வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் சிறைக்கைதிகள்

 தானிஷ், சவூதி

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் சிறைக்கைதிகள்: எகிப்தில் கொடூரம்!

எகிப்தின் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் பெண்கள் சிறைகளில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் அறிக்கையினை மனித உரிமை கள் அமைப்பு  வெளியிட்டுள்ளது.
எகிப்தின் முந்தைய முஹம்மத் முர்சியின் ஆட்சியினை இராணுவம் கவிழ்த்ததைத் தொடர்ந்து, எகிப்து  முழுவதும் கலவரங்களும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்தப் போராட்டங்களில் பங்கு கொள்பவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருப்பது  குறிப்பிடத்தக்கது
 
இவ்வாறு, ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிராக போராடிய 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது அரசுக்கு எதிராக போராடியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையிலடைக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அல் அஸார்  (Al-Azhar)  பல்கலைகழக மாணவர்கள் என்பது குறிப்படத்தக்கது. மேலும், அந்த சிறைவாசிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் அடங்கும்.

இவ்வாறு மாணவர்களையும் முதியவர்களையும் குற்றவியல் சட்டம் அல்லாது சிறைபிடிப்பது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சிறையிலடைக்கப்பட்ட போராட்ட கைதிகளில் பெண்கள் மீது பல்வேறுவிதமான வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக அறிக்கைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 இது குறித்து எகிப்திய பெண்கள் பாதுகாப்பு மையத்தின் குழுக்கள்  “எகிப்த்திய  ராணுவத்தினர் சிறைபட்டிருக்கும் பெண்களின் மீது தடி அடி நடத்துகிறார்கள். அந்தப் பெண்களின் தலை முடிகளை பிடித்து இழுத்து துன்புறுத்துகிறார்கள். மேலும் அந்தப் பெண்களின் ஆடைகளை கிழித்து அவர்களின் அந்தரங்க இடங்களின் மீது கை வைக்கிறார்கள். காவல் நிலையத்தில் சோதனை என்ற பெயரில் ஆடைகளைக் களைந்து மறைவான இடங்களில் கை வைத்து சோதனை செய்கிறார்கள். சோதனை முடிந்த பிறகு Al-Qanater சிறைச்சாலையில் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டு அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுடன் அந்தப் பெண்களை அடைக்கிறார்கள். அக்குற்றவாளிகள் மூலமும் அந்தப் பெண்களுக்கு ஆபத்து நேருகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளன.
 

வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் பெண் சிறைக்கைதிகள்: எகிப்தில் கொடூரம்!

பிரித்தானிய – அரபு கூட்டமைப்பின் கீழுள்ள மனித உரிமை  அமைப்புற்கு இவ்வாறு சிறையிலடைக்கப்பட்டுள்ள போராட்ட கைதிகளின் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து அதிகமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த மனுக்களில் 12 மாணவர்களும் எகிப்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் சிறையில் அடைக்கப்பட்ட பெண்கள் மீது வன்முறை நடத்தப்படுவதாகவும் பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இத்தகவல்களை மனித உரிமை  அமைப்பு  வெளியிட்டதைத் தொடர்ந்து எகிப்து Deputy Interior Minister for Western Cairo Brigadier Ali Damardash,   “இந்தத் தகவல்கள் முழுக்க முழுக்க பொய்யானது. இந்தத் தகவலை யுழுர்சு நிறுவனம் ஏன் பரப்புகிறது என்பது விளங்கவில்லை. எகிப்திய அரசு சிறைவாசிகளிடம் சர்வதேச மனித உரிமை சட்டத்தை பின்பற்றுவதில் எக்குறைபாடும் வைக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.
 
ஆனால் மனித உரிமை  அமைப்பு  உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற புகார்கள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வேண்டி சிறைக்குள் செல்ல ராணுவத்திடம் அனுமதி கோரிய போது அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி   http://inneram.com/news/middle-east/5148-female-prisoners-in-egypt.html


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *