-ரொமேஷ் மதுஷங்க
கடந்த 10 மாதங்களில் வடக்கில் 24 பெண்கள் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக சந்தேக நபர்களை குற்றம் சாட்டுவதிலும் கைது செய்வதிலும் பொலிஸார் பாராமுகமாக இருப்பதாக வடக்கிலுள்ள பெண்கள் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆறு சந்தர்ப்பங்களில் மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டும் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.
பொலிஸாரின் அசமந்தப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் பாரிய அநீதி இழைக்கப்படுகின்றன என அவர்கள் கூறியுள்ளனர்.
இவ்வாறான 24 சம்பவங்களில் 11 பாதிக்கப்பட்ட பெண்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். மன்னார் மாவட்டம் தவிர்ந்த சகல மாவட்டங்களிலிருந்தும் பலாத்காரம் மற்றும் கொலைச் சம்பவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுபற்றி யாழ்ப்பாண பொலிஸாரிடம் விசாரித்தபோது தமக்கு 6 புகார்கள் மட்டுமே கிடைத்ததாகவும் நான்கு குற்றச் செயல்கள் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் நிறுத்தப்பட்டும் உள்ளதாக அவர்கள் கூறினர்.
ஏனைய சம்பவங்கள் தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
ஆயினும் அதிகாரம் வாய்ந்த குழுக்களின் அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பத்தினர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை பழிவாங்கல்களுக்கு பயந்து விலக்கிக் கொள்வதாக பெண்கள் அமைப்புகள் கூறின.
http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/89152-10—24—-.html