சந்தியா யாழ்ப்பாணம்
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் காணாமல் போனவர்கள் ஒன்று கூடி தங்கள் உறவுகளை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க போராட்டம் நடாத்தி வருகின்றனர் இந்தப் போராட்டமானது நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பதாக நடைபெறுகின்றது.இந்தப் போராட்டத்தில் உறவுகளை இழந்தவர்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க தங்களது ஆதங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.சிறுவர்கள் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் என உறவுகளை இழந்தவர்களின் அழுகைச் சத்தத்தினாலும் ஓவென்ற கதறல் சத்தம் வானம் பிளந்த நிலையில் உறவுகளின் கண்ணீர் போராட்டமே சோக மயமாக உருவெடுத்துள்ளது. இதனால் யாழ்.நல்லூர் பகுதி அதிர்ந்தது.
இந்த போராட்டங்களில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இரா.சம்பந்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், மாவை சேனாதிராசா உள்ளிட்ட பல தலைவர்கள் போராட்டத்தில் கல்நது கொண்டனர்.இந்தநிலையில், மக்களின் போராட்டங்களை தடுத்து நிறுத்தி கடும் சோதனை நடவடிக்கைகளை இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள் மேற்கொண்டு வருவதோடு, ஆங்காங்கே மக்களை அச்சுறுத்தும் செய்ற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் கமரூன், இன்று நண்பகல் கொழும்பிலிருந்து விசேட விமானம் மூலம் பலாலியைப் பிற்பகல வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் பிரிட்டன் ஊடகவியலாளர்கள் 30 பேர் வரை வருகை தருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. இதன் பின்னர் வலி. வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்துக்கும் அவர் பயணம் மேற்கொள்வார் என்ற தகவலையறிந்து காணாமற் போனோர் குடும்பங்கள் பெண்கள் சிறுமிகள் ஆண்கள் எனஅந்த பெண்களின் அழு குரலால் என் கண்கள் குளமாகியின.