ந.தேவகிருஸ்ணனால் இந்துயா வெளியீட்டகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
சேனைப்புலவில் மனித மிருகத்தால் பாலியல் வன்புணர்வு செய்து சிதைக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டம்.
நெடுங்கேணி பிரதேசத்தில் சேனைப்புலவு கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை 14.05.2013 அன்று பாடசாலை விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 07 வயது பாடசாலை மாணவி மனித மிருகம் ஒன்றினால் பாலியல் உயிருக்காகப் போராட்டிக் கொண்டிருக்கிறாள்.
சம்வம் நடந்து இதுவரை காலமும் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கயவன் கைது செய்யப்படவில்லை என்பது மக்கள் மத்தியில் வேதனையையும் விரக்தியையும் தருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தரப்புக்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது கவலைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்.
அதிகாரிகளின் மெத்தனப்போக்கும்இ அசண்டையீனமான பேச்சுக்களும், அதிகாரத் தோரணையான எச்சரிக்கைகளும் இந்த மாணவிக்கு நடந்த அநீதியை மூடி மறைப்பதற்கான செயலாகவே காணப்படுகிறது. தடையங்களை அழித்தல்இ மிரட்டல்கள் மூலம் நீதி கேட்பவர்களை பயமுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் மோசமான ஜனநாய மறுப்புக்கள் நடந்தேறி வருகின்றது.
நாடாளவிய ரீதியில் தொடர்ச்சியாக இவ்வகையான சம்பவங்கள் அதிகரித்த வண்ணமுள்ள நிலையில் இப்படியான கோர நிகழ்வுகளை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. எனவே குற்றவாளிகளை சட்டத்தின் முன் அடையாளப்படுத்துகின்ற விடயத்தில் துரிதமான செயற்பாடுகளை சம்பந்தப்பட்ட தரப்புக்கள் செய்யாதவிடத்து சிறுவர்களுக்கு எதிரான வன்முறையையும் துஷ்பிரயோகத்தையும் தடுக்க முடியாது என்பதை அனைவரும் உணருதல் வேண்டும்.
எனவே இம் மாணவியை வன்புணர்வு செய்து சிதைத்த கயவனை கண்டறிவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கண்டித்தும் அந்த பாடசாலை மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்பதை வற்புறுத்தியும் நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு முன்பாக திங்கட்கிழமை (20.05.2013) காலை 10.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி கேட்கும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்து மக்களையும் அணித்திரளுமாறும்இ கட்சி பேதமின்றி அரசியல் கட்சிகள், அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்இ பொது அமைப்புக்கள்இ பெண்கள் அமைப்புக்கள்இ சமுக ஆர்வலர்கள் என அனைவரையும் அணிதிரண்டு இந்த மக்கள் போராட்டத்திற்கு வலுவூட்டுமாறு வேண்டுகிறோம்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளுக்கு நீதி வழங்கு!
குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து!
உண்மையை மூடி மறைக்காதே!
காவல்துறையே குற்றங்களுக்கு துணை போகாதே!
மாணவியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்கு!
நேற்று நெடுங்கேணி சேனைப்புலவு! நாளை உங்கள் விட்டு வாசலில் கூட நடக்கலாம்….
வாருங்கள், ஒன்று சேருங்கள்! குரல் கொடுப்போம் நீதிக்காக…
சேனைப்புலவு மக்களும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு
https://www.facebook.com/profile.php?id=100002094312671