்கள் ஒருவரையொருவர் மட்டுமல்லாது உலகத்திலுள்ள எல்லாவற்றையுமே புதிதாக சந்திக்கின்றனர். எல்சா தன் கையிலிருந்த உறையும் தன்மைக்கான சக்தி அப்படியே இருப்பதை உணர்ந்து பதறுகிறாள்.

பதவியேற்று முடிந்ததும் ஆனாவை இளவரசன் ஹன்ஸ் சந்திக்க இருவருக்குள்ளும் காதல் மலர்கின்றது. இருவரும் மணமுடித்துக் கொள்ள அனுமதியை எல்சாவிடம் கேட்கின்றனர். பார்த்தவுடன் எப்படி காதல் வரும், புரிதல் வரும் என்ற கேள்வியில் அவள் மறுக்க, எல்சா கை பற்றி ஆனா கெஞ்ச தவறுதலாக எல்சாவின் கையுறை உருவிவிட நாடு நகரம் கடல், எல்லாம் அவளது சக்தியால் உறைந்து போக நாட்டை விட்டு வெளியேறி தனக்கான பனியாலான அரண்மனையைக் கட்டிக் கொண்டு தனிமையில் வாழுகின்றாள்.

அக்காவைத் தேடி காட்டில் அலையும் ஆனா வழியில் எப்படி அக்காவைச் சேருகின்றாள். அவள் உறையும் தன்மை அவளை விட்டுப் போனதா ? நகரம் திரும்ப வெப்ப நிலைக்கு வந்ததா இதுவே திரைப்படம்
இன்று திரைக் கதைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டு விட்ட இடத்திலிருந்து ஒரு அழகான கதையை வாழ்வின் கதையை ஒவ்வொரு பாத்திரமும் முக்கியத்துவம் என்று சொல்லக் கூடியதான கதையை தந்த யீக்ஷீஷீக்ஷ்மீஸீ படம் திரும்ப திரும்ப எண்ணிப்பார்க்க வேறு வேறு காட்சிகளையும் அனுபவத்தையும் தருகின்றது. படத்தில் இன்னுமொரு முக்கிய அம்சம் இசை. நம்மை மயக்கும் பாடல்களோடு படம் முழுக்க நகருகின்றது.
உறைபனி அரண்மனை, காடு, நகரம் எல்லாமே நமக்கென்றே குளிரை தந்து விடுகின்றது. குளிரிலிருந்து விடுபடும் எண்ணமோடுதான் திரை அரங்கை விட்டு வெளிவந்தேன்.

ஒரு புத்தகம்

ஆர்.சூடாமணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அடங்கிய ”நாகலிங்க மரம்” தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. அதிலிருந்த அத்தனை கதைகளும் பெண்களின் பாடுகளை வேறு வேறு கோணத்திலிருந்து வாசிக்கத் தருபவை. . என் வாசிப்பில் ”நான்காவது ஆசிரமம்” சிறுகதை.

சமீபத்தில் நடந்த இயக்குநரின் மரணத்திற்குப் பின்னாளான பெண்களின் வாழ்வு குறித்து எழுந்த சர்ச்சைகள் அதில் இயக்குநரை புனிதராக்கி, பெண்களை தியாகங்களாக்கி நடந்தேறிய நாடகத்தின் முகத்தில் இந்த ஆர். சூடாமணியின் சிறுகதை காறி உமிழக் கூடியதாய் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.”சங்கரி” கதையின் நாயகி. அவள் விவாகரத்து செய்த கணவன், அவளை விவாகரத்து செய்ய முடியாது அவன் பௌதீக உடலை தொலைத்த கணவன் இருவருக்குமான மனப்பகிர்தலாக கதை நகர்கிறது.

அவள் விவாகரத்து கேட்ட போது அதை தந்தவனும் அவளைப் புரிந்து கொண்டதால் தரவில்லை. ஒரு பழிவாங்கும் மனநிலையில் வழங்குகின்றான் ஆனால் சாபமாகும் என்று அவன் நினைத்தது அவளுக்கு வரமாக மாறிப்போவதை தீயலோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அவள் இறந்த பிறகு பிறக்கும் கழிவிரக்கத்தை அடையாளம் காட்டுகிறது கதை. அவள் விவாகரத்துக் கேட்டபோது தர மறுத்த கணவனும் அவள் மேல் உள்ள பேரண்பால் அல்ல. அவள் அன்பை ஒரு பொருளாக்கிவிட்ட மனோநிலையில்தான்.

எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் சங்கரியை ஆதரிக்கின்ற ஆணாக இருந்தாலும் அவனும் பெண்னை தனக்கான உடைமைப் பொருளாக மாற்றும் மனோநிலைக்குள் இருப்பதை சுட்டிக் காண்பிக்கின்ற சிறுகதை.
பழகிப்போன சமூக கட்டமைப்பிலிருந்து ஒரு பெண் புதிதாய் தன்னைத் தானே சந்திப்பதை சிக்கலில்லாமல் உணர வைத்துப் போகின்ற சிறுகதை எத்தனை ஆண்களுக்கு முன் சூடாமணி பேசிப் போயிருக்கின்றாள். ஆனால் கலைத்துறையில் இருந்தும் அறிவுத் தளத்தில் சிந்தித்தும் வாழ்ந்த தலைமுறை கூட உறவுகளை அடுத்தவரை திங்காமல் வைத்துக் கொள்வது இன்றும் பழகாமல் இருப்பதால்தான் இருவருக்கிடையேயான அந்தரங்க உறவுகள் பேசு பொருளாகி விடுகின்ற சந்தர்ப்பத்தில் சூடாமணியின் நான்காம் ஆசிரமும் என்னை நிறை உணர்வில் சிந்திக்க வைத்த கதை.

இணையம்

98ஆம் ஆண்டில் இணையம் எனக்கு அறிமுகமாகிய போது அதிலிருந்த தமிழ் எனை ஆச்சரியப்படுத்த, ஆச்சரியம் தந்த தேடல் எனக்குள் இருந்த எழுத்து செயல்பாட்டை இலக்கிய உலகிற்கு தந்து போனது.
ஆரம்ப இலக்கிய பத்திரிக்கைகளான ஆறாம்திணை, திண்ணை, பதிவுகள் தொடங்கி இன்றைய வலைப்பூக்கள், முகப்புத்தகங்கள் வரை வந்தாயிற்று. இன்றைய முகப்புத்தகங்கள் மீது அறிமுகமாகுபவர்களுக்கு இருக்கும் ஆர்வக் கோளாறு இணைய தமிழ் வளர்ச்சியோடு படிப்படியாக வளர்ந்த எனக்கு இல்லாமல் போனதில் ஆச்சரியமொன்றுமில்லை. பெரியார் என வியத்தலும் இலமே சிறியார் என இகழ்தலும் இலமே என்ற அடிப்படையில் புதியவர்கள் பெருமதிப்பான விசயத்தை பதிவு செய்வதும், படைப்பதும், அனுபவஸ்தர்கள் பக்கம் பக்கமாக எழுதிய போதும் நேர்மைகளின் நிறங்கள் வெளுத்திருப்பதும் இன்று காணக்கிடைக்கின்ற ஒன்று.
இணையத்தினால் அறிமுகமாகி ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டு வந்தேன் என்று 2001ல் சொன்ன போது, அது ஒரு விசயமாகவே அன்று பதிவாகவில்லை. ஆனால் இன்றோ! இந்த புத்தகக் கண்காட்சியின் போது வந்த கவிதைத் தொகுப்புகளில் 30 தொகுப்புகள் பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி, அடையாளபடுத்தப்பட்டு வந்த தொகுப்புகள், பெரியளவில் பலரது கவனத்தை ஈர்த்தன.

ஆரம்பத்தில் திண்ணை மற்றும் பதிவுகள் இணைய பத்திரிக்கைகளாக இன்றும் பேஸ்புக், வலைப்பூக்களின் ஆக்கிரமிப்பின் பின்னும் அதே காத்திரத்தோடு இயங்கி வருகிறதென்றால் அதற்குக் காரணம் முரண்பட்ட கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பதும், பிரசுரிப்பதும், தான் அந்த வரிசையில் பெண்களுக்கான இணைய முகமாகவும், அவர்களின் வெளியை உலகுக்கு அறிவிக்கும் தளமாகவும், பெண் சிக்கல்கள் குறித்த எல்லா கருத்துகளுக்கும் மதிப்பளிப்பதுமான ஊடறு.காம். நான் தொடர்ந்து வாசிக்கும் இணையதளம் “அதிகார வெளியினை ஊடறுக்கும் பெண்குரல்” என்ற கட்டியத்தோடு வெளிவரும் இவ்விதழ் ஓவியம், கவிதை, இலக்கிய செயல்பாடுகள், படைப்புகள், குறும்படம், திரைப்படங்கள், அதிலும் பெண் குறித்து அக்கறை உள்ள அனைத்து கலை இலக்கிய படைப்புகள் பேசவும், விவாதிக்கவும், கூடிய தளமாக உள்ளது. பெண்கள் படைப்புகள் குறித்து அது எவ்வகையாயினும், ஓவியமோ, கவிதையோ, திரைபடமோ ஏற்கனவே இருக்கின்ற முன்தீர்மானங்களின் வழிதான் அளவீடுகள் கொள்ளப்படுகின்றன. எனவே மீண்டும் மீண்டும் பெண் சுயசிந்தனை ஆணின் அதிகார அவ்வீடுகளுக்குள், அவர்களின் சம்மதம் பெற வேண்டி சரணடைந்து விடுகின்றது.
அதை தகர்த்து விட ஊடறு போன்று இணையதளங்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

ஓர் இடம்
பட்டீஸ்வரா கோவில்கள்
குவாலியரிலிருந்து 40 கி.மீ தூரத்திலுள்ள படாவலி கிராமத்திற்கு தென்மேற்கில் ஒரு மலையின் மேற்குச் சரிவில் மண்ணுக்குள் புதையுண்டு கிடந்திருந்தன. அவை 6லிருந்து 9ஆம் நூற்றாண்டுக்குரியவையாய் இருந்திருக்கின்றன. படிக்கட்டுகளுடன் கூடிய குளங்கள். பெரிய கோவில் ஒன்று சிறிய சிறிய சிற்பங்களை உடைய தொடராக 25 கோவில்கள் ஆகியவை அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அஸ்திவாரத்திலுள்ள கற்கள் இரும்பு ”ப” வடிவ கம்பிகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன ஆங்காங்கே அக்கம்பிகள் கிடப்பதைக் காணமுடிகிறது. போன ஆண்டு செப்டம்பர் பயணத்திலேயே அற்புதமான உணர்வைத் தந்ததே இந்த இடம்தான், இரண்டு முகங்கள் நான்கு பக்கமும் படித்துறைகளுடன் காணப்படுகின்றன. ஒரு சிவலிங்கத்தை ஐம்பூதங்களைக் குறிக்கும் ஐந்துமுகலிங்கம் என்றார். இது இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் இருக்கிறது என்றார்.

இல்லை உதயகிரியில் இதே போன்ற ஒரு லிங்கத்தைப் பார்த்திருக்கின்றேன் என்றேன். அவர் கையில் ஒரு ஆல்பம். எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் என்று கோயில்களின் முன்பிருந்த தோற்றமும் இப்போதிருக்கும் தோற்றமும் . அவர் வேலையின் மீது கொண்டிருந்த ஆத்ம காதல் தெரிந்தது. இதற்கு தொல்லியல் துறையில் பணிபுரியும் எங்கள் தலைவர்தான் காரணம் என்று தன்னடக்கமோடு சொல்லுகின்றார்.. பொருத்தமான கல் துண்டுகள் கிடைக்காமல் போகும் போது அதற்குப் பொருந்துகின்ற பழையது போலவே தோற்றம் தரக் கூடிய கற்களை அதே வேலைப்பாடுகளுடன் பொருந்துமாறு செய்து சேர்த்து விட்டிருக்கின்றனர்.

எல்லாமே அடுக்கப்பட்ட கற்கள்தான் சிமெண்டோ, சுண்ணாம்போ ஒட்டுவதற்கு பயன்படுத்தாத கட்டிடங்கள் 4 அடி உயரமே கொண்ட கோவில்கள் 25 வரை உள்ளன. உள்ளே சிறு சிறு சிவலிங்கங்கள்.
இவை எல்லாம் எதற்காக கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற காரணம் இருக்கிறதா என்று கேட்டேன். போரில் வென்றதும் அதன் நினைவாக கோவில்கள் கட்டப்படுவது வழக்கம் என்றார். மையமாக இருந்த ஒரு கோவில் அதுவாக இருக்கலாம் 4 அடி உயரமே கொண்ட கோவில்கள் ஏன் போரில் மாண்ட முக்கியப் பிரமுகர்களின் சமாதுகளாக இருக்கக் கூடாது. நேபாளில் காத்மண்டுவில் இது போன்ற கட்டிடங்கள் ஒரே இடத்தில் குவியலாக இருக்கின்றன ஆனால் அவை எல்லாமே சமாதுகள்தான். கோவில்கள் இல்லை என்றேன்.
நீங்க ரொம்ப புத்திசாலியாக இருக்கின்றீர்கள் உங்கள் சந்தேகம் என்னை குழப்பிவிட்டது என்றார்.
என்னுடையதும் கேள்விகள் தான் பதில்கள் இல்லை என்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *