– யசோதா (இந்தியா)
SEXISM = பாலழுத்தம் – பால் வகைக் கவனம்
முதன் முதலாக செக்சிசத்திற்கும் போர் அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் என்ன என்ற நோக்கில் அமைதி பற்றிய ஆய்வாளர்கள் மத்தியில் இந்த தலைப்பு விவாதிக்கப்பட்டது. அமைதிப்பணி அமைப்புக்களுக்கும் செக்சிசத்துக்குமான தொடர்பினைக் கேள்விக்குள்ளாக்குவது இன்னும் பொருத்தமாக இருக்குமென ஓர் பெண் ஆய்வாளர் கருத்து தெரிவித்தார். அமைதி ஆய்வாளர்கள் மீதான பெண்ணியச் சார்பினர் கொண்டுள்ள அடிப்படை பாhவையை இக்கருத்து தெரிவிக்கின்றது. |
பெண்களும், பெண்களின் கருத்துக்களும் புறக்கணிக்கப்பட்ட இன்னுமொரு துறையாகவும் இதை ஆண் அமைதி ஆய்வாளர்களும் அமைப்புகளும் இது பற்றிக் கவலைப்படுவதுமில்லை அதேபோல் பெண்களை தொடர்புபடுத்தி, பார்ப்பதுமில்லை எனவே அமைதி ஆய்வு அரசியல்வாதிகள் பெருந் தலைவர்கள் என்று அவர்களுடனே தங்கியும் விடுகின்றது இந்த செக்சிசம்.
போரின் பின்பு அதாவது 1919ம் ஆண்டு அமைதிக்கும் சுதந்திரத்திற்குமான சர்வதேசப் பெண்களமைப்பு (WILPF) பரீஸில் நடந்த அமைதி மகாநாட்டிற்கு ஓர் புதிய யோசனையை அனுப்பிவைத்தது. இதன் முதலாவது தலைமைச் செயலாளர் 1946 இல் அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றவர் . நோபல் ஆய்வுநிலையத்தின் முகாமையாளர் யான் குன்னர் பின்வருமாறு கூறினார். 1919 இல் WILPF பெண்கள் அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்ட பிரேரணை அமைதி பற்றி கதைக்கும் மகாநாட்டினால் ஏற்றுக்கொண்டிருப்பின் புத்திசாலித்தனமாகவிருந்திருக்கும் ஆனால் எண்ணிக்கையில் குறைவான ஆண்களே இந்தப் பிரேரணைக்கு செவி சாய்த்தனர். ஏனெனில் இது பெண்களினால் கொண்டு வரப்பட்ட பிரேரணையாயிற்றே அன்றைய நிலைமை பெண்களின் மீது கசப்பானதாகவும் பழிவாங்கல் தன்மை நிநைதிருந்ததும் உண்மையே. அதற்கும் மேலாக இது பெண்களின் ஆலாசனை என்ற நிலையும் நிலவியது. எமது ஆண் தலைமைத்துவ உலகில் பெண்ணிடம் இருந்து வரும் பிரேரணைகள் மிக அரிதான பலம் குறைந்த கருத்தாகவே பார்க்கப்படுகிறது. சில வேளைகளில் ஆண்கள் தங்கள் அருள்பாலிக்கும் புன்னைகைகளை அடக்கிக் கொள்வது புத்திசாலித்தனமாகவிருக்கும் என்று நினைக்கிறார்கள் போல்.
பெண்களமைப்பிற்கும் அமைதி அமைப்புகளிற்கும் இடையிலான இடைவெளியின் இணைப்பு இன்று வரை நீடிக்கிறது. அதே போல் உயர்கல்விச் சமூகத்திற்கும், புத்திஜீவிச் சமூகத்திற்கும், ஆய்வுச் சமூகத்திற்கும பெண்களமைப்புகளுக்கும் இடையில் பாரதூரமான பிளவு நிலவத்தான் செய்கிறது. இப்பிளவு நிலையால் ஆய்வுகளின் எந்த அடிப்படைக் காரணிகளையும் பெண்ணியச்சார்பு அறிவு நோக்குடனும், தங்கள் கொள்கைகளுடனும் மாற்று நடவடிக்கைகளுடனும் பெண்ணிய ஆய்வாளர்கள, பெண் அமைதி ஆய்வாளர்கள் எடுத்துக் கொள்ள தீர்மானித்தனர். ஆயினும் இவைகள் இன்று வரை கவனத்திற்கே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை இதனால் ஆண் தலைமைத்துவத்தினர் உண்மையான அறிவுபூர்வமான தகவல்களைப் பெறாதததுடன் நடைமுறையில் பயன்தரக்கூடிய கொள்கைகளையும் உருவாக்கும் தன்மையை இழந்து விடுகின்றனர் என பெண்ணியவாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இன்று பால்வகைக் கவனம், பாலழுத்தம் போன்றவைகள் சகல துறைகளிலும் முன்னரைவிட அதிகமாக மேலோங்கியுள்ளதை நாம் நடைமுறையில் காண்கிறோம். இதனால் சமூகத்தில் பல இனங்கள் இருப்பதைப்போல் இங்கும் பெண் மீது அடக்குமுறைகள் அதிகரிக்கும் போது பெண், ஆண் என்ற சமூகம் தனித்து உருவாக கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதாக ஆய்வாளர்களின் கருத்துக்கள் எடுத்துக்காட்டுகின்றன.