லீனா மணிமேகலையின் மூன்று படங்கள் திரையிடப்பட்டன. செங்கடல், பெண்ணாடி, மற்றும் Ballad of Resistance செங்கடலில: எங்கே புலிஎதிர்ப்பு உள்ளது என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது. செங்கடலை இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று படங்களிலும் என்னை ஆட்கொண்ட படம் பெண்ணாடி மிகவும் அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. கதை ,கவிதை காட்சிகள் அனைத்தும் அற்புதம்.
சமூகத்தின் மனசாட்சியைத் தொடர்ந்து தொந்தரவு செய்வது தான் கலையின் தலையாயப் பணி என்று நான் நம்புகிறேன். திரைப்படம், கவிதை என கலையின் எல்லா வடிவங்களும்“எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருக்கிறது” என்று நமக்கு சொல்லப்படும் போலியான அமைதியை கெடுக்கிற கலைஞனின் அரசியல் நடவடிக்கைகள் தாம் என்று கூறும் லீனாவின் பணி தொடர எமது வாழ்த்துக்கள்.