மாதவி ராஜ் (அமெரிக்கா)
போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தற்போது சிறுவர்கள் வன்முறைகளுக்கு ஆளாவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒவ்வொரு நாளும் மூன்று தொடக்கம் ஐந்து சிறார்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுகின்றனர்.
2011ல் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் மீறல்கள் தொடர்பில் இலங்கை காவற்துறையில் மொத்தம் 2000 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில்2012ல் இது தொடர்பான முறைப்பாடுகள் 5000 வரை அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட
TIMEசஞ்சிகையில் Anjala Trepan எழுதியுள்ள கட்டரையில் தெரிவித்துள்ளார
போரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் தற்போது சிறுவர்கள் வன்முறைகளுக்கு ஆளாவது நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஒவ்வொரு நாளும் மூன்று தொடக்கம் ஐந்து சிறார்கள் வரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுகின்றனர்.
2011ல் 1463 சிறார்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஆனால் இதே எண்ணிக்கை 2012ல் 1759 ஆக உயர்ந்ததாகவும் காவற்துறையின் அதிகாரபூர்வத் தகவல்களிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளதாகவும் யுனிசெப் குற்றம் சுமத்தியுள்ளது.
2011ல் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் மீறல்கள் தொடர்பில் இலங்கை காவற்துறையில் மொத்தம் 2000 வரையான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 2012ல் இது தொடர்பான முறைப்பாடுகள் 5000 வரை அதிகரித்துள்ளதாக காவற்துறை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பாலியல் வன்முறைகள் தவிர சிறுவர்கள் மீதான ஏனைய வன்முறைகள், கடத்தல்கள், காணாமற் போதல்கள் போன்ற பல்வேறு முறைப்பாடுகள் 2011, விட 2012ல் 64 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் சிறுவர் உரிமை தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கின் மூலம் தற்போது இவ்வாறான மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு மேற்கொள்ளப்படுவது அதிகரித்துள்ளதாகவும், இலங்கையில் குடும்ப ஒற்றுமை என்பது வலுவாகப் பேணப்படுவதால் சிறுவர்கள் மீதான மீறல்கள் தொடர்பாக காவற்துறை நிலையங்களில் முறைப்பாடு செய்வது மிகக் குறைவாக இருப்பதாகவும், வன்முறைகள் தொடர்பாக குறிப்பாக முறையற்ற பாலியல் மீறல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வது மிகவும் குறைவாக உள்ளதாகவும் இலங்கையில்; பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் நிறுவுனரான அலியா விற்னி – ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்டு 2009ல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட யுத்தத்தின் விளைவால் இவ்வாறான சிறுவர் வன்முறைகள் ஏற்படலாம். இவ்வாறான சிறுவர்கள் மீதான வன்முறையானது கலாசாரப் பிறழ்வுகள் போன்ற கலாசார சார் குறைபாடுகளால் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இவற்றின் காரணமாக வன்முறைகளும், மீறல்களும் தொடர்ந்தும் ஏற்படுகின்றன” என இலங்கை;கான யுனிசெப் வதிவிடப் பிரதிநிதி றெசா ஹொசைய்னி தெரிவித்துள்ளார்.
குடும்பத்தில் ஏற்படும் வறுமைநிலை காரணமாக வெளிநாடுகளில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை தேடிச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் பெண்களின் பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களிடம் குறிப்பாக வன்முறைகளில் ஈடுபடும் ஆண் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் போது சிறுவர்கள் பாலியல் ரீதியான வன்முறைகளுக்கு ஆளாகின்றனர். பிலிப்பைன்சுடன் ஒப்பிடும் போது அங்கு இலங்கையை போலவே பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புத் தேடிச் செல்கின்றனர். ஆனால் இலங்கையில் 100;;,000 மக்களுக்கு கிட்டத்தட்ட 17 சிறார்கள் இவ்வாறான வன்முறைக்கு ஆளாகும் அதேவேளையில், பிலிப்பைன்சில் 100,000 மக்களுக்கு 6 சிறார்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
“10 வயதான சிறுமி ஒருவர் ஒரு ஆண்டின் முன்னர் அவரது தந்தையாரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். இந்தச் சிறுமி இரவு நேரங்களில் பயங்கரக் கனவுகளைக் கண்டு திடுக்கிட்டு விழிக்கிறார். இந்தச் சிறுமி உடல், உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறுமியின் தாயார் வெளிநாடொன்றின் பணிப்பெண்ணாக உள்ளார். இவரது உறவினர்களும் இவரைப் பராமரிப்பதில் விருப்பங் கொள்ளாத நிலையில் தற்போது சிறுவர் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறுமிக்கு இதை விட வேறெந்த இடமும் பாதுகாப்பாக இருக்காது. இவரது தாயார் இலங்கை;கு திரும்பி வந்து தனது மகளைப் பொறுப்பெடுப்பார் என நாம் நம்புகிறோம்” என கொழும்பில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் சிறுவர் உளவியலாளரான எஸ்தர் ஞானகன் குறிப்பிடுகின்றார்.
“நான் முதன் முதலாக இலங்கை வந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான இளம் யுவதிகளைச் சந்தித்த போது இலங்கையில் பல சிறார்கள் இவ்வாறான மீறல்களுக்கு உட்படுகின்றனர் என்கின்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். முறையற்ற பாலியல் வன்புணர்வுகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களின் தாய்மார் வெளிநாட்டில் பணிபெண்களாக உள்ளனர் என்பதை நான் அறிந்துகொண்டேன். இவ்வாறான சிறார்கள் குடிபோதைக்கு அடிமையான அவர்களது தந்தையர்கள் மற்றும் வளர்ப்புத் தந்தையர்களின் பாதுகாப்பின் கீழ் வளர்வதால் இவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இது தொடர்பில் விழிப்புணர்வு பெற்ற சிறுமிகள் தமக்கு நிகழ்ந்த வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடு செய்யும் போது அவர்கள் பல ஆண்டுகள் வரை நீதிமன்றத்திற்கு சென்று வரவேண்டியுள்ளது” என நிறுவுனரான அலியா விற்னி – ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறார்களுக்குப் பாதுகாப்பளிப்பதுடன், இவர்கள் சந்தித்த வன்முறைகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்கான பணியை செய்வதாக யுனிசெப் தெரிவித்துள்ளது. “சிறார்கள் மீதான வன்முறைகளை விசாரணை செய்து நீதி வழங்குவதற்கு பல ஆண்டுகள் செல்கின்றன. குற்றமிழைத்தவர்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்கின்றனர். ஆனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிப்பு விடுதிகள் வாழவேண்டிய நிலை இலங்கையில் உள்ளது” என இலங்கைக்கான யுனிசெப் வதிவிடப் பிரதிநிதி றெசா ஹொசைய்னி தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரச்சினையைச் சந்திப்பதற்கு அதிகாரிகள் ஆர்வங் காட்டுகின்றனர். இலங்கை முழவதும் தற்போது சிறார்கள் மற்றும் பெண்களுக்கான முறைப்பாடுகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு 36 பாதுகாப்புப் பிரிவுகள் உள்ளன. சிறார்கள் வன்முறைகளை ஆராய்ந்து தீர்ப்பைக் கூறுவதற்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று கொழும்பின் புறநகர்ப் பகுதியிலும் பிறிதொரு சிறப்பு நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் இலங்கையில் சிறுவரகள்; சந்திக்கும் வன்முறைகள் மிக அதிகமாக உள்ளன. தற்போதும் இவை தொடர்பான வழக்குகள் முடிவின்றி நிலுவையிலுள்ளன. இச்சிறுவர்களுக்கான பராமரிப்பு வேலைகளையும் அவர்களது உளவியல் ரீதியான பாதிப்புக்களையும் சரி செய்வதற்கு நாம் முயல்கிறோம் என யுனிசெப் வதிவிடப் பிரதிநிதி றெசா ஹொசைய்னி தெரிவித்துள்ளார்.