ஊடறுவிற்காக கெகிறாவ ஸ_லைஹா(இலங்கை)
மார்சு; 8 இல் பெண் ஆளுமைகளை கௌரவப்படுத்தும் வகையில் பீனா அகர்வால் பற்றிய குறிப்பு
ஐக்கிய ராச்சிய மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பொருளியல் சூழல் அபிவிருத்திக்கான பேராசிரியர். டெல்லி இந்திய பொருளியல் வளர்ச்சி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர்.‘A Field of One’s Own’பல விருதுகளை வென்ற இவரது பிரசித்தமான நூலாகும். இந்தியாவின் பொருளியலாளராக இந்தியாவின் அபிவிருத்தி, கிராமப்புற வாழ்க்கைகள், வறுமை நிலை, சமத்துவமின்மை, பெண்களது சொத்துரிமைகள் பற்றி அதிகம் கவனத்தைச் செலுத்தியவரும் கூட. டெல்லியிலும், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்திலும் கற்றவர். எட்டு நூல்கள் எழுதியிருக்கிறார். 2002 இல் அபிவிருத்திக் கற்கைக்காக பங்களிப்பு நல்கியமைக்கு மால்கம் ஆதிசேஷ்யா விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர், விவசாயப் பொருளாதாரத்தில் ஆற்றிய பங்களிப்புக்காக 2005இல் ரமேஷ் சந்ரா அகர்வால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2008 இல் இந்திய இலக்கியத்துக்கும், கல்விக்கும் இவராற்றிய தொண்டுக்காக பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. ‘மொன்சூன்’ அவரது கவிதைத் தொகுப்பு. சிறு வயதில் ராஜஸ்தானிலுள்ள தன் பாட்டி வீட்டில் தங்கியிருக்கும் அற்புதமான நாட்களை அடிக்கடி நினைவுகூறுகிறார். அந்தக்காலங்களே பால் ரீதியிலான சமத்துவமின்மை, இன ரீதியிலான சமத்துவமின்மை பற்றி அறிகிற வாய்ப்பைத் தனக்குத் தந்ததாக கூறுகிறார் அகர்வால்.