5 வயது சிறுமி மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் – Rape of 5-year-old sparks protest in India’s capital

தற்போது 5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள நிலையை பார்க்கும்போது வக்கிர புத்தி படைத்த கயவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. இவர்களுக்கு சரியான அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட வேண்டுமானால் சமீபத்தில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை மேலும் கடுமையாக்கப்பட வேண்டியது அவசியம்.

 A five-year-old rape victim is moved to the All India Institute of Medical Sciences hospital from Swami Dayanand hospital for treatment in New Delhi, India, April 19, 2013. REUTERS/Adnan Abidi

இவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக பரிந்துரை கூட்டத்திற்கு உள்துறை மந்திரி ஏற்பாடு செய்ய வேண்டும். இதைப்போன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபடும் காட்டு மிராண்டிகளுக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் சரியான தண்டனையாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள்:
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என ஐ.நா. சபையின் கண்காணிப்பில் இயங்கி வரும் ”யூனிசெஃப்” (ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்) கூறியுள்ளது.
இது தொடர்பாக யூனிசெஃப் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கடந்த சில நாட்களாக டெல்லியில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை பார்க்கையில் வீதிகளிலும், பள்ளிகளிலும், பணியிடங்களிலும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக துரித நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.

தற்போது டெல்லி ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடி வரும் 5 வயது சிறுமி பூரண நலமடைய வேண்டும் என்ற அவரது பெற்றோரின் பிரார்த்தனையில் யூனிசெஃபும் பங்கேற்கிறது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, ஆண்டுதோறும் இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இலக்காகின்றனர். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுமிகள் என தெரிய வந்துள்ளது.

பச்சிளம் தளிர்கள் உள்பட சுமார் 7200 சிறுமிகள் ஒவ்வொரு ஆண்டும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். இதைவிட பன்மடங்கு சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வராமல் புகார்களாக பதிவு செய்யப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன. டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் சம்பவத்திற்கு பிறகு அரசு கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தி இருப்பினும், உரிய முறையில் பிரயோகப்படுத்தாத வரை இந்த சட்டங்களினால் பெண்களுக்கு பாதுகாப்போ, நிவாரணமோ அளிக்க இயலாது.

A five-year-old rape victim is moved to the All India Institute of Medical Sciences hospital from Swami Dayanand hospital for treatment in New Delhi, India, April 19, 2013. REUTERS/Adnan Abidi

5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள கொடுமை சட்டங்களை சரியான முறையில் அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கட்டாய நிலையை தற்போது எற்படுத்தியுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துடெல்லி காந்தி நகர் பகுதியில் 5 வயது சிறுமி மிருகத்தனமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ”டுவிட்டர்” வலைப்பக்கத்தில் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளதாவது:-  ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி  பாலியல் பலாத்காரம் சம்பவத்துடன் இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என நான் கருதினேன்.

ஆனால், தற்போது 5 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள நிலையை பார்க்கும்போது வக்கிர புத்தி படைத்த கயவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. இவர்களுக்கு சரியான அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட வேண்டுமானால் சமீபத்தில் பாலியல் வன்முறை தடுப்பு சட்டத்தை மேலும் கடுமையாக்கப்பட வேண்டியது அவசியம்.

இவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பாக பரிந்துரை கூட்டத்திற்கு உள்துறை மந்திரி ஏற்பாடு செய்ய வேண்டும். இதைப்போன்ற மிருகத்தனமான செயல்களில் ஈடுபடும் காட்டு மிராண்டிகளுக்கு மரணத்தை தவிர வேறு எதுவும் சரியான தண்டனையாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.

Incident revives memories of fatal December rape

* Protesters demand better protection for women, girls

NEW DELHI, April 19 (Reuters) – The alleged rape of 5-year-old girl by a male neighbour in the Indian capital New Delhi triggered a protest march on Friday to a city hospital by her relatives and political activists, reawakening concerns about safety for women and girls

Despite a public holiday, several hundred people gathered outside a municipal hospital in eastern Delhi, where the girl was admitted for treatment on Thursday

They demanded better law enforcement and chanted slogans on gender rights, television reports showed

The girl’s rape, which left her in a critical condition, revived memories of the brutal gang rape by five adult men and a teenaged boy of a 23-year-old physiotherapy student on a bus on Dec. 16 in New Delhi. That woman died of her injuries.

B.N. Bansal, a doctor from the Swami Dayanand Hospital, told reporters, that the young victims had undergone an operation.

“The next 48 hours will be crucial for her.

The girl, whose parents work as labourers and live in a slum in the outskirts of Delhi, went missing from home on April 15, according to Manish Sisodia, an official of the Aam Aadmi Party which organised Friday’s protest

She was found with bruise marks on her body in the suspect’s house in a semi-conscious condition on Thursday by police after her parents had registered a complaint, media reports said

The suspect, who fled, allegedly held the girl hostage for three days during which he raped and tortured her.

 

Prime Minister Manmohan Singh was deeply disturbed by the incident, a statement from his office said

The unprecedented protests by thousands of people across India after the December assault had forced Singh’s government to pass tougher laws to fight gender crimes in March. But activists on Friday said the laws were not enough to deter sex offenders in India’s largely patriarchal societies. “If you thought just bringing in a new law will stop crimes, your are wrong. They will reduce, but won’t stop. You need community policing to stop these crimes,” activist Kiran Bedi told an Indian TV channel. (Reporting By Satarupa Bhattacharjya and Sankalp Phartiyal; Editing by Michael Roddy)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *