ஆழியாளின் கருநாவு
இனங்களின், மொழிகளின், தேசங்களின், மீதான ஒடுக்குமுறைகள் ஏதோவொரு வழியில் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த பிரக்ஞை உணர்வே பெண்ணின் பாத்திரமானது பல புதிய பரிமாணங்களுடன் நோக்கப்படுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளதுடன் பெண்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது.
அத்துடன் விடுதலைப்போராட்டங்கள் வன்முறையாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில் இலக்கியம் வாழ்வின் ஆதாரங்களைச் தேடிச்செல்லக் கூடிய சூழ்நிலையாக உள்ளது. அந்த வகையில் கருநாவு பெண்ணின் ஆத்மார்த்தமான குரல்களைப் பல்வேறு வடிவங்களில் கேட்கமுடிகிறது பெண்களின் கனவுத்தேசத்தின் விடுதலையிலும் அனைவரும் சமமாக வாழக்கூடிய புதிய விடியலிலும் ஆழியாளின் கவிதைகள் ஆழ்ந்து நிற்கின்றன. அக்கவிதைகள் கருநாவு என்ற தொகுப்பினுடாக வெளிவந்துள்ளது
தொகுப்பை பெற்றுக் கொள்ள
MATTRU
No 101,H Blook
MUthumariaman Kovil St
M:M:D:A Colony Arummbakkam
Chennai 6000 106
or
aazhiyaal@hotmail.com